4 வயது சிறுமி கண்டுபிடித்த டைனோசர் கால்தடம்: 220 மில்லியன் ஆண்டுக்கு முந்தையது-டைனோசர் எப்படி நடந்தது தெரியுமா
4 வயதே ஆன சிறுமி டைனோசரின் காலதடத்தை கண்டுபிடித்துள்ளார். 220 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எப்படி நடந்தது என்பதை புரிந்துகொள்ள இந்த கால்தடம் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

டைனோசர், ஜூராசிக் பார்க்
டைனோசர், ஜூராசிக் பார்க், காங், டிராகன் போன்ற இனங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இது கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்களாக கூறப்படுகிறது. இந்த உயிரினங்கள் குறித்த திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி மக்களிடையே பலத்த வரவேற்பு பெற்று வருகிறது.

பெரிய கால்தடம் கண்டுபடிப்பு
அதன்படி வெல்ஷ் பகுதியில் உள்ள பெம்ட்ரிக்ஸ் கடற்கரையில் தந்தை ரிச்சர்ட், தாய் சாலி உடன் நான்கு வயது குழந்தையான லிலி வில்டர் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்க பெரிய கால்தடம் ஒன்று பார்த்த லிலி வில்டர், தனது பெற்றோர்களிடம் அதை காண்பித்துள்ளார்.

லில்லி தோள்பட்டை அளவு உயரமுள்ள ஒரு பாறையின் மீது இந்த கால்தடம் இருந்துள்ளது. சிறுமி அந்த கால்தடத்தை பார்த்து தனது தந்தையிடம் அதை காண்பித்துள்ளார். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர்கள் தொல்லியல் ஆய்வாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நிபுணர்கள் காலடி தடத்தை ஆய்வு செய்தனர். இது 220 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் கால்தடம் என்பது தெரியவந்துள்ளது. டைனோசர் எப்படி நடந்திருக்கும் என்பதை புரிந்து கொள்வதற்கு இது உதவும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

விஞ்ஞானிகள் நம்பிக்கை
ஈர மண்ணால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதால் இந்த கால்தடம் இத்தனை ஆண்டுகளாக இருந்துள்ளது என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
டைனோசர்கள் எவ்வாறு நடந்தது
220 மில்லியன் ஆண்டுகள் பழமையான கால்தடம் டைனோசர்கள் எவ்வாறு நடந்தன என்பதை நன்கு புரிந்துகொள்ள உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். டைனோசர் கால்தடங்களுக்கு பெயர் பெற்ற கடற்கரை இது என்றாலும். இந்த கால்தடம் இதுவரை கண்டிராத சிறந்த மாதிரி இது என விவரித்தார்.

எந்தவகை டைனோசர் என்பது தெரியவில்லை
இந்த கால்தடம் சுமார் 10 சென்டிமீட்டர் நீளமுள்ளது. இதையடுத்து இந்த கால்தடத்தின் மூலம் டைனோசரின் உயரம் 75 சென்டிமீட்டராக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல் 220 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எந்த வகை டைனோசர் இந்த கால்தடத்தை உருவாக்கியது என்பது தீர்மானிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Source: ndtv.com


Click it and Unblock the Notifications