வீடு, கார் என ஏகபோக வாழ்க்கை: சும்மாவா 600 ஏடிஎம் கார்ட்கள் க்ளோனிங்- எப்படி தெரியுமா?

|

600 ஏடிஎம்-களை க்ளோன் செய்து லட்சக்கணக்கான பணத்தை திருடி வீடுகள் கட்டி, சொகுசு கார்களுடன் வாழ்ந்து வந்த நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஏடிஎம் கார்ட் உபயோகம்

ஏடிஎம் கார்ட் உபயோகம்

ஆன்லைன் பரிமாற்றம், ஏடிஎம் கார்ட் உபயோகம் உள்ளிட்டவற்றை கவனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஏடிஎம் கார்ட் முறைகேடு, ஆன்லைன் ஹேக்கிங் உள்ளிட்டவை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

600-க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள் க்ளோன்

600-க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள் க்ளோன்

இந்த நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட பகுதிகளில் 2016 முதல் 2018 வரை 600-க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகளை க்ளோன் செய்ததாககவும் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நூற்றுக்கணக்கான மக்களை ஏமாற்றியதாகவும் போலீஸார் 4 கைது செய்தனர், அவர்களும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.

Google Pay உண்மையில் பாதுகாப்பானது தானா? ஆன்லைனில் நம்பி பணம் அனுப்பலாமா?Google Pay உண்மையில் பாதுகாப்பானது தானா? ஆன்லைனில் நம்பி பணம் அனுப்பலாமா?

லட்சக்கணக்கான ரூபாய் மோசடி

லட்சக்கணக்கான ரூபாய் மோசடி

ஏடிஎம் கார்ட்களில் க்ளோன் செய்து லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்து தங்களது வீடுகள் கட்டி, கார்கள் வாங்கி ஏகபோக வாழ்க்கை வாழ்ந்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். 600 ஏடிஎம் கார்டுகளை க்ளோனிங் செய்து மோசடி செய்த வழக்கில் நேத சந்திர சரோஜ், கபில் வர்மா, ராஜேந்திர சிங் கல்லூ டான் மற்றும் கிருஷ்ணவீர் சிங் யாதவ் ஆகியோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஏடிஎம் குளோனிங் இயந்திரம்

ஏடிஎம் குளோனிங் இயந்திரம்

மேலும் அவர்களிடமிருந்து ஏடிஎம் குளோனிங் இயந்திரம், ஆர்எஃப்ஐடி சாதனம், ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஹைடெக் கேஜெட்களையும் போலீசார் மீட்டனர்.

ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை திருட்டு

ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை திருட்டு

மோசடி செய்தவர்கள் ஒவ்வொரு குளோன் செய்யப்பட்ட ஏடிஎம் அட்டையிலிருந்தும் குறைந்தது ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை திருடப்பட்டதாகவும், அதன் மதிப்பு லட்சத்துக்கும் மேல் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசாரால் கைது

போலீசாரால் கைது

இது தொடர்பான கூடுதல் விசாரணையில், பதூலிகி மற்றும் அதை சுற்றியுள்ள இரண்டு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 20 இளைஞர்கள் அண்மையில் ஏடிஎம் குளோனிங்கிற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதிப்புமிக்கவர்களாக காட்டிக் கொண்டு திருட்டு

மதிப்புமிக்கவர்களாக காட்டிக் கொண்டு திருட்டு

மோசடி செய்பவர்கள் கிராமப்புற ஏடிஎம்கள் வளர்ந்து வரும் நகரங்களில் உள்ள ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளை செயலில் ஈடுபடுகிறார்கள். அதுவும் ஏடிஎம் வாசலில் சிறய ரக காரில் வந்து இறங்கி அங்கு வாசலில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கத் தெரியாமல் இருக்கும் நபர்களிடம் அவர்களுக்கு சந்தேகம் வராத வகையில் தங்களை மதிப்புமிக்கவர்களாக காட்டி திருட்டு நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.

வீட்டை கட்டியதோடு விலையுயர்ந்த கார் உடன் சொகுசு வாழ்க்கை

வீட்டை கட்டியதோடு விலையுயர்ந்த கார் உடன் சொகுசு வாழ்க்கை

எஸ்பி (பிரதாப்கர்) அபிஷேக் சிங் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், நேம் சந்திரா மற்றும் ராஜேந்திரா ஆகியோர் தங்கள் கிராமங்களில் திருடப்பட்ட பணத்தின் மூலம் வீடுகளை கட்டியும் அதோடு கபில் வர்மா வீட்டை கட்டியதோடு அல்லாமல் விலையுயர்ந்த காரை வாங்கியதும் கண்டறியப்பட்டுள்ளது.

அதிக பணம் சம்பாதிக்கலாம் போன்ற ஆசை வார்த்தை

அதிக பணம் சம்பாதிக்கலாம் போன்ற ஆசை வார்த்தை

நெம் சந்திரா கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் முதுகலை டிப்ளோமா (பிஜிடிசிஏ) படித்திருக்கிறார், மேலும் இதுதொடர்பான துறையில் பல மாதங்கள் பணியாற்றியுள்ளார். மேலும் அருகில் உள்ள கிராம இளைஞர்களை பண ஆசைக் காட்டி வேகமாக அதிக பணம் சம்பாதிக்கலாம் போன்ற ஆசை வார்த்தை கூறி அவர்களை இந்த கொள்ளை சம்பவத்திற்கு ஈர்த்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேற லெவல்- 5000 இன்க்ரிமெண்ட்: ட்ரோன் இயக்கி அசத்தும் சிம்பா., அட்டகாச வீடியோவேற லெவல்- 5000 இன்க்ரிமெண்ட்: ட்ரோன் இயக்கி அசத்தும் சிம்பா., அட்டகாச வீடியோ

போலீஸார் தொடர்ந்து விசாரணை

போலீஸார் தொடர்ந்து விசாரணை

கடந்த ஆறு மாதங்களில், ஏடிஎம் கார்டுகளை குளோன் செய்த குற்றச்சாட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடி செய்பவர்கள் இருப்பிடத்தை காலி செய்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து வருவதும் கண்டறியப்பட்டு வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Four fraudsters arrested for 600 ATM cards clone in up

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X