நான்கு ஏலியன் நாகரிகங்களால் பூமிக்கு 'தீங்கா'? பூமி தாக்கப்படுமா? ஷாக் கொடுத்த ஆய்வின் ரகசியம்..

|

இந்த பிரபஞ்சம் பல அதிசயங்களை தன்னுள் மறைத்து வைத்துள்ளது. இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் சுவாரசியமான மற்றும் அதிசயமான விஷயங்கள் எல்லாம் நம்முடைய பூமி கிரகத்தில் மட்டுமே காணப்படுகிறது. பூமி மட்டும் ஏன் இப்படிச் சிறந்த கிரகமாகப் பார்க்கப்படுகிறது. காரணம், வேறு எந்த கிரகத்திலும் இல்லாத அதிசய உயிர்கள், நம்முடைய பூமி கிரகத்தில் மட்டுமே காணப்படுகிறது. இதில் உள்ள மற்றொரு சிறப்பான விஷயம் என்னவென்றால், அறிவார்ந்த மனித உயிர் இங்கு மட்டுமே உயிர் வாழ்கிறது.

இந்த பிரபஞ்சத்தில் வேறு அறிவார்ந்த உயிர்கள் இருக்க வாய்ப்பிருக்கிறதா?

இந்த பிரபஞ்சத்தில் வேறு அறிவார்ந்த உயிர்கள் இருக்க வாய்ப்பிருக்கிறதா?

அப்படியானால், இந்த பிரபஞ்சத்தில் வேறு எந்தவொரு மூலையிலும் உயிர்கள் அல்லது அறிவார்ந்த உயிர்கள் வாழவில்லையா என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கலாம். உண்மையை, சொல்லப் போனால், இந்த பிரபஞ்சத்தில் அறிவார்ந்த வாழ்வின் அறிகுறிகளை நாம் இன்னும் கண்டறியவில்லை. நமக்குத் தெரியாத பல புதிர்களை இந்த பிரபஞ்சம் தன்னுள் மறைத்து வைத்துள்ளது என்பதால், நமக்குத் தெரியாத பல விஷயங்களில் வேற்று கிரக உயிர்கள் இருக்கிறதா இல்லையா என்பதை நாம் இப்போது வரை உறுதியாக ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியவில்லை.

மனிதர்கள் மட்டும் தான் அறிவார்ந்த உயிர்கள் என்று கருதுவது தவறு

மனிதர்கள் மட்டும் தான் அறிவார்ந்த உயிர்கள் என்று கருதுவது தவறு

ஆனால், சதிக்கோட்பாளர்களின் கருத்துக்கள் இப்படியானதல்ல, நம்முடைய பிரபஞ்சத்தில் கட்டாயம் எங்கோ ஒரு மூலையில் அறிவார்ந்த உயிர்கள் மற்றும் விசித்திரமான உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் இவர்கள். அதேபோல், நமக்குத் தெரிந்த இந்த பிரபஞ்சத்தில், எல்லா இடங்களிலும் நாம் மட்டுமே புத்திசாலித்தனமான வாழ்க்கை என்று கருதுவது மிகவும் தவறான கருத்து என்கிறார்கள் சதிக்கோட்பாளர்கள். காரணம், நம்மை விட அறிவார்ந்த சில ஏலியன் நாகரிகம் உயிருடன் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?

நான்கு

நான்கு "தீங்கு விளைவிக்கும்" அன்னிய நாகரீகங்கள்

அதேபோல், இவர்கள் குறிப்பிடும் அனைத்து அன்னிய உயிர்களும் பூமிவசிகளுடன் நட்பாக இருக்க முடியாது என்ற ஒரு பெரிய ஷாக்கிங் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ஒரு புதிய தாள், நமது வீட்டு விண்மீன் மண்டலமான பால்வீதியில் குறைந்தது நான்கு "தீங்கு விளைவிக்கும்" அன்னிய நாகரீகங்கள் வாழ்கின்றன என்று கூறுகிறது. அதாவது, நான்கு வேற்றுகிரகவாசிகளின் நாகரிகம் அல்லது ஏலியன் நாகரிகம் வாழ்கின்றது என்பதை இது குறிக்கிறது. நினைவில் கொள்ளுங்கள், காகிதம் இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை மற்றும் இதுவொரு வினோதமான கணக்கீடு.

