அடுத்த மாசம் 14 கடைசி.. Aadhaar அட்டை வச்சிருந்தா அலெர்ட்.. இல்லன்னா சிக்கல் தான்.. ஏன்?
வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ரேஷன் கார்டு போல ஆதார் அட்டையும் (Aadhaar Card) மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. அதுவும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் சேவைகளை பெறுவதற்கு இந்த ஆதார் கட்டாயம் தேவைப்படுகிறது. இதுதவிர குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, வங்கி தொடர்பான சேவை, லோன் எடுப்பது, புது சிம் கார்டு வாங்குவது, KYC அப்டேட், இறப்பு சான்றிதழ் பெறுவது என அனைத்திற்கும் ஆதார் பயன்படுகிறது.
இந்நிலையில் ஆதார் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆதார் அட்டையில் பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற மாற்றங்களைச் செய்ய விரும்பினால் அல்லது அப்டேட் செய்ய விரும்பினால் இப்போது எந்த கட்டணமும் இலவசமாகச் செய்யலாம்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 14, 2025 என்று தெரிவித்துள்ளது. எனவே ஆதார் பயனர்கள் ஆதாரை வரும் ஜூன் 14-க்குள் இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும். ஒருவேளை இந்த காலக்கெடு முடிவடைந்துவிட்டால் 50 முதல் 100 ரூபாய் வரை செலுத்த வேண்டும். குறிப்பாக ஜூன் 14-க்கு பின்பு கட்டணம் செலுத்தினால் மட்டுமே பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற மாற்றங்களைச் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
நீங்கள் ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்ய விரும்பினால் UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான My Aadhaar போர்ட்டலைப் பயன்படுத்தவும். அதேபோல் உங்கள் ஸ்மார்ட்போனில் MyAadhaar செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது ஆதாரில் பெயர், முகவரியை எவ்வாறு புதுப்பிப்பது என்பதைப் பார்க்கலாம்.
வழிமுறை-1: முதலில் ஆதார் இணையதளமான uidai.gov.in என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த தளத்தில் மை (my aadhaar) என்பதை கிளிக் செய்தவுடன் கீழே தோன்றும் மெனுவில் இருந்து உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும் (அப்டேட் செய்யவும்) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-2: அதன்பின்னர் ஆதார் எண் மற்றும் கேப்சாக சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்ட பிறகு Send OTP என்பதைக் கிளிக் செய்யவும். அடுத்து உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். இந்த OTP உதவியுடன் உள்நுழைய முடியும். பின்பு உங்கள் ஆதாரில் பெயர், முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பாருங்கள்.
வழிமுறை-3: குறிப்பாக இந்த சுயவிவரங்கள் தவறாக இருந்தால் செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்ய வேண்டும்.இதற்காக நீங்கள் ஏதாவது ஒரு அடையாள அட்டையை ஆதாரமாகச் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட நிறைய ஆதாரங்கள் இருக்கும். இதில் நீங்கள் எதை சப்மிட் செய்கிறீர்களோ அதை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-4: அடுத்து உங்களது அடையாள அட்டையை அப்லோடு செய்யுங்கள், அதன் அளவு 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும். அதேபோல் முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதை செலக்ட் செய்து அதற்கான ஆதாரத்தையோ ஆவணத்தையோ அப்லோடு செய்ய வேண்டும். அந்த ஃபைலும் கண்டிப்பாக 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வழிமுறை-5: குறிப்பாக உங்கள் அடையாள அட்டையும், முகவரி ஆவணமும் JPEG, PNG or PDFஃபார்மட்டில் இருத்தல்வேண்டும். இதையடுத்து சப்மிட் செய்ய வேண்டும். அடுத்து உங்களுக்கு ஒரு கன்ஃபர்மேஷன் மெசேஜ் ஒன்று வரும். மேலும் ஒரு யுனிக் அப்டேட் ரெஃபரன்ஸ் நம்பர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும். இதை வைத்து உங்களது விவரங்கள் அப்டேட் ஆனதை எளிமையாகக் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








