ஒரு வாரத்திற்குள் 4 மில்லியன் அப்க்ரேடுகளைப் பெற்ற விண்டோஸ் 8

By Karthikeyan
|
ஒரு வாரத்திற்குள் 4 மில்லியன் அப்க்ரேடுகளைப் பெற்ற விண்டோஸ் 8

கடந்த வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய இயங்கு தளமான விண்டோஸ் 8ஐ களம் இறக்கியது. அது முதல் அதாவது கடந்த வெள்ளிக் கிழமை முதல் நேற்று செவ்வாய் கிழமை வரை ஏறக்குறைய 4 மில்லியன் சாதனங்கள் இந்த விண்டோஸ் 8 இயங்கு தளத்தை அப்க்ரேட் செய்திருப்பதாக மைக்ரோசாப்டின் தலைமை இயக்குனர் ஸ்டீவ் பால்மர் தெரிவித்திருக்கிறார்.

அதோடு வரும் காலங்களில் விண்டோஸ் 8 இன்னும் ஏராளமாக விற்பனையாகும் என்றும் அவர் நம்புகிறார். குறிப்பாக இந்த புதிய இயங்கு தளம் வர்த்தகத்திற்கு பெரிதும் பயன்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக இந்த புதிய இயங்கு தளம் பழைய விண்டோஸ் 7 இயங்கு தளத்தின் விற்பனையை முறியடித்திருக்கிறது.

இந்த விண்டோஸ் 2 இரண்டு மாடல்களில் வருகிறது. அதாவது விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8 ப்ரோ என்ற இரண்டு மாடல்களில் வருகிறது. குறிப்பாக வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு விண்டோஸ் 8 என்டர்ப்ரைஸ் டுகோ, டைரக்ட் அக்சஸ், ப்ராஞ்ச் கேச், பிட் லாக்கர் மற்றும் அப்லாக்கர் போன்ற வசதிகளையும் வழங்குகிறது. மேலும் எஆர்எம் டேப்லெட்டுகளுக்கு விண்டோஸ் ஆர்டி என்ற இயங்கு தளத்தையும் மைக்ரோசாப்ட் களமிறக்கி இருக்கிறது.

இந்த புதிய விண்டோஸ் 8 இயங்கு தளம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10 என்ற ப்ரவுசரையும் தாங்கி வருகிறது. எனினும் 2020 ஜனவரி 7 வரை விண்டோஸ் 7 இயங்கு தளத்திற்கு தொழில் நுட்ப சப்போர்ட்டை வழங்க மைக்ரோசாப்ட் முடிவெடுத்திருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X