2013ல் உலகளாவிய இலவச ரோமிங் சேவையை வழங்கும் வாயேஜர் மொபைல்

Posted By: Staff
2013ல் உலகளாவிய இலவச ரோமிங் சேவையை வழங்கும் வாயேஜர் மொபைல்

கணினி, இணைய தளம் மற்றும் மொபைல்கள் வந்த பிறகு இந்த உலகம் ஒரு குக்கிராமமாக மாறியிருக்கிறது. அதுபோல் நாடு விட்டு நாடு பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகரித்திருக்கிறது. மேலும் அடிக்கடி பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் வெகு வேகமாக அதிகமாயிருக்கிறது.

இந்த நிலையில் நாடு விட்டு நாடு பயணிப்பவர்கள் தங்கள் மொபைல்களைப் போகும் இடமெல்லாம் பயன்படுத்துவதால் அவர்களின் மொபைல் கட்டணம் பலமடங்காக அதிகரிக்கிறது. அதற்கு காரணம் ரோமிங் கட்டணம்.

அதாவது நாடு விட்டு நாடு செல்லும் போது வெளி நாட்டில் மொபைல் போன்களைப் பயன்படுத்தும் போது அழைப்புக்களை பெறுவதற்கும் மற்றும் அழைப்புகளை விடுப்பதற்கும் தனியாக ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த ரோமிங் கட்டணம் தற்போது மிக அதிகமாக இருக்கிறது. அதனால் பலர் உலகப் பயணத்தின் போது தங்களின் மொபைல்களைப் பயன்படுத்துவதில்லை.

ஆனால் 2013க்குள் இலவச ரேமிங்கை வழங்க இருக்கிறது ஒரு தொலைத் தொடர்பு நிறுவனம். அமெரிக்காவைச் சேர்ந்த வாயேஜர் மொபைல் என்ற நிறுவனம் ப்ராஜெக்ட் குளோபல் வாயேஜர் என்ற ஒரு புதிய சேவையை வழங்க இருப்பதாக உறுதி அளித்திருக்கிறது. இந்த சேவை வரும் 2013ல் தொடங்க இருக்கிறது.

இந்த சேவையின் மூலம் உலக அளவில் பயணிக்கிறவர்களுக்கு இலவச ரோமிங் சேவையை இந்த நிறுவனம் வழங்க இருக்கிறது. இந்த சேவை பேட்டன்ட் பென்டிங் குளோபல் வையர்லஸ் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும். மேலும் இந்த சேவையின் மூலம் உலகளாவிய வாய்ஸ், எஸ்எம்எஸ், டூவல் ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்எ சாதனங்களில் உலகளாவிய டேட்டா போன்றவற்றை ரோமிங் கட்டணம் இல்லாமல் பெறமுடியும்.

வாயேஜர் மொபைல் நிறுவனத்தின் தலைவர் ஜான் மார்த்தினி கூறும் போது இந்த புதிய தொழில் நுட்பம் அல்லது சேவை நிறுவனங்கள், வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை உலக அளவில் ஒருங்கிணைக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot