செலுவுகளை கட்டுப்படுத்த ஃப்ரீ மொபைல் அப்ளிக்கேஷன்!

Posted By: Staff
செலுவுகளை கட்டுப்படுத்த ஃப்ரீ மொபைல் அப்ளிக்கேஷன்!
செலவுகளை கட்டுப்படுத்தவும், பங்கு சந்தை நிலவரத்தை பற்றி உடனுக்குடன் அறியந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போருக்கு இங்கே பயனுள்ள சில அப்ளிக்கேஷன்களின் தகவல்கள்.

எக்ஸ்பென்ஸ் மேனேஜர் அப்ளிக்கேஷன்:

எவ்வளவு பணம் செலவாகிறது என்பதை அடிக்கடி கம்ப்யூட்டரிலோ, காகிதங்களிலோ கணக்கிட்டு பார்க்கும் நபரா நீங்கள்? இதனால் நாளுக்கு நாள் செய்யும் செலவுகள் பற்றி கணக்கிட்டு பார்த்து நேரத்தினை வீணடிக்க வேண்டாம். எக்ஸ்பென்ஸ் மேனேஜர் என்ற அப்ளிக்கேஷன், எவ்வளவு செலவு செய்திருக்கிறோம், கையிருப்பு பணம் எவ்வளவு,

மாத பட்ஜெட்டை ஒத்து செலவு செய்கிறோமா? அல்லது அதிகமாக செலவு செய்கிறோமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் புள்ளி விவரத்தோடு பதில் காட்டுகிறது. வருமானம், என்னென்ன செலவுகள் போன்ற தகவல்களை இதில் பதிவு செய்து வைத்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் நாம் செய்யும் செலவுகளை அதில் பதிவு செய்ய, செய்ய புள்ளி விவரத்தோடு வரவு செலவுகளையும் கையிருப்பு தொகைகளையும் கணக்கிட்டு காட்டுகிறது. நம்மையும் அறியாமல் அதிகமாக செய்யும் செலவுகளை இந்த எக்ஸ்பென்ஸ் மேனேஜர் அப்ளிக்கேஷன் மூலம் கட்டுப்படுத்த முடியும். இன்னும் இந்த அப்ளிக்கேஷனில் என்னென்ன விஷயங்களுக்கு பணம் செலுத்த வேண்டி இருக்கிறது என்பதை முன்கூட்டியே அலாரம் செட் செய்து வைக்க முடியும். அதுமட்டும் அல்லாது பணம் செலுத்தப்பட்டதன் ரசீதுகளை இதில் உள்ள வசதியை பயன்படுத்தி புகைப்படம் எடுத்து வைத்து கொள்ளவும் முடியும். இதனால் ரசீதுகளை ஒவ்வொரு விஷயத்திற்கும் தேடி எடுக்க வேண்டிய அவசியமில்லை.

ஃபன்டுசூப்பர்மார்ட் அப்ளிக்கேஷன்:

ஃபன்டுசூப்பர்மார்ட் அப்ளிக்கேஷன் மியூசுவல் ஃபண்டு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள பெரிதும் உதவும். இன்று அதிகப்படியான மக்கள் மியூசுவல் ஃபண்டு போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். மேலே கூறப்பட்டுள்ள ஃபன்டுமார்ட் அப்ளிக்கேஷன் பற்றி தகவல்களை உடனுக்குடன் இதில் தெரிந்து கொள்ளலாம். மியூசுவல் ஃபண்டில் பணத்தினை முதலீடு செய்வதனால் கிடைக்கும் லாபம் என்பது பங்கு சந்தை நிலவரத்தினை பொருத்து இருக்கிறது. எந்த நிறுவனத்தின் பங்குகளில் நாம் நமது பணத்தினை முதலீடு செய்கிறோமோ அதை பொருத்து தான் லாபம் இருக்கும். இதனால் நிறுவனங்களின் பங்குகள் பற்றிய நிலவரத்தினை நொடிக்கு நொடி தெரிந்து கொள்ள வேண்டி

இருக்கிறது.

