Home
News

Aadhaar அட்டை இருக்கா.. இறுதி நேரத்தில் வந்தது புதிய உத்தரவு.. மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு.. இதோ முழு விவரம்

இந்தியாவில் உள்ள மக்களுக்கு ஆதார் (Aadhaar) என்பது அத்தியாவசியமான அடையாள அட்டையாகும். குறிப்பாக நாட்டில் வங்கி கணக்கு துவங்குவது முதல் செல்போன் சிம் வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை பயன்படுகிறது. மேலும் இந்த ஆதார் கார்டு இருந்தால் தான் தற்போது அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆதார் தொடர்பாக அரசு ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது ஆன்லைனில் இலவசமாக ஆதார் (aadhaar)புதுப்பிக்க முன்னதாக ஜூன் 14, 2024 என்று அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் தற்போது அந்த இலவச ஆதார் புதுப்பிப்புக்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது அரசு. அதாவது தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தில் வெளியான தகவலின்படி, ஆதாரை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 14, 2024 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Aadhaar அட்டை இருக்கா.. இறுதி நேரத்தில் வந்தது புதிய உத்தரவு..

எனவே உங்களது ஆதார் தகவல்களை இலவசமாக வரும் செப்டம்பர் 14-ம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டையை வைத்திருப்பவர்கள், தங்களின் தகவல்களைக் கண்டிப்பாகப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

மேலும் அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்கும் இந்த ஆதார் அட்டை அவசியமான ஒன்று ஆகும். எனவே ஆதார் கார்டு தகவல்களைச் சரியாக வைத்திருப்பது அவசியம். குறிப்பாக சிலருக்குப் பெயரில் திருத்தங்கள் இருக்கலாம். சிலருக்கு முகவரியில் திருத்தங்கள் இருக்கலாம். எனவே இது போன்ற ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கு UIDAI இணையதளத்தைப் பயன்படுத்தலாம். அதுவும் இந்த இணையதளத்தில் வரும் செப்டம்பர் 14 வரை இலவசமாக ஆதாரை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

குறிப்பாக ஆதார் சேவை மையம் சென்றால் அடையாளச் சான்று ஆவணங்களை சமர்பித்து, அங்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் ஆதார் இணையதளம் வழியாக நீங்கள் இலவசமாகவே இந்த ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து செய்து உங்கள் தகவல்களை எளிதாகப் புதுப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது ஆதார் தகவல்களை எவ்வாறு புதுப்பிப்பது என்பதைப் பார்க்கலாம்.

வழிமுறை 1: ஆதார் அட்டையின் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் மை ஆதார்(my aadhaar) என்பதை கிளிக் செய்த பின்பு கீழே தோன்றும் மெனுவில் இருந்து உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும் (அப்டேட் செய்யவும்) என்பதை கிளிக் செய்யவும்.

வழிமுறை 2: அடுத்து ஆதார் எண் மற்றும் கேப்சாக சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்ட பிறகு Send OTP என்பதைக் கிளிக் செய்யவும். அதன்பின்பு உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி அனுப்பிவைக்கப்படும். இந்த ஓடிபி உதவியுடன் உள்நுழைய முடியும். அடுத்து அந்த தளத்தில் முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பார்க்கவும்.

வழிமுறை 3: இந்த சுயவிவரங்களில் எந்த தவறும் இல்லாமல் சரியாக இருந்தால் என்னுடைய விவரங்கள் சரியாக இருக்கின்றன என்பதை கிளிக் செய்யவும். ஒருவேளை தவறாக இருந்தால் செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். இதற்காக நீங்கள் ஏதாவது ஒரு அடையாள அட்டையை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட நிறைய ஆதாரங்கள் இருக்கும். இதில் நீங்கள் எதை சப்மிட் செய்கிறீர்களோ அதை கிளிக் செய்ய வேண்டும்.

Aadhaar அட்டை இருக்கா.. இறுதி நேரத்தில் வந்தது புதிய உத்தரவு..

வழிமுறை 4: அதன்பின்பு உங்களது அடையாள அட்டையை அப்லோடு செய்யுங்கள், அதன் அளவு 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதை செலக்ட் செய்து அதற்கான ஆதாரத்தையோ ஆவணத்தையோ அப்லோடு செய்ய வேண்டும். அந்த ஃபைலும் கண்டிப்பாக 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும்.

வழிமுறை 5: குறிப்பாக அடையாள அட்டையும் முகவரி ஆவணமும் JPEG, PNG or PDF ஃபார்மட்டில் இருத்தல் வேண்டும். இதை தொடர்ந்து சப்மிட் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு ஒரு கன்ஃபர்மேஷன் மெசேஜ் ஒன்று வரும். மேலும் ஒரு யுனிக் அப்டேட் ரெஃபரன்ஸ் நம்பர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும். இதை வைத்து உங்களது விவரங்கள் அப்டேட் ஆனதைக் எளிமையாகக் கண்காணிக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Free Aadhaar Update Deadline Extended Again by UIDAI: Check Latest Date Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X