வன விலங்குகளை வேட்டையாடி யூடியூபில் வெளியீடு: 4பேர் கைது.!

|

அரியலூர் மாவட்டம் அருகில் உள்ள ஜெயங்கொண்டம் ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஏக்கர் பரப்பளிவில் காடுகள் உள்ளன. இந்த காடுகளில் அதிகளவு மான், மயில், உடும்பு, பல்வேறு வனவிலங்குகள் வசித்து
வருகின்றன.

 மாவட்ட வனத்துறையினரிடம் புகார்

மாவட்ட வனத்துறையினரிடம் புகார்

இந்நிலையில் அந்த காடுகளில் உள்ள வனவிலங்குகளை வேட்டையாடி அதைச்சமைத்துச் சாப்பிடும் வீடியோவை சிலர் யூடியூபில் வெளியிட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக அரியலூர் போலீஸாருக்குத் தகவல் வந்துள்ளது. உடனே அவர்கள்மாவட்ட வனத்துறையினரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

மணக்காடு

மணக்காடு

பின்பு வனத்துறை அலுவலர் இளங்கோவன் தலைமையில் உடையார்பாளையம் அருகே மணக்காடு என்ற பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் நான்கு நபர்கள் இரசக்கர வகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். உடனே அவர்களைப் பிடித்து விசாரித்தில் அவர்களது கையில் ஹைடெக்கான ஆப்பிள் லேப்டாப், போன், கேமராபோன்ற சில சாதனங்கள்
இருந்தன.

ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா! இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்!ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா! இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்!

சிறையில் அடைத்தனர்

சிறையில் அடைத்தனர்

மேலும் அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன, அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை, சுப்பிரமணி, கார்த்திக் அலெக்ஸ் பாண்டியன் ஆகிய நால்வரையும் கைது செய்து பின்பு அவர்களிடம் இருந்த லேப்டாப், கேமரா,மொபைல் உள்ளிட்ட சாதனங்களை பறிமுதல் செய்த ஜெயங்கொண்டம் போலீஸார் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

வில்லேஜ் ஹண்டர்

வில்லேஜ் ஹண்டர்

மேலும் இவர்கள் நால்வரும் காடுகளில் வளரக்கூடிய வனவிலங்குகளை எப்படி வேட்டையாடுவது என்றும், அதை எப்படி சமைத்துச் சாப்பிடுவது என்றும் வில்லேஜ் ஹண்டர் (Village Hunter) என்ற பெயரில் யூடியூப் கணக்கை தொடங்கி அதிர் தொடர்ந்து வீடியோக்களைப் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக டிஸ்கவரியில் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே செய்திருக்கிறார்கள்.

 5.59 லட்சம் சந்தாதாரர்கள் கிடைத்தனர்.

5.59 லட்சம் சந்தாதாரர்கள் கிடைத்தனர்.

இவர்கள் ஆரம்பித்த இந்த யூடியூப் சேனலுக்கு 5.59 லட்சம் சந்தாதாரர்கள் கிடைத்தனர். வீடியோக்களில் ஒன்று 10 மில்லியன் பார்வைகளைப் பெற்றது எனத் தகவல் கிடைத்துள்ளது. பின்பு இதுவரை 25-க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை வேட்டியாடி அதை யூடியூப்பில் போட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்திருக்கிறார்கள்.

 யூடியூப் நிறுவனமும் பணம் கொடுக்கும்

யூடியூப் நிறுவனமும் பணம் கொடுக்கும்

இதைப் பற்றி அந்த இளைஞர்களிடம் ஏன் இப்படி செய்தீர்கள், எனக் கேட்டால் இந்த மாதிரி வீடியோக்களை போட்டால்தான்
அதிகமான மக்கள் பார்ப்பாங்க. யூடியூப் நிறுவனமும் பணம் கொடுக்கும், நாங்களும் பிரபலம் ஆகிவிடுவோம் என்று
சொன்னார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Four Man got Arrested for Hunting Wild Animals: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X