வாட்ஸ்அப் செயலியில் நூதன மோசடி: எந்தவிதமான லிங்க் கிளிக் செய்யாமலே ரூ.15 லட்சத்தை இழந்த பெண்.!

|

வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலியில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் வாட்ஸ்அப்பில் மகள் போல் மெசேஜ் செய்த மோசடிகாரர்களிடம் ரூ15 லட்சத்தை இங்கிலாந்து சேர்ந்த பெண்மணி இழந்துள்ளார். மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ற்போது வளர்ந்து வரும்

அதாவது தற்போது வளர்ந்து வரும் இந்த டிஜிட்டல் உலகத்தில் ஆன்லைன் மூலம் பணத்தை நூதனமாகக் கொள்ளையடிக்கும் ஹேக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பணத்தைத் திருட முற்படும் இவர்கள் கையாளும் யுக்திகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேஇருக்கிறது.

நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..

தற்போது ஆன்லைனில் எந்தவித

அதன்படி தற்போது ஆன்லைனில் எந்தவிதமான லிங்க் கிளிக் செய்யாமலே ரூ.15 லட்சத்தை இழந்துள்ளார் இங்கிலாந்தை சேர்ந்த பவுலா பௌஜிதன். அதாவது வித்தயாசமான முறையில் இந்த பெண்மணியை வலையில் சிக்கவைத்துள்ளனர் மோசடிக்காரர்கள். இந்த பெண்ணின் மகள் போன்று மெசேஜ் செய்து, பணத்தை சுருட்டியுள்ளனர்.

ரூ.15000 விலைப்பிரிவில் புது ஸ்மார்ட்போன்- சமீபத்திய ஆண்ட்ராய்ட் 12, 5ஜி ஆதரவோடு விவோ ஒய்33இ 5ஜி!ரூ.15000 விலைப்பிரிவில் புது ஸ்மார்ட்போன்- சமீபத்திய ஆண்ட்ராய்ட் 12, 5ஜி ஆதரவோடு விவோ ஒய்33இ 5ஜி!

 மோசடிக்காரர்களின் மெசேஜ் தனது மகள்

குறிப்பாக மோசடிக்காரர்களின் மெசேஜ் தனது மகள் அனுப்பியது போன்றே இருந்ததால் ஏமாந்துவிட்டதாகவும், குட்நைட் மெசேஜ் வரவில்லை என்ற சமயத்தில் தான் சந்தேகம் வந்து விசாரித்ததாகவும் தெரிவித்துள்ளார் பவுலா பௌஜிதன்.

நீங்க சொல்லுவிங்க., நாங்க செய்வோம்- மெசேஜ் அனுப்பிய பிறகும் எடிட் செய்யலாம்: வாட்ஸ்அப் எடிட் பட்டன் சோதனை!நீங்க சொல்லுவிங்க., நாங்க செய்வோம்- மெசேஜ் அனுப்பிய பிறகும் எடிட் செய்யலாம்: வாட்ஸ்அப் எடிட் பட்டன் சோதனை!

இதுகுறித்து பவுலா பௌஜிதன் கூறியது

மேலும் இதுகுறித்து பவுலா பௌஜிதன் கூறியது என்னவென்றால், என்னுடைய மகள் பெயரில் வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் வந்தது. பழைய நம்பரைடெலிட் செய்துவிடுங்கள். இதுதான் என்னுடைய புதிய நம்பர் என்று தெரிவித்தனர். பின்பு சிறுது நேரம் சாதாரணமாக தான் சாட் செய்தோம். மகள் போன்றே தான் அன்றாட நிகழ்வுகள் குறித்து பேசினார்கள்.

ரூ.29,999-க்கு விற்கப்பட்ட ஸ்மார்ட்டிவி ரூ.8,999 மட்டுமே: 70% தள்ளுபடியில் ஸ்மார்ட்டிவிகள்- அமேசான் சலுகை!ரூ.29,999-க்கு விற்கப்பட்ட ஸ்மார்ட்டிவி ரூ.8,999 மட்டுமே: 70% தள்ளுபடியில் ஸ்மார்ட்டிவிகள்- அமேசான் சலுகை!

அதன்பின்பு பணம் தேவைப்படுகிறது

அதன்பின்பு பணம் தேவைப்படுகிறது அக்கவுண்டில் அனுப்பமுடியுமா என மெசேஜ் வந்தது. நான் எப்போதும் போன்றே அனுப்புகிறேன் என்று சொன்னதும், வங்கி கணக்கு விவரங்கள் மெசேஜில் வந்தது. குறிப்பாக மெசேஜில் சொன்னப்படியே பல பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளார் பவுலா பௌஜிதன். மேலும் அன்று இரவு அந்த பெண்மணிக்கு குட் நைட் மெசேஜ் வரவில்லை என்பதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மகளை தொடர்புகொண்ட போது தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அந்த பெண்மணி உணர்ந்துள்ளார்.

சென்னை யூடியூபர் கைது: கோயில் திருப்பணிக்கு ரூ.34 லட்சம் வசூல்- பூதாகரமாகும் விவகாரம்., என்ன நடந்தது?சென்னை யூடியூபர் கைது: கோயில் திருப்பணிக்கு ரூ.34 லட்சம் வசூல்- பூதாகரமாகும் விவகாரம்., என்ன நடந்தது?

அவரும், அவரது மகளும் வங்கி

உடனே அவரும், அவரது மகளும் வங்கி அதிகாரிகளை தொடர்புகொண்டதில், கடைசி பணப்பரிவர்த்தனையை மட்டுமே தடுத்திட முடிந்துள்ளது. ஆனாலும் மற்றவற்றை தடுத்திட முடியவில்லை. சுமார் 16 ஆயிரம் பவுண்டு (இந்திய மதிப்பில் ரூ.15 லட்சம்) வாட்ஸ்அப் மோசடியில் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்ப முடியாத அல்டிமேட் சலுகையுடன் Oppo ஸ்மார்ட்போன்கள்.. இன்றைய பெஸ்ட் டீல் இதோ..நம்ப முடியாத அல்டிமேட் சலுகையுடன் Oppo ஸ்மார்ட்போன்கள்.. இன்றைய பெஸ்ட் டீல் இதோ..

 லிங்க் கிளிக் செய்வதில் மக்கள்

தற்போது லிங்க் கிளிக் செய்வதில் மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதால், புதிய முயற்சியாக வாட்ஸ்அப் கணக்கை குறிவைக்க மோசடிகாரர்கள் தொடங்கியுள்ளனர். எனவே வாட்ஸ்அப் செயலியில் தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்பை எடுக்காதீர்கள். அதேசேமயம் தெரியாத நம்பரில் வந்த மெசேஜ்களுக்கு ரிப்ளை செய்யாதீர்கள். குறிப்பாக ஓடிபியை யாருடனும் பகிர வேண்டாம்.

Best Mobiles in India

English summary
Fraudsters who texted like her daughter on WhatsApp: Woman loses Rs 15 lakh: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X