இலவச லேப்டாப் திட்டம் : மக்களை மேன்மேலும் முட்டாள்களாக்காதீர்கள்.!

|

வாட்ஸ்ஆப், மெஸ்ஸெஞ்சர் போன்ற செய்தி தளங்களில் ஸ்பேம் செய்திகள் பரவுவது ஒன்றும் நமக்கு புதிதல்ல. அப்படியாக, சமீபத்தில் ஆன்லைனில் பரவி வரும் ஒரு புதிய செய்தியானது மிகவும் வைரலான வண்ணம் உள்ளது. அதாவது வெளியான புதிய ஸ்பேம் செய்தி ஒரு இலவச மடிக்கணினியை மத்திய அரசு வழங்கும் என்று கூறுகிறது.

ஆம். தமிழ்நாடு அரசால் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டது போலவே நரேந்திர மோடியின் மத்திய அரசு இலவச ,லேப்டாப் திட்டமொன்றை கொண்டுவரவுள்ளதாக அந்த தகவல் கூறுகிறது. இது உண்மையா.?? பொய்யா.?? நம்பலாமா.? அல்லது வழக்கம்போல பொழுதுபோகாமல் அரசாங்கம் மக்களுடன் விளையாடுகிறதா.?

லேப்டாப் வித்ரான் யோஜனா 2017

லேப்டாப் வித்ரான் யோஜனா 2017

தற்போது, அனைவரின் வாட்ஸ்ஆப் இன்பாக்ஸிலும் காணப்படும் "லேப்டாப் வித்ரான் யோஜனா 2017" என்ற ஸ்பேம் செய்தி அரசாங்க திட்டத்தின் மூலம் கிடைக்கும் இலவச லேப்டாப்பைப் பெறுவது பற்றி பேசுகிறது. இது அடிப்படையில் அரசு இலவச மடிக்கணினிகளை விநியோகிக்கும் ஒரு நிரலாகும்.

இணைப்பை தட்டிவிட்டால்

இணைப்பை தட்டிவிட்டால்

இந்த வலைத்தளத்தை அணுகுவதற்கான இணைப்புடன் இந்த வைரஸ் செல்லும் செய்தி வெளியான வண்ணம் உள்ளது. நீங்கள் அந்த இணைப்பை தட்டிவிட்டால், ஒரு மடிக்கணினியில் நமது இந்திய நாட்டின் பிரதமரின் புகைப்படத்தைக் கொண்ட ஒரு வலைத்தளத்திற்கு நீங்கள் அனுப்பப்படுவீர்கள்.

பெற விரும்பும் லேப்டாப்  பிராண்டு

பெற விரும்பும் லேப்டாப் பிராண்டு

அங்கு நீங்கள் நிரப்ப வேண்டிய மூன்று துறைகள் உள்ளன. உங்கள் பெயர், உங்களின் மாநிலத்தின் பெயர் மற்றும் கடைசியாக நீங்கள் பெற விரும்பும் லேப்டாப் பிராண்டு பற்றியும் கேட்கிறது. இந்த விவரங்களை நீங்கள் பூர்த்தி செய்தவுடன், நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்.

ஆர்டர் லேப்டாப்

ஆர்டர் லேப்டாப்

மீண்டும் நீங்கள் இரண்டு தாவல்களை பார்ப்பீர்கள். அங்கு ஒன்று 'நண்பர்களை அழை' என்று கூறுகிறது, மற்றொன்று 'ஆர்டர் லேப்டாப்' என்று கூறுகிறது. 'ஆர்டர் லேப்டாப்' என்பதை நீங்கள் தட்டும்போது, 'குறைந்தது 12 குழுக்களை அழைப்பீர்களாக' என உங்களிடம் கேட்கிறது. அதாவது, வாட்ஸ்ஆப்பில் குறைந்தது 12 குழுக்களுக்கு இந்த செய்தியை நீங்கள் அனுப்ப வேண்டும்.

எச்சரிக்கிறோம்

எச்சரிக்கிறோம்

இப்போது இந்த கட்டத்தில், பெரும்பாலான மக்கள் அனைவரும் வாட்ஸ்ஆப் நண்பர்களை அழைத்துக் கொண்டு தங்கள் அதிர்ஷ்டத்தைத் தொடர வேண்டும். நீங்கள் தொடரக்கூடாது என்று நாங்கள் எச்சரிக்கிறோம்.

விளம்பரத்தை கிளிக்

விளம்பரத்தை கிளிக்

இந்த வகை ஸ்பேம் செய்திகள் வாட்ஸ்ஆப்பில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். இதுபோன்ற தகவல்கள் இப்படித்தான் காட்டுத்தீபோல பரவுகிறது. இதன் முக்கியமான நோக்கமே நீங்கள் நுழையும் வலைத்தளத்தில் தோன்றும் அல்லது காட்டப்படும் விளம்பரத்தை கிளிக் செய்வதற்கும், அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு மட்டுமே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

முகமூடி கூட்டம்

முகமூடி கூட்டம்

எந்தவிதமான இலவச லேப்டாப் திட்டத்தையும் அரசாங்கம் அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்தாலும் அதை இப்படி வாட்ஸ்ஆப் மூலம் அறிவிக்காது என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டும், கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே அரசாங்கமே தனது மக்களை போட்டு வாட்டிவதைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் மேன்மேலும் மக்களை முட்டாள்களாக்கி பயன்படுத்திக் கொள்கிறது ஒரு முகமூடி கூட்டம் என்பது வருத்தம்.!

நன்றி : போன்ரேடார்

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Free Narendra Modi Laptop Scheme Surfaces Online. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X