Home
News

இலவச Jio eSIM சேவை.. இந்த போன்களுக்கு மட்டும் தான் கிடைக்குமா? உங்க போன் இதுல இருக்கா? உடனே இதை செய்யுங்க..

ஜியோ (Jio) நிறுவனம் இப்போது அதன் பிஸிக்கல் சிம் கார்டு பயனர்களை இலவசமாக இ-சிம் (eSIM) சேவைக்கு மாற அனுமதிக்கிறது. இந்த eSIM சேவையை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலையும் ரிலையன்ஸ் ஜியோ இப்போது வெளியிட்டுள்ளது.

Jio eSIM: ஜியோ நிறுவனம் அதன் பயனர்களை eSIM சேவைக்கு மாற ஊக்குவிக்கிறது. இதற்காக ஜியோ நிறுவனம் இப்போது பிஸிக்கல் சிம் கார்டில் இருந்து eSIM சேவைக்கு மாறும் வாடிக்கையாளர்களிடம் எந்தவொரு கட்டணமும் பெறாமல் இலவசமாக மாற அனுமதிக்கிறது. அதுவும் எந்த சிரமமுமின்றி, வீட்டில் இருந்தபடியே ஒரு SMS மூலம் வாடிக்கையாளர்களை eSIM சேவைக்கு ஜியோ இப்போது மாற்றுகிறது.

இலவச Jio eSIM சேவை.. இந்த போன்களுக்கு மட்டும் தான் கிடைக்குமா?

Jio eSIM சேவை கிடைக்கும் போன் பட்டியல்: தற்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கிடைக்கும் பல ஸ்மார்ட்போன் சாதனங்களில் eSIM சேவை அணுக கிடைக்கிறது. ஆனால், ஜியோ eSIM சேவை கிடைக்கும் போன்கள் எது என்று தெரிந்தால் தானே வாடிக்கையாளர்கள் சுலபமாக eSIM சேவைக்கு விண்ணப்பிக்க முடியும். ஆகையால், ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களின் நலன் கருதி ஜியோ eSIM சேவை அணுக கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

எந்த பிராண்டட் போன்கள் பட்டியலில் உள்ளது? இந்தியாவில் வாங்க கிடைக்கும் தலைசிறந்த முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளான ஆப்பிள் (Apple), கூகுள் (Google), ஹானர் (Honor), மோட்டோரோலா (Motorola), நோக்கியா (Nokia), ஒன்பிளஸ் (OnePlus), ஒப்போ (Oppo), சாம்சங் (Samsung), விவோ (Vivo), சியோமி (Xiaomi) போன்ற பிராண்டுகளின் கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் இப்போது eSIM சேவை அணுக கிடைக்கிறது. இவை எந்த மாடல் போன்களுக்கு பொருந்தும் என்பதை இப்போது பார்க்கலாம்.

சரி, இப்போது ஜியோவின் eSIM சேவை கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்களின் விபரங்களை பார்க்கலாம்.
ஆப்பிள் (Apple) :
- iPhone XR
-iPhone XS
- iPhone XS Max
- iPhone 11
- iPhone 11 Pro
- iPhone 11 Pro Max
- iPhone 12
- iPhone 12 mini
- iPhone 12 Pro
- iPhone 12 Pro Max

இலவச Jio eSIM சேவை.. இந்த போன்களுக்கு மட்டும் தான் கிடைக்குமா?

- iPhone 13
- iPhone 13 mini
- iPhone 13 Pro
- iPhone 13 Pro Max
- iPhone 14
- iPhone 14 Plus
- iPhone 14 Pro
- iPhone 14 Pro Max
- iPhone 15
- iPhone 15 Plus
- iPhone 15 Pro
- iPhone 15 Pro Max

சாம்சங் (Samsung):
Samsung Galaxy Note 20 and Note 20 Ultra, Samsung Galaxy S20, S20 Plus, S20 Ultra, S21, S21 5G, S21 Ultra, S22, S22 Plus, S22 Ultra, S23, S23 Plus, S23 Ultra, S23 FE, S24, S24 Plus, S24 Ultra, Samsung Galaxy Fold, Z Fold 2, Z Fold 3, Z Fold 4, Z Fold 5
Samsung Galaxy Z Flip, Z Flip 3, Z Flip 4, Z Flip 5

கூகுள் (Google):
Google Pixel 3 மற்றும் அதற்கு முந்தைய மாடல்கள் என்பதை மட்டுமே வலைப்பக்கம் விபரம் காண்பிக்கிறது.

ஒன்பிளஸ் (OnePlus):
OnePlus Open

ஒப்போ (OPPO):
OPPO Find N2 Flip, OPPO Find N3 Flip

விவோ (Vivo):
Vivo X90 Pro, Vivo X100 Pro

மோட்டோரோலா (Motorola):
Moto Edge 40, Moto Razr, Moto Razr 40, Moto Razr 40 Ultra

நோக்கியா (Nokia):
Nokia G60, Nokia X30

ஹானர் (HONOR):
HONOR 90 5G

சியோமி (Xiaomi):

Xiaomi 14

இந்த பட்டியலில் உள்ள போன்களில் ஏதேனும் ஒன்று உங்களிடம் இருந்தால் கூட, நீங்கள் உடனே இலவசமாக ஜியோ eSIM சேவைக்கு மாறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Free Jio eSIM compatible smartphones in India check this mobile list before changing your physical sim card
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X