இதனால் அதிகப்படியான வேலைகளுக்கிடையில் பங்கு சந்தை நிலவரத்தில் கவனம் செலுத்தி கொண்டிருப்பதும். முடியாத விஷயம். இதற்கிடையில் மியூசுவல் ஃபண்டு பற்றிய தகவல்களையும், மார்கெட் பங்குகள் பற்றி விவரமும் இருக்கும் இடத்திற்கு தேடி வந்தால் மிகவும் சவுகரியாமாக இருக்கும். இந்த சவுகரியத்தினை தான் ஃபண்டுசூப்பர்மார்ட் அப்ளிக்கேஷன் வழங்குகிறது. இந்த அப்ளிக்கேஷனால் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் மியூசுவல் ஃபண்டு பற்றிய தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம். ஆன்ட்ராய்டு ஸ்டோர் மூலம் இந்த ஃபண்டுசூப்பர்மார்ட் அப்ளிக்கேஷனை, ஸ்மார்ட்போன்களிலேயே ஃப்ரீயாக டவுன்லோட் செய்யலாம்.

ஃபினேன்ஷியல் கேல்குலேட்டர் அப்ளிக்கேஷன்:

பல நம்பர்களை சில நிமிடங்களில் கணக்கிட்டு கூறவும் ஒரு அப்ளிக்கேஷன் உள்ளது. கரன்ஸி கன்வர்ஷன், காம்பவுன்டு இன்ட்ரஸ்டு, க்ரெடிட் கார்டு பேமெண்ட் என்று பல வசதிகளையும் இந்த ஃபினேன்ஷியல் கேல்குலேட்டரில் பெறலாம். இந்த ஃபினேன்ஷியல் கேல்குலேட்டர் அப்ளிக்கேஷனில் இ-மெயில் வசதியினையும் பெற முடியும். இதனால் மைக்ரோசாஃப்ட் ஸீட்டுடன் நீண்ட நேரம் போராட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பெரிய தொகையை கணகிட்டு பார்த்துவிட்டு, அதை அப்படியே இ-மெயிலுக்கும் அனுப்பி கொள்ள முடியும். இத்தகைய சிறந்த வசதிகளை இந்த ஃபினேன்ஷியல் கேல்குலேட்டரில் பெறலாம். இந்த அப்ளிக்கேஷனையும் ஆன்ட்ராய்டு ஸ்டோரில் இருந்து ஃப்ரீயாக டவுன்லோட் செய்து ஸ்மார்ட்போன்களில் வைத்து கொள்ளலாம்.

ஆல் இன்டியா பேங்க் இன்ஃபோ அப்ளிக்கேஷன்:

முக்கியமாக பணபரிவர்த்தனைகள் செய்ய அதிக நேரம் ஒதுக்க வேண்டி இருக்கிறது. இப்போது மொபைலில் பணபரிவர்த்தனைகள் செய்ய என்எப்சி தொழில் நுட்பம் இருந்தாலும், ஆல் இன்டியா பேங்க் இன்ஃபோ என்ற புதிய அப்ளிக்கேஷன் பணபரிவர்த்தனையை எளிதாக செய்ய உதவுகிறது. பொதுவாக பணபரிவர்த்தனைகள் செய்யும் போது அதில் ஐஎஃப்எஸ்சி கோடு போன்றவற்றை நிரப்ப வேண்டி இருக்கும். இதில் ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு ஐஎப்எஸ்சி கோடு கொடுக்கப்பட்டிருக்கும். இந்த கோடு நம்பரை அறிய கூகுள் மூலம் தேடி எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த ஆல் இன்டியா பேங்க் இன்ஃபோ அப்ளிக்கேஷனில் ஐஎப்எஸ்சி கோடு போன்ற விவரங்களை தேட வேண்டியதில்லை. இதனால் அதிக நேரம் செலவிட வேண்டிய அவசியமில்லாமல் எளிதாக பணத்தினை, வேறொரு அக்கவுன்டிற்கு பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இந்த அப்ளிக்கேஷனை ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்டோர்களில் ஃப்ரீயாக டவுன்லோட் செய்யலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot