18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ஜூன் 21 முதல் இலவச தடுப்பூசியா? எப்படி இந்த தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது?

|

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் தமிழகத்தில் படு வேகமாக நடந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என்று இரண்டு பக்கமும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் முந்தியடித்துக்கொண்டு தடுப்பூசிகளைப் போட்டு வருகிறார்கள். இருப்பினும், மக்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான ஸ்லாட்கள் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது என்று புகார்கள் பதிவாகியுள்ளது. பிரதமர் மோடி திங்களன்று இந்த பிரச்சினை குறித்து உரையாடியுள்ளார்.

ஜூன் 21 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசியா?

ஜூன் 21 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசியா?

அதில் மாநிலங்களில் இருந்து மத்திய அரசின் கீழ் தடுப்பூசி போடுவதை முழுமையாகக் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். ஜூன் 21 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இந்த தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். தற்போது, ​​இந்த வயதிற்கு உட்பட்டவர்கள் பெரும்பாலும் கோவிட் தடுப்பூசிக்குப் பணம் செலுத்த வேண்டிய சூழ்நிலையே நிலைத்திருக்கிறது. இது வரும் ஜூன் 21 ஆம் தேதி முதல் மாற்றப்படும் என்று நம்பப்படுகிறது.

கடினமாக மாற்றிய முன்பதிவு முறை.. காரணம் என்ன?

கடினமாக மாற்றிய முன்பதிவு முறை.. காரணம் என்ன?

சரி, இப்போது எப்படி தடுப்பூசிக்கான ஸ்லாட்டை பதிவு செய்வது என்று பார்க்கலாம். வழக்கம் போல், நீங்கள் கோவிட் தடுப்பூசிக்கான ஸ்லாட்டை முன்பதிவு செய்ய, கோவின் போர்ட்டலுக்கு செல்ல வேண்டும். ஸ்லாட்டை முன்பதிவு செய்வது என்பது மிகவும் எளிதான காரியமாகும். ஆனால், இந்த நேரத்தில் முன்பதிவு செய்து ஸ்லாட்டை வாங்குவது என்பது சற்று கடினமானதாக மாறியுள்ளது. ஏராளமானோர் தற்பொழுது கோவின் போர்ட்டல் வழியாக கோவிட் தடுப்பூசி ஸ்லாட்டை பெற முயல்வதால் சில சிக்கல்கள் எழுகிறது.

சூரியனுக்கு குட்பை சொல்லும் சீனா- 20 வினாடிகள் ஆன் செய்யப்பட்ட செயற்கை சூரியன்- சூரியனை மிஞ்சும் வெப்பம்!சூரியனுக்கு குட்பை சொல்லும் சீனா- 20 வினாடிகள் ஆன் செய்யப்பட்ட செயற்கை சூரியன்- சூரியனை மிஞ்சும் வெப்பம்!

எப்படி கொரோனா தடுப்பூசியை ஆன்லைனில் முன்பதிவு செய்வது?

எப்படி கொரோனா தடுப்பூசியை ஆன்லைனில் முன்பதிவு செய்வது?

 • முதலில் நீங்கள் http://cowin.gov.in இணையதளத்தை ஓபன் செய்ய வேண்டும்.
 • பின்னர் உங்களின் மொபைல் எண்ணை டைப் செய்து GET OTP கிளிக் செய்யுங்கள்.
 • உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்த OTP எண்களை அடுத்த பக்கத்தில் டைப் செய்து verify கிளிக் செய்யுங்கள்.
 • உங்களின் ஆதார் அட்டை விபரம் அல்லது டிரைவிங் லைசன்ஸ் விபரம் அல்லது போட்டோ ஐடி-க்கான விபரங்களை உள்ளிடுங்கள்.
 • 4 நபர்கள் வரை உங்களுடன் இணைப்பது எப்படி?

  4 நபர்கள் வரை உங்களுடன் இணைப்பது எப்படி?

  • நீங்கள் பதிவு செய்ய விரும்பும் நபர் 18 வயது முதல் 60 வயதிற்குள் இருப்பது கட்டாயம்.
  • உங்களுக்குக் கட்டப்படும் அக்கௌன்ட் டீடெயில்ஸ் பக்கத்தில் கூடுதலாக 4 நபர்களை நீங்கள் இணைத்துக்கொள்ளலாம்.
  • ஒரு மொபைல் எண்ணின் கீழ் 4 நபர்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதை மறக்க வேண்டாம்.
  • ஜியோபோன் 5ஜி தீபாவளிக்கு தான் அறிமுகமா? விலை இது தானா? புதிய தகவல் சொல்லும் விஷயமே வேற..ஜியோபோன் 5ஜி தீபாவளிக்கு தான் அறிமுகமா? விலை இது தானா? புதிய தகவல் சொல்லும் விஷயமே வேற..

   அருகில் உள்ள தடுப்பூசி மையத்தைத் தேர்வு செய்வதே சிறந்தது?

   அருகில் உள்ள தடுப்பூசி மையத்தைத் தேர்வு செய்வதே சிறந்தது?

   • பெயர்களை உள்ளிட்ட பின்னர் Action கிளிக் செய்து, calendar ஐகானை கிளிக் செய்யுங்கள்.
   • Book Appointment for Vaccination பக்கத்தில் மாநில / யூடி, மாவட்டம், தொகுதி மற்றும் பின்கோடு போன்ற விவரங்களை உள்ளிடவும்.
   • பின்னர் சர்ச் கிளிக் செய்து, உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தடுப்பூசி மையத்தைத் தேர்வு செய்யுங்கள்.
   • Confirm கிளிக் செய்ய மறக்காதீர்கள்

    Confirm கிளிக் செய்ய மறக்காதீர்கள்

    • உங்கள் வசதிக்கு ஏற்ப தேதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யுங்கள்.
    • அவ்வளவு தான் இறுதியாக Confirm கிளிக் செய்து, Appointment Successful என்று வரும் வரை காத்திருங்கள்.
    • இந்த முறையை பின்பற்றி நீங்கள் உங்களுக்கான கொரோனா தடுப்பூசியை எளிமையாக முன்பதிவு செய்துகொள்ளலாம். தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்துள்ளதால் உங்களுக்கான ஸ்லாட் அருகில் வரும் அடுத்த தேதியில் கிடைப்பது சிரமமே என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

     உஷாராக இருப்பதும் அவசியம்

     உஷாராக இருப்பதும் அவசியம்

     அதேபோல், உங்கள் மெயில் ஐடி அல்லது உங்கள் மொபைல் எண்ணிற்கு கொரோனா தடுப்பூசி எளிமையாக பெற இந்த டோக்கனை பயன்படுத்துங்கள் என்று தெரியாத நபர்களிடமிருந்து செய்தி வந்தால் அதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக பணம் கேட்கும்பட்சத்தில் அந்த செய்திகளை நிராகரிப்பது மிகவும் நல்லது. தனியார் மருதிவமனைகளில் கொரோனா தடுப்பூசி ரூ.250 விலைக்குள் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Free COVID vaccine for 18+ years from June 21 and How to book your vaccine slot on CoWIN website : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X