Home
News

இலவசமாக 130GB டேட்டா.. அள்ளிக்கொடுத்த டெலிகாம் நிறுவனம்.. யாருக்கெல்லாம் இது கிடைக்கும்?

இந்தியாவில் உள்ள எந்தவொரு டெலிகாம் (Telecom) நிறுவனமும் செய்ய முடியாத ஒரு அசாதாரணமான வேலையை ஒரே ஒரு டெலிகாம் நிறுவனம் செய்துள்ளது. அதன் பயனர்களுக்கு 130GB டேட்டாவை இலவசமாக (Free data) வழங்க துவங்கியுள்ளது என்று அறிவித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

எந்த நிறுவனம்ப்பா இது? அதன் வாடிக்கையாளர்களுக்கு தாராள மானஸாக 1 இல்லை 2 இல்லை மொத்தம் 130GB டேட்டாவை அசால்ட்டாக வழங்கி அசத்தியுள்ளது. ஆம், சரியாக தான் படித்தீர்கள். லம்ப்பாக 130 ஜிபி டேட்டாவை (Free 130GB data) இப்போது ஒரு டெலிகாம் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கும் 130 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்கியது எந்த டெலிகாம் நிறுவனம் தெரியுமா?

இலவசமாக 130GB டேட்டா.. அள்ளிக்கொடுத்த டெலிகாம் நிறுவனம்.. யாருக்கு?

இலவசமாக 130GB டேட்டா.. அள்ளிக்கொடுத்த டெலிகாம் நிறுவனம் (130GB data for free provided by the telecom company):

வேறு யாருமில்லை, நமது வோடபோன் ஐடியா (Vodafone Idea) டெலிகாம் நிறுவனம் தான். ஆம் மக்களே இந்தியாவில் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக திகழும் வோடபோன் ஐடியா நிறுவனம் தான் இந்த வேலையை செய்துள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின் படி, வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நம்ப முடியாத சலுகையை வழங்க துவங்கியுள்ளது.

விஐ (Vi) நிறுவனம் 130ஜிபி டேட்டாவை இலவசமாக அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க துவங்கியுள்ளது. வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் இந்த புதிய இலவச சலுகையை விஐ கேரண்டி (Vi Guarantee) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த சலுகையில் கீழ் சேர்க்கப்படும் ஒவ்வொரு புது வாடிக்கையாளர்களுக்கும் இந்த இலவச 130GB டேட்டா கிடைக்குமென்று நிறுவனம் அறிவித்துள்ளது. இது தடையில்லாத ஹை-ஸ்பீட் டேட்டாவை (high speed data) அனுபவிக்க அனுமதிக்கிறது.

இது 4ஜி (4G) மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் (5G smartphone) பயனர்கள் இருவருக்கும் இப்போது அணுக கிடைக்கும் ஒரு புதிய சலுகையாக வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் அறிவித்துள்ளது. சரி, இப்போது இந்த 130ஜிபி டேட்டாவை விஐ நிறுவனம் எப்படி அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்பதை பற்றி பார்க்கலாம். வோடபோன் ஐடியா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி, இது பிரிக்கப்பட்ட 10GB டேட்டாவாக (10GB data) 13 மாதங்களுக்கு (13 months) வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இலவசமாக 130GB டேட்டா.. அள்ளிக்கொடுத்த டெலிகாம் நிறுவனம்.. யாருக்கு?

வோடபோன் ஐடியா அல்லது விஐ இலவச 130ஜிபி டேட்டா நன்மை (Vodafone Idea or Vi Free 130GB Data Benefit):

அதாவது, விஐ உடன் இணைந்து, ரூ. 239 விலைக்கு மேல் உள்ள ரீசார்ஜ் திட்டங்களை (Vi Rs 239 Prepaid Plans) ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இலவச டேட்டா கிடைக்கும். அதுவும், குறிப்பாக ஒவ்வொரு 28வது நாளுக்கு பிறகு இந்த 10GB இலவச டேட்டா பயனர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல், தொடர்ந்து 13 மாதங்களுக்கு 10GB டேட்டா என்ற கணக்கில் மொத்தம் 130GB டேட்டா வழங்கப்படும்.

இந்த 10GB டேட்டாவை வாடிக்கையாளர்கள் உடனடியாகவும், நேரடியாகவும் பயன்படுத்த முடியாது. அந்தந்த வாடிக்கையாளர் தேர்வு செய்துள்ள தினசரி டேட்டா வரம்பு (daily data limit) முடிந்த பிறகு மட்டுமே இந்த இலவச 10GB டேட்டாவை வாடிக்கையாளர்களால் பயன்படுத்த முடியும் என்று விஐ கூறியுள்ளது. இத்துடன் ப்ரீபெய்ட் திட்டத்துடன் கிடைக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் (unlimited voice calls) நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) போன்ற நன்மைகளை வாடிக்கையாளர்கள் அனுபவித்துக்கொள்ளலாம்.

கூடுதல் மொபைல் டேட்டாவிற்கு, வாடிக்கையாளர்கள் 121199 என்ற எண்ணை அழைக்க வேண்டும் அல்லது *199*199#க்கு டயல் செய்ய வேண்டும். Vi Guarantee சலுகை தற்போது 5G போன் வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், அசாம் மற்றும் வடக்கு மற்றும் ஒரிசாவில் வசிக்கும் மக்கள் இந்த பலனைப் பெற முடியாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Free 130GB Data For Prepaid Plan Customers Vodafone Idea Telecom Brand Special Data Benefit Who Can Claim It
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X