Home
News

நாளைக்கு கெடு! ஆதார் கார்டில் இதை பண்ணிடுங்க! இல்லனா பணம் கட்டணும்!

ஆதார் கார்டில் (Aadhaar Card) 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவரங்களை புதுப்பிக்காதவர்களும், குழந்தைகளுக்கு 15 வயது எட்டிய பின்பும் பயோமெட்ரிக்ஸ்
விவரங்களை புதுப்பிக்காதவர்களும், பெயர், முகவரி, மொபைல் நம்பர் விவரங்களை மாற்ற வேண்டியவர்களும் நாளைக்குள் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்திவரும் ஆதார் கார்டுகளில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுவாகவே, ஆதார் கார்டுகளில் கொடுக்கும் விவரங்களில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பாராதவிதமாக தவறான விவரங்களை கொடுத்துவிட்டால், அதனை முடிந்த வரையில் விரைவாக சரி செய்துவிட வேண்டும்.

நாளைக்கு கெடு! ஆதார் கார்டில் இதை பண்ணிடுங்க! இல்லனா பணம் கட்டணும்!

இல்லையென்றால், பின்னாளில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. ஆகவே, தவறான விவரங்களை உடனடியாக மாற்றிவிடுவது மிகுவும் நல்லதாகும். முன்னதாக, ஆதார் கார்டு மொபைல் நம்பர் மாற்றுதல் (Aadhaar Card Mobile Number Change), ஆதார் கார்டு பெயர் மாற்றுதல் (Aadhaar Card Name Change), ஆதார் கார்டு முகவரி மாற்றுதல் ((Aadhaar Card Address Change), ஆதார் கார்டு இமெயில் மாற்றுதல் (Aadhaar Card Email Change) ஆகியவற்றிக்கு ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்தது.

இதனால் மக்களிடையே ஆதார் விவரங்களை மாற்றுவதில் சுணக்கம் ஏற்பட்டுவந்த நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம், சலுகைகளை வழங்க முடிவு செய்தது. இதையடுத்து, ஆன்லைனில் ஆதார் அட்டை விவரங்களை மாற்ற விரும்பும் மக்கள், ஜூன் 14ஆம் தேதி வரையில், இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என்று அதிரடியாக அறிவித்தது.

இதற்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த அவகாசம் நாளையோடு (ஜூன் 14) முடிகிறது. இதனால், இதுவரை, ஆதார் கார்டில் மாற்றம் செய்யாமல் இருப்பவர்கள் செய்துவிடுவது நல்லது. இல்லையென்றால், பணம் கட்டி மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாமல், 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்காமல் இருக்கும் ஆதார் கார்டுகளை புதுப்பிக்குமாறும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், குழந்தைகளுக்கு ஆதார் கார்டுகளை வாங்கிய பெற்றோர்கள், அந்த குழந்தைக்கு 15 வயது எட்டிய பின்பும் ஆதார் கார்ட்டில் பயோமெட்ரிக்ஸ் விவரங்களையும் புதுப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே, ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் நம்பர், இமெயில் ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டியவர்கள், நாளைக்குள் அதை செய்து முடித்துவிடுங்கள்.

ஆதார் கார்டு விவரங்களை அப்டேட் செய்வது எப்படி?

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI website) அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு சென்று (Update Your Aadhaar) மூலம் நீங்கள் மாற்ற வேண்டிய விவரங்களை அப்டேட் செய்துகொள்ளலாம். இதற்கு உங்களது ஆதார் கார்டு, மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஓடிபி கொடுத்து விவரங்களை மாற்ற முடியும். நீங்கள் அப்டேட் செய்த பின்பு 15 வேலை நாட்களுக்குள் புதுப்பிக்கப்பட்டுவிடும்.

அதன்பின், நீங்கள் ஆதார் கார்ட்டை ஆன்லைனில் டவுன்லோட் (Aadhaar Card Download) செய்துகொள்ளலாம் அல்லது உங்களது முகவரிக்கு அனுப்ப விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Free Aadhaar Card Update Ends Tomorrow, How To Update Aadhaar Details in Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X