Home
News

அக்.1 முதல் ஆதாரில் அதிரடி மாற்றம்.. 5 முதல் 17 வயது வரை.. புதிய ரூல்ஸ்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

இந்தியாவில் அரசு வழங்கும் நலத் திட்டங்கள் முதல் வங்கி சேவைகள் வரை அனைத்திற்கும் ஆதார் (Aadhaar) கார்டு தேவைப்படுகிறது. இப்படி அனைத்து விஷயத்துக்கும் தேவைப்படும் ஆதார் கார்டை எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும்.

இந்நிலையில் 5 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு, வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பயோமெட்ரிக்கை புதுப்பிக்க எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை என யுஐடிஏஐ (UIDAI) அறிவித்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

 அக்.1 முதல் ஆதாரில் அதிரடி மாற்றம்.. 5 முதல் 17 வயது வரை..

இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் புகைப்படம் மற்றும் அடிப்படை விவரங்களின் அடிப்படையில் பால் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இந்த வயதில் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்படுவதில்லை. மேலும் குழந்தைகள் 5 வயதை கடந்ததும் ஆதார் மையத்தில் கைரேகை, கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். பின்னர் 15 வயதை அடைந்ததும் இந்த பயோமெட்ரிக் தகவல்களை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.

முன்பு 5 முதல் 17 வயது வரையில் இருக்கும் குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் அப்டேட் செய்ய கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த கட்டணமானது கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு விதிகளின் கீழ் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதாவது கடந்த செப்டம்பர், 2025 முதல் ஓராண்டுக்கு பயோ-மெட்ரிக் புதுப்பிப்பு கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே 5 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு, வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பயோமெட்ரிக்கை புதுப்பிக்க எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. குறிப்பாக செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்யும் 5 முதல் 17 வயது வரையில் பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்யும் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த இலவசம் பொருந்தும். மேலும் இந்த இலவசம் முடிந்ததும் அதாவது அக்டோபர் 1ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஆகவே கட்டணத்தை தவிர்க்க இப்போதே குழந்தைகளுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை செய்து கொள்வது நல்லது. அதுவும் குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை சரியான நேரத்தில் புதுப்பித்து வைத்திருப்பது முக்கியம். இது அவர்கள் உயர்கல்வி செல்லும் போது ஆதார் தேவைப்படும் சமயங்களில் ஏற்படக்கூடிய அங்கீகாரச் (authentication) சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

இதுதவிர அரசின் கல்வி உதவித்தொகைகள், கல்வி சார்ந்த திட்டங்கள் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற ஆதார் அட்டை தேவைப்படுகிறது. அதேபோல், NEET, JEE, CUET போன்ற முக்கிய நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்போதும் ஆதார் அட்டை அவசியமாகிறது.

ஆதார் அப்டேட் செய்ய வழிமுறைகள்
ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை ஆன்லைன் மூலம் புதுப்பிக்க முடியாது. குழந்தைகளைப் பெற்றோர் நேரடியாக அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு அழைத்துச் சென்று பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும். உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்தை புவன் ஆதார் போர்டல் (Bhuvan Aadhaar Portal) மூலம் எளிதாகக் கண்டறியலாம்.

குறிப்பாக ஆதார் அட்டையை அப்டேட் செய்ய கண்டிப்பாகக் குழந்தைகளின் ஆதார் அட்டையுடன் குழந்தையையும் ஆதார் மையத்துக்குப் பெற்றோர் அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு குழந்தைகளின் கைரேகைகள், கருவிழிப் படலம் மற்றும் புகைப்படம் ஆகியவை பதிவு செய்யப்படும்.

 அக்.1 முதல் ஆதாரில் அதிரடி மாற்றம்.. 5 முதல் 17 வயது வரை..

மேலும் ஆதார் விவரங்களைப் புதுப்பித்த பிறகு, ஆதார் மையத்தில் புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) கொண்ட ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். அந்த எண்ணை பயன்படுத்தி, ஆதார் புதுப்பிப்பு கோரிக்கையின் நிலையை ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம்.

அதுவும் பயோமெட்ரிக் விவரங்களை மட்டும் புதுப்பிக்க கட்டணம் இல்லை. ஆனால் பெயர், பாலினம், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை மாற்ற ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டும். வயது வித்தியாசமின்றி இந்தக் கட்டணம் பொருந்தும்.

Best Mobiles in India

English summary
Free Aadhaar Biometric Update for Children Till September 30: Check How to Do It
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X