இப்படி ஒரு FREE கொடுத்தா யார் விடுவா? Jio, Airtel கஸ்டமர்கள் போட்டி போட்டு ரீசார்ஜ் செய்யும் 3 பிளான்கள்!
சில தினங்களுக்கு முன்பு வரையிலாக இலவச நெட்பிளிக்ஸ் (Free Netflix) ஓடிடி சேவையை விரும்பும் பலரும் ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio) கஸ்டமர்களாக இருந்தன. ஏனென்றால் 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களின் வழியாக ஜியோ வாடிக்கையாளர்கள் இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவை பெற்று வந்தன.
இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பாக, ஏர்டெல் நிறுவனம் இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்கும் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இது முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கை என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஆகமொத்தம் தற்போது இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்கும் 3 திட்டங்கள் நமக்கு கிடைத்துள்ளன. அவைகளின் விலை நிர்ணயம் என்ன? இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவை தவிர்த்து இந்த 3 திட்டங்களும் வேறு என்னென்ன நன்மைகளை வழங்குகின்றன? இவைகளின் வேலிடிட்டி என்ன? மூன்றில் எது பெஸ்ட்? இதோ விவரங்கள்:
01. ஏர்டெல் ரூ.1,499 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்: இலவச நெட்பிளிக்ஸை சந்தாவை வழங்கும் ஏர்டெல்லின் புதிய திட்டம் ரூ.1499 ஆகும். இது நெட்பிளிக்ஸ் ஓடிடி சேவையின் பேஸிக் சந்தாவுடன் வருகிறது. மற்ற பொதுவான நன்மைகளை பொறுத்தவரை, இது அன்லிமிட்ட் வாய்ஸ் கால் (Unlimited voice calls), ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள், தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

கூடுதல் நன்மையை பொறுத்தவரை, ஏர்டெல்லின் புதிய ரூ.1499 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஆனது ஏர்டெல்லின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5G data) அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் (Apollo 24|7 Circle membership) இலவச ஹலோட்யூன்ஸ் (Free Hello tunes), விங்க் ம்யூசிக் அணுகல் (Wynk Music access) மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளையும் (Airtel Thanks benefits) வழங்குகிறது.
02. ரிலையன்ஸ் ஜியோ ரூ.1,099 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்: ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டம் தான், டெலிகாம் சந்தையிலேயே இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்கும் மிகவும் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டமாகும். இது ரூ.149 மதிப்புள்ள நெட்பிளிக்ஸ் மொபைல் (Netflix Mobile) சந்தாவுடன் வருகிறது.

மற்ற பொதுவான நன்மைகளை பொறுத்தவரை, ஜியோ ரூ.1,099 ரீசார்ஜ் ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 2ஜிபி அளவிலான டெய்லி டேட்டாவை வழங்குகிறது. கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, இது ஜியோ அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Jio Unlimited 5G Data) முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
03. ரிலையன்ஸ் ஜியோ ரூ.1,499 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்: ஜியோவின் இந்த திட்டம் விலை நிர்ணயம் அடிப்படையில் ஏர்டெல் திட்டத்தை போலவே உள்ளது. மேலும் இது இலவச நெட்பிளிக்ஸ் பேஸிக் சந்தாவுடன் வருகிறது. உடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், டெய்லி 3ஜிபி டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ், அன்லிமிடெட்5ஜி டேட்டா போன்ற நன்மைகளை 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின்கீழ் வழங்குகிறது.
எது பெஸ்ட்? டெய்லி டேட்டா மற்றும் டிவைஸ் கட்டுப்பாடு பற்றிய கவலை இல்லை, மலிவான விலையில் இலவச நெட்பிளிக்ஸ் சந்தா கிடைத்தால் போதும் என்கிறவர்கள் ரூ.1099-ஐ தேர்வு செய்யலாம். இது டெய்லி 2ஜிபி டேட்டா உடனான நெட்பிளிக்ஸ் மொபைல் உடன் வருகிறது. அதாவது இதன்கீழ் கிடைக்கும் இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவை மொபைல் வழியாக மட்டுமே அனுபவிக்க முடியும்.
ஒருவேளை உங்களுக்கு டிவி அல்லது லேப்டாப் வழியாக நெட்பிளிக்ஸை அணுகும் விருப்பம் இருந்தால் ஜியோவின் ரூ.1499 அல்லது ஏர்டெல்லின் ரூ.1499-ஐ தேர்வு செய்யலாம். இவ்விரு திட்டங்களுமே நெட்பிளிக்ஸ் பேஸிக் உடன் வருகிறது. கூடவே டெய்லி 3ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இரண்டுமே ஒரே விலையில் கிடைப்பதால், உங்கள் பகுதியில் எது நல்ல நெட்வெர்க்கை வழங்குகிறதோ, அதை தேர்ந்த்டுத்து கொள்ளவும்.


Click it and Unblock the Notifications








