2 மில்லியன் மதிப்புள்ள தங்க புதையல் கண்டுபிடிப்பு! ஒருவழியாக நிறைவுக்கு வந்த தேடுதல் வேட்டை!

|

ஃபாரெஸ்ட் ஃபென் என்ற 89 வயதான கலை மற்றும் பழங்கால சேகரிப்பாளரின் தங்க புதையல் ஒரு தசாப்தத்திற்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதையலின் மதிப்பு சுமார் 2 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாம். இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட புதையலின் புகைப்படங்களை ஃபாரெஸ்ட் ஃபென் வெளியிட்டிருக்கிறார்.

10 வருடங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட புதையல்

10 வருடங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட புதையல்

இந்த புதையலை ஃபாரெஸ்ட் ஃபென் 10 வருடங்களுக்கு முன்பு மறைத்துவிட்டு, அதற்கான புதிர்களையும் ஒரு பாடலில் வெளியிட்டு, புதையலைத் தேடும் ஒரு தங்க வேட்டை போட்டியையும் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. செம்பு பெட்டிக்குள் புதையல் மறைத்துவைக்கப்பட்டுள்ளது என்றும், இதில் நிறைய பழங்கால தங்க காசுகள், விலை மதிக்க முடியாத ரத்தினங்கள் மற்றும் சில அரிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

புதையலைத் தேடும் போட்டி

புதையலைத் தேடும் போட்டி

இந்த புதையலைத் தேடும் போட்டியை ஃபாரெஸ்ட் ஃபென் 10 வருடங்களுக்கு முன்பு துவங்கினர், புதையல் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம், அதை எப்படிக் கண்டுபிடிக்க வேண்டும், அதற்கான சில ரகசியத் தகவல்கள் என அனைத்து தகவல்களையும் வெளியிட்டு இந்த போட்டியை ஃபாரெஸ்ட் ஃபென் துவங்கி வைத்தார். இந்த போட்டியில் உலகத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் பங்குபெறலாம் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

அனகோண்டாவை கையில் பிடித்த கணவர், கூக்குரலிட்ட மனைவி! எதிர்பாராத விபரீதம் வேடிக்கையானது!அனகோண்டாவை கையில் பிடித்த கணவர், கூக்குரலிட்ட மனைவி! எதிர்பாராத விபரீதம் வேடிக்கையானது!

புதையலைத் தேடிய 3,50,000 பேர்

புதையலைத் தேடிய 3,50,000 பேர்

உண்மையில் அவர் குடும்பத்தினருக்குக் கூட, இந்த புதையல் புதைத்து வைக்கப்பட்டிருந்த இடம் தெரியாதாம். ஃபாரெஸ்ட் ஃபென்னிற்கு மட்டுமே புதையல் இருக்கும் இடம் தெரியும் என்பதனால் இத்தனை வருடங்களாக அவரின் குடும்பத்தினரும் இந்த புதையலைத் தேடித்திரிந்திருக்கின்றனர். சாண்டா ஃபே நியூ மெக்ஸிகன் கருத்துப்படி, உலகெங்கிலும் இருந்து சுமார் 3,50,000 பேர் இந்த புதையலைத் தேடி ராக்கி மௌண்டைன் பகுதியை வலம்வந்திருக்கின்றனர்.

9 புதிர்கள் மற்றும் தடயங்கள்

9 புதிர்கள் மற்றும் தடயங்கள்

இதில் சிலர் நிரந்தர தங்கப் புதையல் வேட்டையாவார்கள் என்றும், இன்னும் சிலர் இந்த புதையல் வேட்டைக்காக தங்கள் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்க, அவர்கள் செய்து வந்த வேலையையும் விட்டுவிட்டு முழு நேர பணியாக இந்த புதையலை மட்டும் தேடும் வேலையைச் செய்துவந்துள்ளனர். இந்த புதையலுக்கான 9 புதிர்கள் மற்றும் தடயங்கள் நேரடியாக ஃபாரெஸ்ட் ஃபென் எழுதிய 'தி திரில் ஆஃப் தி சேஸ்' (The Thrill of the Chase) பாடலில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொக்கிஷம்

2 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொக்கிஷம்

இந்த 2 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொக்கிஷத்தை கண்டுபிடிப்பவர்கள் புதையலை தன்னிடம் காண்பித்துவிட்டு முறைப்படி புதையலை அப்படியே வைத்துக்கொள்ளலாம் என்று அவர் போட்டி அறிவித்த நேரத்தில் குறிப்பிட்டிருந்தார். பல வருடங்களாகப் பலரும் தேடி வந்த இந்த மறைக்கப்பட்ட பொக்கிஷத்தை ஒரு தனி நபர் அவருடைய தனி முயற்சியால் தற்பொழுது கண்டுபிடித்திருக்கிறார்.

பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய ராட்சஸ உயிரனம் கண்டுபிடிப்பு! வியப்பில் ஆழ்த்திய உருவம்!பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய ராட்சஸ உயிரனம் கண்டுபிடிப்பு! வியப்பில் ஆழ்த்திய உருவம்!

புதையலை கண்டுபிடித்தவர் யார்?

புதையலை கண்டுபிடித்தவர் யார்?

இப்படி இருக்கையில், கடந்த மாத தொடக்கத்தில் ஃபாரெஸ்ட் ஃபென் தனது புதையல் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தவுடன், புதையல் வேட்டைக்கான போட்டி ஒருவழியாக 10 ஆண்டுகளுக்குப் பின் நிறைவுக்கு வந்ததாக அறிவித்தார். இந்த புதையலை "பின் கிழக்கு" பகுதியைச் சேர்ந்த ஒருவர் கண்டுபிடித்திருக்கிறார் என்று ஃபென் தனது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அடையாளம் மறைக்கப்பட்டது ஏன்?

அடையாளம் மறைக்கப்பட்டது ஏன்?

இந்த புதையலைக் கண்டுபிடித்தவரின் அடையாளம் மற்றும் தகவல்களை ஃபாரெஸ்ட் ஃபென் வெளியிடவில்லை. புதையலைக் கண்டுபிடித்தவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரின் அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது என்று புதிய டிவிஸ்டை ஃபாரெஸ்ட் ஃபென் தற்பொழுது புதையல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் வைத்துள்ளார். இதனால், புதையல் உண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதா அல்லது புதையல் வேட்டை முற்றிலுமாக ஒரு புரளியாக இருந்ததா என்ற நெட்டிசன்ஸ்கள் வதந்திகளைப் பரப்பினர்.

பொக்கிஷத்தின் புகைப்படங்கள்

பொக்கிஷத்தின் புகைப்படங்கள்

இந்த அறிவிப்பைப் பார்த்த போட்டியாளர்களுக்கு இந்த சந்தேகம் தொற்றிக்கொண்டது. இத்தனை வருடங்களாகப் புதையலைத் தேடி வந்த வேட்டைக்காரர்களும் இந்த தகவலைக் கேட்டுக் கொந்தளிக்கத் துவங்கினர். இதற்குத் தீர்வாக ஃபாரெஸ்ட் ஃபென் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷத்தின் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதில் முதல் படத்தில் ஃபாரெஸ்ட் ஃபென் செம்பு பொக்கிஷ பெட்டியுடன் நிறையத் தங்கக் காசுகளுடன் இருப்பதை காண்பிக்கிறது.

BSNL-ன் புது திட்டம்: 600 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 250 நிமிட குரல் அழைப்பு- விலை தெரியுமா?BSNL-ன் புது திட்டம்: 600 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 250 நிமிட குரல் அழைப்பு- விலை தெரியுமா?

அதே இடத்தில் ஒரு இன்ச் கூட நகரவில்லை

அதே இடத்தில் ஒரு இன்ச் கூட நகரவில்லை

இரண்டாவது புகைப்படத்தில் பெட்டியின் உள்ளே இருக்கும் பல பொருட்களைக் காண்பிக்கிறது. மூன்றாவது படம் ஃபாரெஸ்ட் ஃபென் கையில் ஒரு கருப்பு நிற கை காப்பைக் காட்டுகிறது. இந்த புதையல் 10 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் மறைத்து வைத்த அதே இடத்தில் ஒரு இன்ச் கூட நகராமல் இருந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

கேம் ஓவர் - ஃபென்

கேம் ஓவர் - ஃபென்

புதையலைக் கண்டுபிடித்த நபரை எனக்குத் தெரியாது, ஆனால் என் புத்தகத்தில் உள்ள பாடல் அவரை துல்லியமான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது என்று ஃபென் கூறி மக்களின் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Forrest Fenn finally shared photos of his discovered treasure : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X