Home
News

தப்பிச்சோம்.. இலவச Aadhaar அப்டேட்.. கடைசி தேதி மீண்டும் நீட்டிப்பு.. இனி எத்தனை நாளுக்கு ரூ.50 கட்டணம் இல்லை!

யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (Unique Identification Authority of India) ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் (Aadhaar Card Free Update) செய்வதற்கான கடைசி தேதியை (Last Date) மீண்டும் நீட்டித்துள்ளது.

யுஐடிஏஐ ஆனது, ஆன்லைன் வழியாக ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 14, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து உள்ளது. முன்னதாக இந்த கடைசி தேதி டிசம்பர் 14, 2024 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இது மேலும் சில மாதங்களுக்கு நீடிக்கப்பட்டு உள்ளது.

இலவச Aadhaar அப்டேட்.. கடைசி தேதி மீண்டும் நீட்டிப்பு!

இதுகுறித்த எக்ஸ் தள பதிவில், லட்சக்கணக்கான ஆதார் எண் வைத்திருப்பவர்கள் பயனடைவதற்காக யுஐடிஏஐ-யின் இலவச ஆன்லைன் ஆவணப் பதிவேற்ற வசதியானது 14 ஜூன் 2025 வரை நீட்டிக்கப்படுகிறது. . இந்த இலவச சேவை மைஆதார் போர்ட்டலில் (MyAadhaar Portal) மட்டுமே கிடைக்கும் என்று யுஐடிஏஐ கூறியுள்ளது.

முன்னரே குறிப்பிட்டுள்ளபடி இலவச ஆதார் அப்டேட்டிற்கான (Free Aadhaar Update) காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம், ஆரம்பத்தில் இந்த இலவச வசதி ஜூன் 14, 2024 அன்று முடிவடைய இருந்தது. பின்னர் இலவச ஆதார் அப்டேட்டிற்கான காலக்கெடு மீண்டும் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. முதலில் செப்டம்பர் 14 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு, இறுதியாக டிசம்பர் 14 ஆம் தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டது.

தற்போது மீண்டும் நீடிக்கப்பட்டு, 14 ஜூன் 2025 ஆனது கடைசி தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்த இலவச சேவை மீண்டும் நீட்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறேஆதார் அட்டையில் உள்ள, உங்களை பற்றிய விவரங்களை (பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை) ஆன்லைன் வழியாக இலவசமாக மாற்றுவதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

யுஐடிஏஐ அதன் எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த இலவச சேவையானது அதிகாரப்பூர்வ மைஆதார் போர்டல் வழியாக மட்டுமே கிடைக்கும். அதாவது தற்போது வரையிலாக ஆன்லைன் வழியிலான ஆதார் அப்டேட் மட்டுமே இலவசமாக செய்ய கிடைக்கிறது. ஆன்லைன் வழியாக ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி என்பதற்கான படிப்படியான வழிமுறைகள் இதோ:

01. முதலில் அதிகாரப்பூர்வ யுஐடிஏஐ இணையதளத்தை (Official UIDAI Website) அணுகவும். அதாவது myaadhaar.uidai.gov.in க்கு செல்லவும்.
02. இப்போது மை ஆதார் (My Aadhaar) என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் அப்டேட் யுவர் ஆதார் (Update your Aadhaar) என்பதை கிளிக் செய்யவும்.

03. இப்போது அப்டேட் ஆதார் டீட்டெயில்ஸ் ஆன்லைன் (Update Aadhaar Details Online) பக்கத்தில் டாக்குமெண்ட் அப்டேட் (Document Update) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
04. ஆதார் அட்டை எண் (Aadhaar Card Number) மற்றும் கேப்ட்சா குறியீட்டை (Captcha Code) உள்ளிட்ட பின்னர் சென்ட் ஒடிபி (Send OTP) என்பதை கிளிக் செய்யவும்.

05. பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு (Registered Mobile Number) அனுப்பப்பட்ட ஒடிபி-ஐ பயன்படுத்தி லாக்-இன் (Login) செய்யவும்.
06. இப்போது நீங்கள் அப்டேட் செய்ய விரும்பும் விவரங்களைத் தேர்ந்தெடுக்கவும். அதாவது பெயர் (Name), முகவரி (Address) அல்லது பிறந்த தேதி (Date of birth - DOB).

07. புதுப்பிக்கப்பட வேண்டிய தகவலை வழங்கவும் மற்றும் அதற்கு தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
08. கடைசியாக சப்மிட் அப்டேட் ரெக்வஸ்ட் (Submit Update Request) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். இதை செய்து முடித்ததும், உங்கள் விண்ணப்பத்தை கண்காணிப்பதற்கான அப்டேட் ரெக்வஸ்ட் நம்பர் (Update Request Number - URN) ஆனது எஸ்எம்எஸ் வழியாக அனுப்பப்படும்.

உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் விவரங்களை (கருவிழி, கைரேகைகள்) அல்லது மொபைல் நம்பர் அல்லது புகைப்படம் போன்ற விவரங்களை அப்டேட் செய்ய விரும்பினால், அவைகளை ஆன்லைன் வழியாக செய்ய முடியாது என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகிறோம். இந்த மாற்றங்களை ஆதார் சேவை மையம் வழியாக மட்டுமே செய்ய முடியும். இதுதவிர்த்து பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற விவரங்களை ஒரு முறை மட்டுமே அப்டேட் செய்ய முடியும். எனவே இவ்விரு விவரங்களையும் மிகவும் கவனமாக புதுப்பிக்கவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Free Aadhaar Card Update Online Last date Extended Again By UIDAI New Date is June 14 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X