அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வேண்டுமா? அப்போ இந்த Airtel திட்டத்தை பாருங்கள்.. கண்டிப்பா யூஸ் ஆகும்..

|

பாரதி ஏர்டெல் நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள அதன் பயனர்களுக்குப் பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுடன் ஒப்பிடும்போது பாரதி ஏர்டெல் டெல்கோ மிகவும் போட்டியான திட்டங்களை வழங்குவதில் பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய காலகட்டத்தில் பயனர்கள் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் வழங்கப்படும் கூடுதல் நன்மைகள் குறித்து அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனால், திட்டத்துடன் என்ன கூடுதல் நன்மைகளை வழங்குகிறது என்பது இப்போது ஒரு முக்கிய பண்பாக மாறிவிட்டது.

டெலிகாம் நிறுவனங்கள் கூடுதல் நன்மைகள் மீது கவனம் செலுத்த காரணம் என்ன?

டெலிகாம் நிறுவனங்கள் கூடுதல் நன்மைகள் மீது கவனம் செலுத்த காரணம் என்ன?

இதனால் தான், அடிப்படை நன்மைகளுடன், தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் கூடுதல் நன்மைகளையும் அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதைச் சரியாக செய்ய முயன்ற ஏர்டெல் நிறுவனம், ஏர்டெல் தேங்க்ஸ் என்ற கூடுதல் சேவைக்கான தனி பிரிவை ஆரம்பித்து மற்ற நெட்வொர்க்குகளை விட ஒரு படி மேலே சென்றுவிட்டது. தெரியாதவர்களுக்கு, ஏர்டெல் தேங்க்ஸ் என்பது பாரதி ஏர்டெல் வழங்கும் கூடுதல் நன்மைகளை வழங்கும் திட்டமாகும்.

ஏர்டெல் தேங்க்ஸ் உள்ளே கிடைக்கும் ஏராளமான கூடுதல் நன்மைகள்

ஏர்டெல் தேங்க்ஸ் உள்ளே கிடைக்கும் ஏராளமான கூடுதல் நன்மைகள்

டெல்கோவிலிருந்து வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இந்த கூடுதல் நன்மைகள் நீட்டிக்கப்படுகிறது. ஏர்டெல் தேங்க்ஸ் உள்ளே, பயனர்கள் அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் பதிப்பின் இலவச நன்மையைப் பெற உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவலும் இங்கே உள்ளது. இன்னும் ஏர்டெல் உடன் ஏர்டெல் வழங்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது என்பதைப் பயனர்கள் கவனிக்க மறக்காதீர்கள்.

ஜியோவையே மிஞ்சும் Vi இன் ரூ. 249 திட்டம்.. அதிக டேட்டாவுக்கு 'இந்த' அபார திட்டம் தான் ரைட் சாய்ஸ்..ஜியோவையே மிஞ்சும் Vi இன் ரூ. 249 திட்டம்.. அதிக டேட்டாவுக்கு 'இந்த' அபார திட்டம் தான் ரைட் சாய்ஸ்..

அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு

அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு

அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு வரையறுக்கப்பட்ட சாதனங்களில் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பை ஒரு பயனர் ஒரு ஸ்மார்ட்போனில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. வழக்கமான அமேசான் பிரைம் சாந்த போல, இது பல பயனர் பல சாதனம் என்ற முறையை அனுமதிக்காது. இதன் பெரியார் குறிப்பிடப்படுவது போல, இது ஒற்றை மொபைல் போனில் இயங்கும் மொபைல் பாதிப்பாகும்.

அமேசான் பிரைம் வீடியோ மொபைல் சந்தா கிடைக்கும் திட்டங்கள் எவை?

அமேசான் பிரைம் வீடியோ மொபைல் சந்தா கிடைக்கும் திட்டங்கள் எவை?

பாரதி ஏர்டெல்லின் கிட்டத்தட்ட அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களும் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான இலவச சந்தாவுடன் வருகின்றன. டெல்கோ நிறுவனம் பயனர்களுக்கு வழங்கும் இந்த இலவச அமேசான் பிரைம் மொபைல் எடிஷன் சந்தா 1 மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். இருப்பினும், உங்களுக்கு முழுமையான அமேசான் பிரைம் சந்தா வேண்டுமென்றால், அதற்கும் நிறுவனம் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் இலவச அமேசான் பிரைம் வீடியோ உறுப்பினர் சந்தாவைப் பெறலாம்.

லுக் அப்படி இருக்கு- அற்புதமான மின்ட் வண்ணத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி: விலை, அம்சம்!லுக் அப்படி இருக்கு- அற்புதமான மின்ட் வண்ணத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி: விலை, அம்சம்!

முழுமையான அமேசான் பிரைம் வீடியோ சந்தா வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்

முழுமையான அமேசான் பிரைம் வீடியோ சந்தா வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்

இப்போது இந்த திட்டம் ஓவர்-தி-டாப் (OTT) தளத்தின் வழக்கமான அமேசான் பிரைம் உறுப்பினர் சந்தாவை வழங்குகிறது. இங்கு நாம் குறிப்பிடும் திட்டம் ரூ. 349 விலையில் ஏர்டெலிடமிருந்து கிடைக்கிறது. இந்த திட்டம் ஒட்டுமொத்தமாக 28 நாட்கள் செல்லுபடியாகும் குறுகிய வேலிடிட்டி உடன் பயனர்களுக்கு 2.5 ஜிபி தினசரி தரவை வழங்குகிறது. அமேசான் பிரைம் வீடியோவிற்கான சந்தா, 3 மாத கால அப்போலோ மருத்துவ காப்பீடு, ஷா அகாடமி 1 வருட ஆன்லைன் படிப்பிற்கான சந்தா, பாஸ்ட் டேக் மீது ரூ.100 கேஷ் பேக், இலவச ஹெலோ டியூன் மற்றும் விங்க் மியூசிக் இலவச சந்தா ஆகியவற்றை நிறுவனம் வழங்குகிறது.

மக்களை அதிகம் கவரும் கூடுதல் சலுகைகள்

மக்களை அதிகம் கவரும் கூடுதல் சலுகைகள்

இது அமேசானின் வெளிப்புற பங்காளிகள் மூலம் மட்டுமே பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், அந்த பங்குதாரர்களுடன் பாரதி ஏர்டெல் கூட்டு வைத்துள்ளது. அமேசான் நிறுவனம் ஜனவரி மாதத்தில் ஏர்டெல் உடன் இணைந்து உலகளாவிய ரீதியில் முதன்முறையாக மொபைல் மட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. டெலிகோவின் சந்தாதாரர் சேர்க்கை இலக்கை இது எவ்வளவு சாதகமாக மாற்றியுள்ளது என்று நாங்கள் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியது இல்லை. இலவசமாகக் கூடுதல் சலுகைகள் கிடைக்கும் போது பயனர்கள் தானாகவே ஏர்டெல்லை தேர்வு செய்யத் துவங்கிவிட்டனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Free Amazon Prime Mobile Edition Offer Packs Available With Airtel Thanks Benefits : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X