இன்றும், நாளையும் இலவச சேவையை வழங்கும் நெட்ஃபிளிக்ஸ்.!
நெட்ஃபிளிக்ஸ் சேவையை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு இலவச வழங்குவதாக அறிவித்தது. அதன்படி இன்னும், நாளையும் இலவச சேவையை வழங்குகிறது.

கடந்த மாதம் ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் உள்ள தங்களுடைய பயனர்களுக்கு ஒரு வார இறுதியில் இலவச ஸ்ட்ரீமிங்கை வழங்குவதற்கான திட்டங்களை அறிவித்தது. அதன்படி டிசம்பர் 5 முதல் டிசம்பர் 6 வரை நெட்ஃபிளிக்ஸை இலவசமாக பயன்படுத்தலாம் எனத் தெரியவந்துள்ளது.

அதாவது கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டன. மக்களும் முடங்கி இருந்ததால், அவர்களின் பெரும்பான்மையான நேரத்தை ஓடிடி தளங்கள் ஆக்கிரமித்தன. ஓடிடி தளங்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவு, இயக்குநர்களையும், முன்னணி நட்சத்திரங்களையும் ஓடிடி தளத்தின் மீது கவனம் செலுத்த வைத்தது.

எனவே இதனால் தற்போது முன்னிணி நட்சத்திரங்கள் பலரும் ஓடிடி தளத்திற்காக பணியாற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு இலவச சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது.

குறிப்பாக இந்த இரண்டு நாட்களில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்கள், மிகப்பெரிய தொடர், விருது பெற்ற ஆவணப்படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை இந்தியாவில் உள்ள அனைவரும் பார்க்கலாம்.

மேலும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சார்பில் வெளிவந்த தகவலின்படிஇநாட்டில் உள்ள அனைவருக்கும் வார இறுதியில் இலவச சேவை வழங்குவதன் மூலம் எங்கள் சேவையின் தரம் குறித்து முழுவதுமாக பயனர்கள் அறிந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்பு நெட்ஃபிளிக்ஸில் உள்ள மிக அற்புதமான கதைகளை இந்தியாவில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு ரசிகர்களுக்கும் கொண்டு வர விரும்புகிறோம். அதனால்தான் நாங்கள் ஸ்ட்ரீம்ஃபெஸ்டை ஹோஸ்ட் செய்கிறோம் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
பயனர்கள் இந்த இலவச சேவையைப் பெற netflix.com/StreamFest என்ற தளத்தைக் காணவும். இதில் உங்கள் பெயர், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் மற்றும் கடவுச்சொல்லுடன் பதிவுபெற்று ஸ்ட்ரீமிங்கைத் தொடங்கலாம். குறிப்பாக இதற்கு கடன் அல்லது பற்று அட்டை அல்லது கட்ணம் எதுவம் தேவையில்லை.

மேலும் நெட்ஃபிளிக்ஸ் இப்பொழுது 'ஆடியோ மோடு (Audio Mode)' எனப்படும் பேக்கிரௌண்ட் பிளேபாக் அம்சத்தைத் தனது ஆண்ட்ராய்டு நெட்பிளிக்ஸ் பயன்பாட்டின் 7.9.1 வெர்ஷனில் சேர்த்துள்ளது. இந்த அம்சம் பயனர்களை விரைவில், அவர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் வீடியோவைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் பின்னணியில் கேட்க மட்டும் அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அம்சம் தொடர்பான சில செய்திகள் வெளியாகியுள்ளது. அதில், "வீடியோவை முடக்கி, உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளைக் கேட்பதன் மூலம் உங்கள் தரவைச் சேமிக்க முடியும்" என்றும், "வீடியோ முடக்கப்பட்ட நேரத்தில், நீங்கள் மற்ற விஷயங்களைச் செய்வதில் பிஸியாக இருக்கும்போது உங்கள் நிகழ்ச்சியை ஆடியோ மூலம் தொடர்ந்து கேட்கலாம்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications