ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா.. Netflix.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. இதோ லிஸ்ட்..
ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்கள் நெட்பிளிக்ஸ் சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. இப்போது இந்த தனியார் டெலிகாம் நிறுவனங்களின் நெட்பிளிக்ஸ் சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை மற்றும் அந்த திட்டங்களின் வேலிடிட்டி குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1299 prepaid recharge plan) தான் நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தா வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக ஜியோ ரூ.1299 திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data)உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.
ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டமும் (Jio Rs 1799 prepaid recharge plan) நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும்.
அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 64கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.
ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (airtel rs 1798 prepaid recharge plan) தான் நெட்பிளிக்ஸ் பேஸிக் சந்தா வழங்குகிறது. மேலும் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.1798 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.
அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.1798 திட்டம்.
வோடபோன் ஐடியா ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டம் ( Vodafone Idea Rs 1198 prepaid recharge plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 140ஜிபி டேட்டா கிடைக்கிறது. பின்பு நெட்பிளிக்ஸ் பேஸிக் சந்தாவை (Netflix Basic subscription) வழங்குகிறது இந்த திட்டம்.
அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அட்டகாசமான வோடபோன் ஐடியா ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), பின்ஞ் ஆல் நைட் (Binge All Night), டேட்டா டிலைட்ஸ் (Data Delights) உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.1599 ப்ரீபெய்ட் திட்டம் ( Vodafone Idea Rs 1599 prepaid recharge plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கிறது. பின்பு நெட்பிளிக்ஸ் பேஸிக் சந்தாவை (Netflix Basic subscription) வழங்குகிறது இந்த ரூ.1599 திட்டம்.
அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அட்டகாசமான வோடபோன் ஐடியா ரூ.1599 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), பின்ஞ் ஆல் நைட் (Binge All Night), டேட்டா டிலைட்ஸ் (Data Delights) உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








