தெறிக்கவிடும் டிஜிட்டல் இந்தியா: 4791 ரயில் நிலையத்தில் இலவச வை-பை.!

இலவச வை-பை இடங்கள்: மே மாதத்தில் மட்டும் இரண்டு கோடியே 35 லட்சம் பேர் 1606 ரயில்நிலையங்களில் இலவச வைபை வசதியை பயன்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொல்கத்தா, டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்

|

பாஜக அரசு மத்திய அரசின் தலைமை ஏற்ற பிறகு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நாடுமுழுவதும் நிறைவேற்ற பாடுபட்டு வருகின்றது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் பல்வேறு துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றது. ஜிடிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஏராளமான பொது மக்கள் பயன்பெறுவார்கள் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறி வருகின்றது.

தெறிக்கவிடும் டிஜிட்டல்இந்தியா: 4791 ரயில் நிலையத்தில் இலவச வை-பை.!

6 ஆயிரம் ரயில் நிலையங்களில் அதிவேக வை-பை சேவை இன்னும் 6-8 மாதங்களில் நிறுவப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், புதிதாக மேலும், 4791 ரயில் நிலைங்களில் இலவச வை-பை கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 6000 ரயில் நிலையங்களில் வை-பை:

6000 ரயில் நிலையங்களில் வை-பை:

ஆறு அல்லது எட்டு மாதங்களில் 6 ஆயிரம் ரயில் நிலையங்களில் அதிவேக வை-பை சேவை துவங்கப்படும். இதற்காக ஸ்மார்ட் திட்டங்களை ரயில்வேயில் நாங்கள் செயல்படுத்தி வருகின்றோம். இதற்காக தனி கவனம் செலுத்தி வருகின்றோம் என பியூஸ்கோயல் முன்பு தெரிவித்திருந்தார்.

4 ஆண்டுகளின் மாற்றம்:

4 ஆண்டுகளின் மாற்றம்:

ரயில்வே துறையில் அதிவே வை-பை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்துவதால் கூடுதல் கவனத்துடன் உற்சாமாக செயல்பட தயாராகி வருகின்றோம். இது 4 ஆண்டுகளில் மாற்றம் என பியூஸ்கோயல் தெரிவித்தார்.

ரயில் நேரத்தை தெளிவாக அறிய முடிகிறது:

ரயில் நேரத்தை தெளிவாக அறிய முடிகிறது:

ரயில்வே துறையில் ஜிபிஎஸ் வசதி அறிமுகப்படுத்திய பிறகு 73-74 சதவீதம் ரயில் வந்து செல்லும் நேரங்கள் தெளிவாக காணமுடிகின்றது. இதில் ரயில்வே அதிகாரிகளுக்கும் நேரம் மிச்சாமிகயுள்ளது. மேலும், ஜிபிஎஸ் போட்டுள்ளதால், ரயில் எங்கியிருந்து வருகின்றது. ரயில் தாமதம் உள்ளிட்டவைகளை தெளிவாக மொபையில் போனில் மூலம் அறிய முடிகின்றது.

விமானத்தை போல:

விமானத்தை போல:

ரயில்வே வாரிய தலைவர் அஸ்வனி லோகானி அறிவுறுத்தலின்படி, ரயில்களில் விமானங்களை போல, பயணிகள் ரயிலில் உணவு உட்கொண்ட பிறகு குப்பைகளையும் போட வசதியாக தொட்டிகளையும் வைக்கவும். அதில் இருந்து உணவு கழிவுகளை அப்புறப்படுத்தவும் ரயில்வே ஊழியர்கள் ஈடுபடுவார்கள். மேலும் கழிவறைகளையும் தூய்மையானதாகவும் வைக்கவும் ஊழியர்கள் ஈடுபத்தப்படுவார்கள் என்று அமைச்சர் பியூஸ்கோயல் கூறியுள்ளார்.

மணமகள் ஆதாரில் ஜாதிபெயர் இல்லை: திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்.!மணமகள் ஆதாரில் ஜாதிபெயர் இல்லை: திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்.!

இலவச வை-பை இடங்கள்:

இலவச வை-பை இடங்கள்:

மே மாதத்தில் மட்டும் இரண்டு கோடியே 35 லட்சம் பேர் 1606 ரயில்நிலையங்களில் இலவச வைபை வசதியை பயன்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொல்கத்தா, டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் அதிக மக்கள் இலவச வைபையை பயன்படுத்தி இருக்கின்றனர்.

ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.!ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.!

இலவச இணைய சேவை:

இலவச இணைய சேவை:

ஹவுரா ரயில் நிலையத்தில் மட்டும் ஒரே மாதத்தில் 4 லட்சத்து 90 ஆயிரம் பேர் ஸ்மார்ட்போன்கள் மூலம் இலவச இணைய சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

சராசரியாக அரை மணி நேரத்தில் ஒரு பயனாளி 343எம்பி டேட்டாவை பயன்படுத்துவதாக கணக்கிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்குள் எஞ்சிய 4791 ரயில்நிலையங்களில் இலவச வைபை திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று இந்திய ரயில்வேயின் டிஜிட்டல் பிரிவான ரயில்டெல் தெரிவித்துள்ளது.

கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி?கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி?

Best Mobiles in India

English summary
Free Wi-Fi Scheme Will Be Expanded At 4791 Railway Stations : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X