அறிய வாய்ப்பு., அலைமோதும் கூட்டம்: பிப்.,4 க்குள் 10 வினாடி வீடியோ அனுப்பினால் Free jio recharge!

|

தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டெல்கோ சமூக ஊடக தளமான ஸ்னாப்சாட் உடன் கூட்டு சேர்ந்து வீடியோ போட்டி ஒன்றை அறிவித்து உள்ளது. இந்த போட்டியானது கடந்த ஜனவரி 27 ஆம் தேதி முதல் தொடங்கியது.

ஜியோ ஸ்னாப்சாட் அறிவிப்பு

ஜியோ ஸ்னாப்சாட் அறிவிப்பு

டெல்கோ சமூக ஊடக தளமான ஸ்னாப்சாட் உடன் கூட்டு சேர்ந்து சவாலுக்கு சிறப்பு ஸ்னாப்சாட் லென்ஸை உருவாக்கியுள்ளது. ஜியோ காட் டேலண்ட் என்பதை ஒரு பகுதியாக ஸ்னாப்சாட் பயனர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், நண்பர்கள், குடும்பத்தினர்களுடன் இணைந்து ஆக்கப்பூர்வமாகவும், வேடிக்கையாகவும் நேரத்தை செலவிடுவதை விடுவதற்கான வழியாக இந்த போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

10 வினாடிகள் கொண்ட வீடியோ

10 வினாடிகள் கொண்ட வீடியோ

இந்த வீடியோ சவாலில் பங்கேற்க, ஸ்னாப்சாட் பயனர்கள் அதிகபட்சமாக 10 விநாடிகள் கொண்ட வீடியோவை பதிவு செய்ய வேண்டும். ஸ்னாப் சாட் செயலியில் உள்ள ஸ்னாப்சாட் லென்ஸைப் பயன்படுத்தி மைக், தொப்பி, தலையணி மற்றும் ஒளி-மோதிரங்கள் போன்ற வெவ்வேறு ஏ.ஆர் வகைகளை பயன்படுத்தி வீடியோ செய்யலாம்.

"எங்கள் கதை" என்ற தலைப்பில் பதிவேற்ற வேண்டும்

அதன்பிறகு அவர்கள் பதிவு செய்த வீடியோவை "எங்கள் கதை" என்ற தலைப்பில் பதிவேற்ற வேண்டும். அதேபோல் அந்த தலைப்பில் ஸ்னாப்சாட் ஐடி அல்லது ஸ்னாப் கோடுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் சுவாரஸ்யமான மற்றும் ஆக்கபூர்வமான உள்ளடக்கத்திற்கு ரிலையன்ஸ் ஜியோவிடம் பரிசுகள் கிடைக்கும்.

பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்

பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்

இந்த சவாலானது தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கிய இந்த வீடியோ போட்டி பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த போட்டியில் முன்னதாகவே ஒரு போட்டியாளர் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு தாய்லாந்து ட்ரிப் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற வெற்றியாளர்களுக்கு இலவச ஜியோ ரீசார்ஜ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Free jio recharge: Reliance jio and Snapchat launches 10 second creative challenge

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X