முன்பதிவு முடிந்ததாம் ஆனால், தயாரிப்புகள் இனிமே தானாம்.!

Written By:

இந்தியாவில் ரூ.251க்கு ஸ்மார்ட்போன் விற்பனை செய்வதாக கூறி அவநம்பிக்கை மற்றும் சந்தேகத்தை கிளப்பியிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் நிறுவனமான ரீங்கிங் பெல்ஸ் 25 லட்சம் முன்பதிவுகளை பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளது.

முன்பதிவு முடிந்ததாம் ஆனால், தயாரிப்புகள் இனிமே தானாம்.!

அந்நிறுவனத்தின் திட்டங்களை இன்னும் சில தினங்களில் விரிவாக அறிவிப்பதாக தெரிவித்துள்ளதோடு முன்பதிவு செய்யப்பட்டுள்ள கருவிகளின் தயாரிப்பு பணிகள் விரைவில் துவங்கி, ஏப்ரல் மாத இறுதிக்குள் அவை விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு முடிந்ததாம் ஆனால், தயாரிப்புகள் இனிமே தானாம்.!

முன்பதிவு செய்யப்பட்டதற்கான பணம் இன்னும் தனக்கு வந்து சேரவில்லை என்றும், கருவிகளை விநியோகம் செய்யும் வரை அந்த பணம் தனக்கு தேவையில்லை என அந்நிறுவனத்தின் மோஹித் கோயல் தெரிவித்துள்ளார். 'எனது வியாபார திட்டங்களை இன்னும் இரண்டு தினங்களில் அறிவிப்பேன், எங்களது இலக்கான 25 லட்சம் முன்பதிவுகளை நாங்கள் அடைந்துவிட்டோம். கருவிகளை ஏப்ரல் மாத இறுதியில் விநியோகம் செய்திடுவோம், இதற்கென நொய்டா மற்றும் உத்தர்கண்ட் பகுதிகளில் தயாரிப்பு ஆலைகளை கட்டமைப்போம்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்பதிவு முடிந்ததாம் ஆனால், தயாரிப்புகள் இனிமே தானாம்.!

நொடிக்கு 6 லட்சம் பேர் வீதம் பயன்படுத்தியதை தொடர்ந்து அந்நிறுவனத்தின் இணையதளம் 'க்ராஷ்' ஆனதும் குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த ஃப்ரீடம் 251 ஸ்மார்ட்போனை ஆன்லைனில் மட்டுமே வாங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கருவியின் விலை ரூ.251 கூடுதலாக விநியோக கட்டணமாக 40 ரூபாயும் சேர்த்து மொத்தம் இந்த கருவியின் விலை ரூ.291 ஆகும். இதுவரை முன்பதிவு செய்யப்பட்ட பணம் மட்டும் ரூ.7.25 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :
4 ஆதாரங்கள் : ஃப்ரீடம் 251 ஒரு பெரிய 'ஏமாத்து வேலை'..?
இனி அரசாங்க அலுவகத்திற்கு போகவே வேண்டாம் - மோடி புதிய திட்டம்.!!

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Read more about:
English summary
25 lakh bookings, but cellphones yet to be made. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot