Home
News

ஆதாருக்கு வந்த அப்டேட்.. அடுத்த 3 மாதம் கெடு.. 10 ஆண்டுகள் அப்டேட் கட்டாயம்.. டிச.14க்கு அப்புறம்?

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது, ஆதார் கார்டில் (Aadhaar Card) 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவரங்களை அப்டேட் செய்யாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருமணம் செய்தபின்பு கணவர் பெயரை அப்டேட் செய்யாதவர்கள் மற்றும் முகவரி விவரங்களை மாற்றாமல் வேறு பகுதியில் வசிப்பவர்களுக்கும் கெடு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது வரையில் முக்கியமான எதிர்கால திட்டங்களுக்கு மிகவும் பிரதானமான ஆவணமாக ஆதார் கார்டு பார்க்கப்படுகிறது. இதனால், அதில் கொடுக்கப்படும் பெயர், முகவரி, வயது, மொபைல் நம்பர் போன்றவற்றில் மக்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகி விட்டது.

அடுத்த 3 மாதம் கெடு.. 10 ஆண்டு அப்டேட் கட்டாயம்.. டிச.14க்கு அப்புறம்?

இதனால், இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது, (Unique Identification Authority of India) ஆதார் கார்ட்டை அப்டேட் செய்யும் மக்களுக்கு பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் வழங்கிவருகிறது. அந்த வரிசையில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் விவரங்களை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் ஒரு பகுதியைவிட்டு வேறு பகுதிக்கு சென்றவர்கள், ஆதார் கார்ட்டில் கொடுத்த மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் விவரங்களை பயன்படுத்தாதவர்கள், திருமணம் செய்துகொண்ட மகளிர் அவர்களது தந்தை பெயருக்கு பதிலாக கணவர் பெயரை மாற்றாமல் இருப்பவர்கள் உள்ளிட்டோர் கட்டாயம் அதை புதுப்பிக்க வேண்டும்.

அதேபோல குழந்தைகளுக்கு 15 வயது கடந்த பின்பும் அவர்களது ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் (Aadhaar Biometric Update) விவரங்களை புதுப்பிக்காதவர்களும் உடனடியாக அதை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இதில் பயோமெட்ரிக் அப்டேட்டை தவிர மற்ற விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க முடியும்.

இப்படி புதுபிக்க ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், மக்களிடையே ஆதார் அப்டேட் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அந்த கட்டணத்தை ரத்து செய்தது. குறிப்பிட்ட காலகெடுவுக்குள் ஆன்லைனில் ஆதார் விவரங்களை புதுப்பித்தால், ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அறிவித்தது.

இந்த இலவச அப்டேட் கெடு வரும் செப்டம்பர் 14 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இந்த சூழலில் இந்த கெடுவை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது ஆதார் ஆணையம். அதாவது, வரும் டிசம்பர் 14ஆம் தேதி வரையில் நீங்கள் இலவசமாக ஆதார் கார்ட்டை புதுப்பித்து கொள்ளலாம்.

இதில் ஆதார் கார்டு பெயர் மாற்றுதல் (Aadhaar Card Name Change), ஆதார் கார்டு முகவரி மாற்றுதல் (adhaar Card Address Change), ஆதார் கார்டு இமெயில் மாற்றுதல் (Aadhaar Card Email Change) உள்ளிட்டவை அடங்கும். இப்போது, ஆதார் கார்ட்டில் எப்படி விவரங்களை புதுப்பிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆதார் கார்டு விவரங்களை அப்டேட் செய்வது எப்படி? உங்களது பிரவுசரில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான (UIDAI Website) பக்கத்துக்கு செல்லுங்கள். அந்த பக்கத்தில் உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்ய ஆப்சன்கள் வழங்கப்பட்டிருக்கும். அதை தேர்ந்தெடுத்த பின்பு, அங்கு இடம்பெற்றிருக்கும் மை ஆதார் (My Aadhaar) டேபை கிளிக் செய்யுங்கள்.

இப்போது, அப்டேட் யுவர் ஆதார் (Update Your Aadhaar) டேப் தோன்றும். அதை கிளிக் செய்தால், அப்டேட் ஆதார் டீடெய்ல்ஸ் ஆன்லைன் (Update Aadhaar Details Online) பக்கத்துக்கு செல்ல முடியும். இப்போது, உங்களது ஆதார் எண் கேட்கப்படும். அதை உள்ளீடு செய்த பின்பு, அதனுடன் இணைக்கப்பட்டிகுக்கும் மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும்.

அதையும் அங்கு தோன்றும் கேப்ட்சா வெரிபிகேஷனையும் முடித்துவிட்டால், நீங்கள் மாற்ற வேண்டிய பெயர், முகவரி போன்ற விவரங்களை அப்டேட் செய்துகொள்ளலாம். அப்டேட் செய்தபின்பு புரோசீடு டூ அப்டேட் ஆதார் (Proceed To Update Aadhaar) ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

அப்போது, பெயர், முகவரிக்கு தேவையான டாக்குமெண்ட்ஸ் கேட்கப்படும். அதை அப்லோட் செய்துவிட்டால், உங்களின் மொபைல் நம்பருக்கும், இமெயிலுக்கும் சர்வீஸ் ரிக்கொஸ்ட் நம்பர் (Service Request Number) அனுப்பி வைக்கப்படும். அதை வைத்து நீங்கள் உங்களது அப்ளிகேஷனை டிராக் செய்து கொள்ள முடியும்.

இந்த அப்டேட் உங்களது ஆதார் கார்ட்டில் 15 வேலை நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டுவிடும். அதன் பின்பு, நீங்கள் ஆதார் கார்ட்டை ஆன்லைனில் டவுன்லோட் (Aadhaar Card Download) செய்து கொள்ளலாம் அல்லது உங்களது முகவரிக்கு அனுப்ப கோரிக்கை வைத்து பெற்று கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Free Aadhaar Card Update Deadline Extended To December 14, How to Update Aadhaar Online After 10 Years
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X