நாமக்கல் : யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அடித்த கும்பல் சிக்கியது.!

மெசேஜில் உள்ள செல்போனை போலீஸார் கண்காணித்தனர். பின்பு அந்த எண்ணை போலீஸார் தேடியபோது அந்த செல்போன் சுவீட்ச் ஆஃப் செய்யப்பட்டது.

|

புதிய தொழில்நுட்பங்களை சிலர் தவறான முறையில் தான பயன்படுத்திவருகின்றனர் என்று கூறவேண்டும், அதன்படி யூடியூப் பார்த்து சமையல் செய்யக் கற்றுக்கொள்வது போல் நாமக்கல் மாவட்டத்தில் யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அடித்த கும்பலை கைது செய்துள்ளனர், அந்த கும்பலில் பெண் ஒருவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் : யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அடித்த கும்பல் சிக்கியது.!

நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் போலீஸாருக்கு குடிசை வீட்டில் கள்ளநோட்டு அடிப்பதாக செல்போன் தகவல் ஒன்று ரகசியமாக வந்துள்ளது, அதை தொடர்ந்து மெசேஜில் உள்ள செல்போனை போலீஸார் கண்காணித்தனர். பின்பு அந்த
எண்ணை போலீஸார் தேடியபோது அந்த செல்போன் சுவீட்ச் ஆஃப் செய்யப்பட்டது.

செல்போன் எண்

செல்போன் எண்

பின்பு போலீஸார் அந்த செல்போன் எண் அமைந்துள்ள விலாசத்தை கண்டுபிடித்தனர், அந்த இடம் பள்ளிப்பாளையம் அருகே
பாப்பாம்பாளையத்தில் இருந்தது. மேலும் செல்போன் எண் குறிப்பிட்ட இடம் ஒரு குடிசை வீடாக இருந்தது. மேலும் போலீஸார்
அந்த குடிசை வீட்டுக்குள் நுழைந்தனர்.

லேப்டாப், ஜெராக்ஸ் மெஷின்,கேன் மெஷின்கள்

லேப்டாப், ஜெராக்ஸ் மெஷின்,கேன் மெஷின்கள்

பின்னர் அந்த குடிசை வீட்டுக்குள் லேப்டாப், ஜெராக்ஸ் மெஷின், கேன் மெஷின்கள், 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் பிரிண்ட் செய்யப்பட்ட ஷீட்டுகள் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அந்த வீட்டுக்கு சொந்தக்காரரான சுகுமார், நாகூர்பானு என்கிற பெண்ணையும் உடனிருந்த இருவரையும் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

சுகுமார்

சுகுமார்

போலீஸார் நடத்திய விசாரணையில் சுகுமார் என்பவர் பிளாஸ்டிக் பைப்பக் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார், மூலப்பொருட்கள் விலையேற்றம், மின் கட்டண உயர்வு, வரி, வங்கிக்கடன் போன்ற பிரச்சனைகளால் தொழிலை
தொடர்ந்து நடத்த முடியாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனால் ஏற்பட்ட விரக்தியில், அதே ஊரில் பேக்கரி கடை நடத்தும் தனக்கு தெரிந்த நாகூர் பானுவிடம் தனது நிலையையும், கடன் சுமையையும் கூறி வருத்தப்பட்டுள்ளார். அப்போது நாகூர்பானு குறைந்த முதலீட்டில் பணம் சம்பாதிக்க எளிதாக வழி இருப்பதாகவும் அதற்கு மூளையை மட்டும் சற்று உபயோகப்படுத்தினால் போதும் என்றும் கூறியுள்ளார்.

நாகூர்பானு

நாகூர்பானு

அதன்படி நாகூர்பானு தனது திட்டத்தை தெரிவித்துள்ளார், அது என்னவென்றால் சமீபத்தில் யூடியூபில் கள்ளநோட்டுகளை எப்படி துல்லியமாக ஸ்கேனர்இ ஜெராக்ஸ் மெஷின்கள் மூலம் அடிக்கலாம் என்று பார்த்தேன், தோதான ஆள் இல்லாததால் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டேன் நீங்கள் ஒகே சொன்னால் நோட்டடிக்க ஆரம்பத்துவிடலாம் அதன்ப பின்னர் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று சுகுமாரிடம் தெரிவித்துள்ளார்.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு

பின்பு அதற்குதகுந்த கருவிகளை வாங்கி யாருக்கும் சந்தேகம் வாரத வகையில் சுகுமாரின் குடிசையிலேயே, தன்னுடன் நம்பிக்கையான மேலும் இருவரை சேர்த்துக்கொண்டு கள்ள நோட்டு அடிக்க ஆரம்பித்துள்ளனர். பின்பு அந்த பகுதியில் இதைப் பற்றி தெரிந்து கொண்ட ஒருவர் திருச்செங்கோடு போலீஸுக்கு தகவலாக அளிக்க அவர்கள் சிக்கிக் கொண்டனர்.

விசாரணை

விசாரணை

மேலும் அவர்களை கைது செய்த போலீஸார் அனைத்து கருவிகளையும், கள்ள நோட்டுகளையும் கைப்பற்றினர், மேலும் மேலும் இதுவரை அவர்கள் எவ்வளவு நோட்டுகள் அடித்துள்ளனர், அவர்களுக்கு கள்ள நோட்டு கும்பல் யாருடனாவது தொடர்பு உள்ளதா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Four held for printing fake currency : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X