அப்படி போடு: தமிழ்நாட்டில் இலவச Wi-Fi சேவை: எந்தெந்த நகரங்களில் தெரியுமா? இதோ முழு விவரம்.!
கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி சார்ந்த பணிகள் என அனைத்திற்கு இணையம் தேவைப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த 2023-2024 நிதி ஆண்டிற்கான மாநில பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்படுகிறது. இதில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், சென்னை,கோவை, மதுரை, தாம்பரம், ஆவடி, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் விரைவில் மாநகராட்சி சார்பில் பொது மக்கள் பயன்படுத்தக்கூடிய Public WiFi சேவைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாகப் பொதுமக்கள் பயன்படுத்த வைஃபை வசதி அமைக்கப்படும் என்றும், இந்தியாவின் ஸ்மார்ட்போன் மற்றும் டிஜிட்டல் பயன்பாடு பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் இந்த புதிய வைஃபை பற்றிய அறிவிப்பு நிச்சயம் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இணையதளம் மூலம் பணப்பரிவர்த்தனை, வணிகம், பொழுதுபோக்கு வந்துவிட்டது. தற்போது இது இல்லாமல் மக்களின் வாழ்வு கடினமாக மாறும் சூழல் இருப்பதால் தமிழ்நாடு அரசு இந்த அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதவிர சென்னை,ஓசூர், கோவை போன்ற முக்கிய நகரங்களை டெக்னாலஜி நகரங்களாக மாற்றவும் தமிழ்நாட்டை உலகில் இருக்கும் முக்கிய ஐடி இடமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த அரசு அறிவித்துள்ள இந்த இலவச வைஃபை சேவை அனைத்து மக்களுக்கும் கண்டிப்பாக பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். அதேபோல் இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவை பல்வேறு நகரங்களில் வழங்கிவிட்டன. கூடிய விரைவில் இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை 4ஜி சேவையை கூட அறிமுகம் செய்யவில்லை. இருந்தபோதிலும் கூடிய விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனம் அனைத்து இடங்களிலும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது சமீபத்தில் வெளிவந்த தகவல் என்னவென்றால்,பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுக்க சுமார் 1 லட்சம் பகுதிகளில் 4ஜி சேவையை வெளியிட இருக்கிறது.
பின்பு இதற்காக ஒரு லட்சம் பகுதிகளில் டிசிஎல் உபகரணங்களைப் பயன்படுத்த பிஎஸ்என்எல் நிறுவனம் அனுமதி பெற்று இருக்கிறது. குறிப்பாக டிசிஎஸ் நிறுவனம் நீண்ட காலமாகவே பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்நிறுவனங்களின் கூட்டணியில் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க் பயன்படுத்த இருக்கிறது.

அதேபோல் தனியார் டெலிகாம் நிறுவனம் 4ஜி வெளியீட்டிற்கு இவ்வாறு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிஎஸ்என்எல் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் 4ஜி சேவையை வழங்க தற்போது நிர்வாக குழு ஒப்புதல் அளித்துவிட்ட போதிலும், 4ஜி நெட்வொர்க் வெளியீட்டிற்கு மேலும் சில காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications