மார்ச் 2020 வரை இலவச வைபை வசதி தொடரும்: மத்திய அரசு முடிவு

|

கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்பது காந்தியடிகளின் நிலைப்பாடு. ஏனெனில், அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விவசாயம் அங்குதான் உள்ளது. கிராமங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும் என்பது பொதுக் கருத்துகளில் ஒன்று.

பாரத்நெட் திட்டத்தை அறிமுகம் செய்த மத்திய அரசு

பாரத்நெட் திட்டத்தை அறிமுகம் செய்த மத்திய அரசு

இதையடுத்து வேளாண் தொழில் மட்டும் அல்லாமல் அதி நவீன தொழில்நுட்பங்களும் கிராமங்களில் வளர வேண்டும் என்று உணர்ந்த மத்திய அரசு, கிராமங்களில் பிராட்பேண்ட் எனப்படும் அதிவேக இணைய சேவை அளிக்கும் "பாரத்நெட்' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு கிராமங்களையும் இணைய வலையத்துக்குள் கொண்டு வருவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கலாம் என்பது மத்திய அரசின் நம்பிக்கையாக திகழ்ந்தது.

பாரத் நெட் திட்டத்தின் முக்கிய நோக்கம்

பாரத் நெட் திட்டத்தின் முக்கிய நோக்கம்

ரூ.45,000 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட பாரத் நெட் திட்டத்தின் முக்கிய நோக்கம், 10 லட்சம் கிலோமீட்டரிலுள்ள 1.5 லட்சம் கிராமங்களுக்கான இணைய சேவையை தற்போதுள்ள சந்தை விலையைக் காட்டிலும் 75 சதவீத மலிவான விலையில் வழங்குவதாகவே இருந்தது. ஆனால் முதற்கட்டமாக இலவச சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

பாரத்நெட் மார்ச் 2020 வரை இலவசமாக நீடிக்கும்

பாரத்நெட் மார்ச் 2020 வரை இலவசமாக நீடிக்கும்

இந்த ஆண்டு இறுதியில் இலவசே சேவை நிறுத்தப்பட்டு கட்டண சேவையாக மாற்றப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்தியா முழுக்க கிராம பகுதிகளில் வழங்கப்பட்டுள்ள இலவச வைபை சேவையான பாரத்நெட் மார்ச் 2020 வரை வழங்கப்படும் என மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

ஆஹா., பழையத் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்த ஏர்டெல்ஆஹா., பழையத் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்த ஏர்டெல்

2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு வழங்க முடிவு

2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு வழங்க முடிவு

பாரத்நெட் ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க் மூலம் இதுவரை சுமார் 1.3 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு இலவச வைபை சேவை வழங்கப்படுகிறது. இலவச வைபை சேவையினை இந்தியா முழுக்க 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஊரக பகுதிகளை மேம்படுத்துவதற்கான வழி:

ஊரக பகுதிகளை மேம்படுத்துவதற்கான வழி:

பாரத்நெட் தி்ட்டத்தின் கீழ் சுமார் 48,000 கிராமங்களில் வைபை வசதி வழங்கப்பட்டுள்ளது.ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் கிரமாங்களாக மாற்றப்பட இருக்கின்றன. ஹரியானாவின் ரெவாரி மாவட்டம் டிஜிட்டல் கிரமாமமாக உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் கிராமங்கள் இணைக்கப்பட்ட கிராமமாக உருவாக்கப்படும்.
இங்கு பொதுமக்கள் மத்திய அரசின் செயல்திட்டங்களை இ சேவை மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் ஊரக பகுதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Free Wi-Fi to All Villages Connected via BharatNet Till March 2020 Says union minister

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X