பேட்டரியின் ஆற்றலை உறிஞ்சும் ஃப்ரீ அப்ளிகேஷன்கள்!

Posted By:
பேட்டரியின் ஆற்றலை உறிஞ்சும் ஃப்ரீ அப்ளிகேஷன்கள்!

உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் பேட்டரி நீடிக்காமல் போவதற்கு, ஃப்ரீ அப்ளிக்கேஷன்களும் காரணம். ஸ்மார்ட்போன்களில் உள்ள வசதிகளில் வாடிக்கையாளர்களை பெரிய கவருவது அப்ளிக்கேஷன்கள் டவுன்லோட் செய்வது. அதிலும் ஃப்ரீ அப்ளிக்கேஷன் என்றவுடன் அதை டவுன்லோட் செய்ய வேண்டும் என்ற

எண்ணம் அனைவருக்கும் வருவது இயல்பு தான்.

இதனால் பெரிய அளவில் பேட்டரி ஆற்றல் தேவைப்படுகிறது என்பதை அபினவ் பதக் கண்டறிந்துள்ளார். பர்டியூ பல்கலைகழகத்தில் கம்ப்யூட்டர் விஞ்ஞானியான இவர் அதிகமாக அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்வதால் வரும் பேட்டரி பிரச்சனையை விவரி்த்துள்ளார்.

உதாரணத்திற்கு ஆங்கிரி பேர்ட்ஸ், ஃப்ரீ செஸ், என்ஒய் டைம்ஸ் போன்ற அப்ளிக்கேஷன்கள் 10 முதல் 20 சதவிகிதம் வரை பேட்டரி ஆற்றலை எடுத்து கொள்வதாக தெரிய வந்துள்ளது. திரையில் டிஸ்ப்ளே செய்ய, கேம் லோடாக என்று மொத்தமாக 90 நிமிடத்திற்கான பேட்டரி ஆற்றலை எடுத்து கொள்கிறது. அதிகமான அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்பவர்கள் பேட்டரி சம்மந்தமான விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot