Home
News

ஜியோ சிம் இருக்கா? தினமும் 2ஜிபி டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. அள்ளிக் கொடுக்கும் 4 திட்டங்கள்..

ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் இப்போதும் அசத்தலான சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது ஜியோ (Jio). குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.1500-க்கு கீழ் அசத்தலான 4 திட்டங்களை வைத்துள்ளது. அந்த திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1299 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix) மொபைல் சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இதில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை உள்ளது.

ஜியோ சிம் இருக்கா?  அள்ளிக் கொடுக்கும் 4 திட்டங்கள்..

இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது ஜியோவின் ரூ.1299 திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என நிறுவனம் கூறியுள்ளது.

ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 1029 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டமும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் . பின்பு 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா இந்த திட்டம் மூலம் கிடைக்கிறது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம்.

ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 949 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.அதேபோல் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) வழங்குகிறது இந்த ஜியோ திட்டம்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) போன்ற சலுகைகளும் இதில் உள்ளன.

ஜியோ சிம் இருக்கா?  அள்ளிக் கொடுக்கும் 4 திட்டங்கள்..

ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. ஆனால் இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா கிடைக்கும். எனவே நீங்கள் இந்த ஜியோ திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. தினசரி 100 எஸ்எம்எஸ்,ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Four Best Jio Prepaid Plans Available for Recharge Under Rs.1500: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X