Home
News

செப்.14க்குள் ஆதார் கெடு.. 10 ஆண்டுகள் அப்டேட்டில் கவனம்.. குழந்தைகளின் பயோமெட்ரிக் அப்டேட் அவசியம்!

ஆதார் கார்டில் (Aadhaar Card) 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவரங்களை புதுப்பிக்காதவர்கள், திருமணம் செய்தபின்பு கணவர் பெயரை புதுப்பிக்காதவர்கள் மற்றும் பெயர், முகவரி விவரங்களை மாற்ற வேண்டியவர்கள் வரும் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் அதை செய்து விடுங்கள். இதுகுறித்த விவரம் இதோ.

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (Unique Identification Authority of India) ஆதார் கார்ட்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் மற்றும் இமெயில் ஆகியவற்றை மாற்ற ரூ.50 கட்டணம் வசூலித்து வந்தது. இதனிடையே 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியிருக்கிறது.

செப்.14 க்குள் ஆதார் கெடு.. 10 ஆண்டுகள் அப்டேட்டில் கவனம்!

ஏனென்றால், 10 ஆண்டுகளில் திருமணம் நடந்திருக்கும் பெண்கள் அவர்களது கணவர் பெயரை தந்தை பெயருக்கு பதிலாக இணைக்காமல் இருப்பார்கள். அதேபோல வேறு பகுதிக்கு சென்றிருந்தால், முகவரியை மாற்றாமல் இருப்பார்கள். மேலும், ஆதார் கார்ட்டில் கொடுத்த மொபைல் நம்பர், இமெயில் போன்ற விவரங்களையும் மாற்றியிருப்பார்கள்.

இதை சரி செய்யவே ஆதார் விவரங்களை புதுப்பிக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில் ஆன்லைனில் ஆதார் விவரங்களை புதுப்பித்தால், ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தது. இந்த இலவச அப்டேட் கெடு வரும் செப்டம்பர் 14ஆம் தேதியோடு முடிவடைகிறது. இந்த நேரத்தில் ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்வது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இதில் ஆதார் கார்டு பெயர் மாற்றுதல் (Aadhaar Card Name Change), ஆதார் கார்டு மொபைல் நம்பர் மாற்றுதல் (Aadhaar Card Mobile Number Change), ஆதார் கார்டு முகவரி மாற்றுதல் (adhaar Card Address Change), ஆதார் கார்டு இமெயில் மாற்றுதல் (Aadhaar Card Email Change) ஆகியவை அடங்கும்.

ஒருவேளை உங்களது குழந்தைகளுக்கு 15 வயது கடந்த பின்பு ஆதார் விவரங்களை புதுப்பிக்க விரும்பினால், அவர்களை அருகில் உள்ள ஆதார் சென்டருக்கு அழைத்து சென்று மாற்றுங்கள். ஏனென்றால், அவர்களின் ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் (Aadhaar Biometric Update) அங்கு தான் செய்யப்படும்.

ஆதார் கார்டு விவரங்களை அப்டேட் செய்வது எப்படி? இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI Website) அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும். அந்த பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் மை ஆதார் (My Aadhaar) டேபை கிளிக் செய்தால், அப்டேட் யுவர் ஆதார் (Update Your Aadhaar) ஆப்சன் தோன்றும்.

அதன்பின்பு அப்டேட் ஆதார் டீடெய்ல்ஸ் ஆன்லைன் (Update Aadhaar Details Online) என்னும் பக்கத்தை திறந்து அதில் இருக்கும் புரோசீடு டு அப்டேட் ஆதார் (Proceed to Update Aadhaar) ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது, உங்களது ஆதார் எண் கேட்கப்படும். அதை உள்ளீடு செய்யுங்கள்.

அதோடு கேப்ட்சா வெரிபிகேஷன் செய்ய வேண்டும். இதை செய்துவிட்டால், உங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பருக்கு ஓடிபி (OTP) அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்து லாகின் செய்து கொள்ளுங்கள். இப்போது, நீங்கள் மாற்ற வேண்டிய பெயர், முகவரி போன்ற விவரங்களை அப்டேட் செய்து கொள்ளலாம்.

இப்படி அப்டேட் செய்த பின்பு உங்களின் மொபைல் நம்பருக்கும், இமெயிலுக்கும் அப்டேட் ரிக்கொஸ்ட் நம்பர் (Update Request Number) அனுப்பி வைக்கப்படும். அதை வைத்து நீங்கள் அப்ளிகேஷனை டிராக் செய்து கொள்ள முடியும். இந்த அப்டேட் 15 வேலை நாட்களுக்குள் உங்களது ஆதார் கார்ட்டில் புதுப்பிக்கப்பட்டுவிடும்.

அதன் பின்பு, நீங்கள் மீண்டும் UIDAI வெப்சைட்டுக்கு சென்று ஆதார் கார்ட்டை ஆன்லைனில் டவுன்லோட் (Aadhaar Card Download) செய்து கொள்ளலாம். இதுபோன்ற அப்டேட்டுக்கு முன்னதாக ரூ.50 பணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது, செப்டம்பர் 14ஆம் தேதி வரையில், இலவசமாக சேவை வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Free Aadhaar Card Update Ends September 14, How To Update Name, Address Through Online in UIDAI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X