கபல்லெரோ உருவாக்கிய சூத்திரம் சொல்லும் விஷயம் என்ன?

கபல்லெரோ உருவாக்கிய சூத்திரம் சொல்லும் விஷயம் என்ன?

ஸ்பானிஷ் ஆராய்ச்சியாளர் ஆல்பர்டோ கபல்லரோவால் இது வெளியிடப்பட்டுள்ளது. கபல்லெரோ ஒரு வானியற்பியல் வல்லுநர் அல்ல, ஆனால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் அஸ்ட்ரோபயாலஜிக்கு அவர் வேற்றுகிரகவாசிகள் பற்றி இதற்கு முன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கணக்கீடுகளைச் செய்ய, கபல்லெரோ ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்தியுள்ளார். இது தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் எவ்வாறு நாகரிகங்களை ஒருவருக்கொருவர் தாக்குவதைக் குறைக்கின்றன என்பதைக் குறிக்கிறது.

விண்வெளி பயணத்திற்கு ஸ்பேஸ் சூட் இவ்வளவு முக்கியமா? புது சூட் தயாரிக்க 2 நிறுவனங்களுடன் நாசா ஒப்பந்தம்..விண்வெளி பயணத்திற்கு ஸ்பேஸ் சூட் இவ்வளவு முக்கியமா? புது சூட் தயாரிக்க 2 நிறுவனங்களுடன் நாசா ஒப்பந்தம்..

பூமிக்கு 'இதனால்' தான் அதிக ஆபத்து தெரியுமா?

பூமிக்கு 'இதனால்' தான் அதிக ஆபத்து தெரியுமா?

வரலாற்று ரீதியாக மனிதர்கள் எவ்வாறு ஒருவருக்கொருவர் பிரதேசங்களைத் தாக்கினார்கள் என்பது பற்றிய தரவுகளைப் பயன்படுத்தி இந்த சூத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. பால்வீதியில் வாழக்கூடிய வெளிப்புறக் கோள்களைக் கலவையில் சேர்ப்பதன் மூலம், நமது விண்மீன் மண்டலத்தில் குறைந்தது நான்கு விரோதமான அன்னிய நாகரீகங்கள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கண்டறிந்துள்ளார். அப்போதும் கூட, வேற்றுக்கிரக உயிரினங்களால் பூமி அழிக்கப்படுவதை விட, ஒரு சிறுகோள் தாக்குதல் மூலம் பூமி அழிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று அவர் கண்டறிந்துள்ளார்.

வேறுபட்ட இரசாயன கலவை கொண்ட மூளைகள்

வேறுபட்ட இரசாயன கலவை கொண்ட மூளைகள்

இருப்பினும், வேற்று கிரக வாசிகளின் மனம் பற்றி நமக்குத் தெரியாத காரணத்தினாலும், வேற்று கிரக நாகரீகம் வேறுபட்ட இரசாயன கலவை கொண்ட மூளையைக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால், நாம் எதிர்பார்ப்பது போல் மிகவும் நட்பான நடத்தைகளை அவர்கள் கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளனர். இந்த கருத்தை நமக்குத் தெரிந்த வாழ்க்கையின் அடிப்படையில் மட்டுமே தான் உருவாக்கி சமர்ப்பித்ததாக கபல்லெரோ கூறியுள்ளார். புத்திசாலித்தனமான வேற்றுகிரகவாசிகள் பற்றி நமக்கு இன்னும் எதுவும் தெரியாது என்பதே உண்மை.

காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..

Best Mobiles in India

English summary
Four Malicious Alien Civilisations In The Milky Way Could Attack Earth But There Is A Twist : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X