மொபைல்போன் முதல் இருசக்கர வாகனங்கள் வரை: தடுப்பூசி போடவைக்க புதிய முயற்சி.!

|

கொரோனா பாதிப்பு அனைத்து இடங்களிலும் அதிகமாக தான் உள்ளது. குறிப்பாக கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதுவும் முதல் அலையை விட இரண்டாவது அலை வேகமாக பரவியதுடன்,அதிக உயிரழப்பை ஏற்படுத்துகிறது.

 மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட

மேலும் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் கடும் சவாலை சந்திக்கின்றனர் என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவளம் பகுதியில் எஸ்டீஎஸ் ஃபவுண்டேஷன், சி.என் ராமதாஸ் ஃபவுண்டேஷன், சிராஜ் ஃபவுண்டேஷன் போன்ற மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் "கோவிட் இல்லா கோவளம்" என்ற தலைப்பில் இணைந்து தங்கள் பகுதி மக்களிடையே நாள்தோறும் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கொரோனா இல்லா பகுதியாக மாற்ற
வேண்டும் என எண்ணி பல வழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 சென்று துண்டு பிரசுரங்கள்

அதுவும் வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும், கொரோனா பரவல் பற்றி எடுத்துரைத்தும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் அதனால் கொரோனா நோயை கட்டுப்படுத்த முடியும் என்று மக்களுக்கு நம்பிக்கையூட்டி தடுப்பூசி போட வைக்கின்றனர்.

'ஃபாஸ்டேக்' பயனர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை.. உடனே தெரிந்துகொள்ளுங்கள்..'ஃபாஸ்டேக்' பயனர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை.. உடனே தெரிந்துகொள்ளுங்கள்..

 ஒரு படி மேலே போய், கோவளம்

இன்னும் ஒரு படி மேலே போய், கோவளம் ஊராட்சியில் வசிக்கும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் ஒவ்வொரு வாரமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

ஜூன் 18 வரலாம்., வாய்ப்பு இருக்கு- பப்ஜி வீரர்களே தயாரா?- பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா விரைவில்!ஜூன் 18 வரலாம்., வாய்ப்பு இருக்கு- பப்ஜி வீரர்களே தயாரா?- பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா விரைவில்!

குலுக்கல் முறையில் 7

அதாவது தடுப்பூசி செலுத்த வருவோருக்கு கூப்பன் ஒன்றை வழங்கி அதனை பூர்த்தி செய்து, அதை அங்கிருக்கும் பெட்டிஒன்றில் போட வைக்கின்றனர். பின்பு வாரம் ஒருமுறை குலுக்கல் முறையில் 7 வெற்றியாளர்களை தேர்வு செய்துபல்வேறு பரிசு பொருட்களை வழங்குகின்றனர்.

அரசுடன் இணைந்து கொரோனா பணி- தனிநபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆன்லைன் விண்ணப்பம்!அரசுடன் இணைந்து கொரோனா பணி- தனிநபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆன்லைன் விண்ணப்பம்!

வாகனங்கள், தங்க

அதுவும் இலவச இரசக்கர வாகனங்கள், தங்க நாணயங்கள், ஃப்ரிட்ஜ்,வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், மொபைல்போன், பட்டுப்புடவை ஆகிய பரிசுகளை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதனால் கோவளம் பகுதியில் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

போக்கோ நிறுவனத்தின் முதல் 5 ஜி ஸ்மார்ட்போன் இது தான்.. வருகிறது புதிய போக்கோ எம் 3 புரோ 5 ஜி..போக்கோ நிறுவனத்தின் முதல் 5 ஜி ஸ்மார்ட்போன் இது தான்.. வருகிறது புதிய போக்கோ எம் 3 புரோ 5 ஜி..

முதல் அலையின்போது கொரோனா

கொரோனா முதல் அலையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஐந்து நாட்களுக்குப்பிறகு தொடங்கிய நுரையீரல் பாதிப்புகள்,இரண்டாம் அலையின்போது 2 அல்லது 3 நாட்களிலேயே தொடங்கிவிடுவதாக மருத்துவகள் கூறுகின்றனர். மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள்
மக்களை எச்சரித்து வருகின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Free Gifts for people vaccinating in the Kovalam area: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X