Home
News

90 நாட்களுக்கு இலவச Airtel 5G! ஏர்டெல்லின் இந்த ட்ரூலி அன்லிமிடெட் பிளானை கொஞ்சம் பாருங்க!

ஏர்டெல் நிறுவனம் இப்போது அதன் பயனர்களுக்கு இலவசமாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை சில குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களுடன் வழங்குகிறது. அதில் 90 நாள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் 5ஜி தரவை வழங்கும் திட்டத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

பார்தி ஏர்டெல்லின் 90 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டமானது, பல்வேறு விலைப் பிரிவுகளில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் ஒரு விருப்பமான ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றாகும். பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு, இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மைகளுடன் 90 நாட்கள் வேலிடிட்டியை வழங்குவதோடு. இப்போது கூடுதலாக இலவச 5ஜி டேட்டாவையும் வழங்குகின்றன. ஜியோவை (Jio) போல ஏர்டெல்லும் அன்லிமிடெட் 5ஜி-யை வழங்க துவங்கியுள்ளது.

90 நாட்களுக்கு இலவச Airtel 5G! இந்த ட்ரூலி அன்லிமிடெட் பிளானை பாருங்க!

இங்கு நாம் பார்க்கப்போகும் திட்டமானது, ஏர்டெல்லின் ரூ.779 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாகும். இந்த ஏர்டெல் ரூ. 779 திட்டம் உண்மையிலேயே என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்ப்போம் வாங்க. இவை 90 நாட்கள் செல்லுபடியாகும் ஒரே ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டமாகும். ஏர்டெல்லின் ரூ.779 ட்ரூலி அன்லிமிடெட் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அன்லிமிடெட் அழைப்புகள் உட்பட, தினமும் 100 எஸ்எம்எஸ் என்று 90 நாட்கள் செல்லுபடியாகும்.

ரூ.779 திட்டத்துடன் கிடைக்கும் வழக்கமான பலன்களுக்கு மேலதிகமாக, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் Apollo 24 by 7 சர்க்கிள் உறுப்பினர்களை 3 மாதங்களுக்கு கூடுதல் கட்டணமின்றி அனுபவிக்க முடியும். FASTag இல் ரூ.100 கேஷ்பேக், Wynk Music மற்றும் 90 நாட்களுக்கு இலவச Hellotunes. ஆண்ட்ராய்டு, iOS மற்றும் டெஸ்க்டாப் முழுவதும் உள்ள Wynk மியூசிக் இயங்குதளங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த இசைக்கு அதிவேக டேட்டாவுடன் மகிழலாம்.

இது மட்டுமின்றி, ஏர்டெல் 779 திட்டம் மின்னஞ்சல் அல்லது உடனடி செய்தி போன்ற அவசர தகவல்தொடர்புகளுக்கு தினசரி அதிவேக தரவு பயன்பாட்டிற்கு 64 Kbps வேகத்தில் வரம்பற்ற தரவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் நிறுவனத்தின், ஏர்டெல் 5ஜி பிளஸ் இப்போது இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கிறது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேயரில் சமீபத்திய 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது.

90 நாட்களுக்கு இலவச Airtel 5G! இந்த ட்ரூலி அன்லிமிடெட் பிளானை பாருங்க!

அழகான தீவுகள் மற்றும் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் 5G வழங்கும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனம் ஏர்டெல் ஆகும். நீங்கள் அந்த 500+ நகரங்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவர் என்றால், எர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க்கில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை நீங்கள் எந்த 5ஜி இணக்கமான ஃபோனைப் பயன்படுத்தி வேண்டுமாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ. 779 ட்ரூலி அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், தற்போதைய வேகத்தை விட 20-30 மடங்கு வேகத்தை நீங்கள் அனுபவிக்கலாம். ஏர்டெல் ரூ.779 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு வெறும் ரூ.8.60 என்ற கட்டணத்துடன் அன்லிமிடெட் நன்மைகளை வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் இலவச 5ஜி டேட்டாவை அன்லிமிடெட் ஆக சுவைக்க விருப்பம் இருந்தால், நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய திட்டம் இதுவே.

More from GizBot

Best Mobiles in India

English summary
Free Airtel 5G for 90 Days Check out this Rs 779 Truly Unlimited Plan of Airtel
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X