Home
News

டிஸ்பிளேவே கிடையாது.. இந்த சின்ன டப்பா 200 இன்ச் Smart TV-ஆ? இப்படி ஒரு டிவிய நீங்க பார்த்திருக்கவே முடியாது..

இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில், பொழுதுபோக்கு (Entertainment) என்பது அத்தியாவசியமான ஒன்றாகவிட்டது. ஓய்வு நேரங்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் (movies) பார்ப்பது என்பது மாறி அதற்காக பிரத்தியேக நேரம் (time) ஒதுக்க ஆரம்பித்து விட்டனர் மக்கள்.

ஓடிடி தளங்கள் (OTT), வெப் சீரிஸ் (Web series), வாரத்திற்கு ஒரு திரைப்படம் ரிலீஸ் போன்றவை இந்த நிலை இப்போது அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று விட்டது. வீட்டிலேயே தியேட்டர் செட்அப் (home theatre setup) உருவாக்கி குடும்பத்துடன் பொழுதை கழிக்கும் வகையில் பல வசதிகள் இன்று வந்து விட்டது. பலர் பெரிய திரை கொண்ட டிவிக்களை (big display TV's) வாங்கி மகிழ்கின்றனர்.

டிஸ்பிளேவே கிடையாது.. ஆனா இந்த சின்ன டப்பா 200 இன்ச் Smart TV-ஆ?

சிலர் ஒரு படி மேலே சென்று ப்ரொஜெக்டர்களே (Projectors) வாங்கி பயன்படுத்துகின்றனர். அப்படி துள்ளியமான மூவி அனுபவங்களை இந்திய குடும்பகளுக்கு வழங்க உலக புகழ் பெற்ற ஃபார்மூவி (Formovie) நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ள புதிய தொழில்நுட்பம் தான் லேசர் டிவி (Laser TV). ப்ரொஜெக்டர் விற்பனையில் புரட்சிகளை செய்து வரும் ஃபார்மூவி நிறுவனத்தின் புதிய அறிமுகம் லேசர் டிவி சி3 ப்ரொஜெக்டர் (Formovie Laser TV C3 Projector).

ஃபார்மூவி லேசர் டிவி சி3 ப்ரொஜெக்டர் (Formovie Laser TV C3 Projector):

இந்த அல்ட்ரா ஷார்ட் த்ரோ (ultra-short throw) ப்ரொஜெக்டர் பட்ஜெட் விலையில் சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த ப்ரொஜெக்டரை பயன்படுத்தி 4K ரெசொல்யூஷனில் (Resolution) 80'' முதல் 200'' இன்ச் வரை திரையிட்டு பார்க்கலாம். அட்வான்ஸ்ட் லேசர் பாஸ்பர் டிஸ்ப்ளே (Advanced Laser Phosphor Display, ALPD), 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆகிவற்றுடன் 4K ரெசொல்யூஷனும் இதை உள்ளது.

இதனால்,சாதாரண ப்ரொஜெக்டர்களை ஒப்பிடுகையில் சிறந்த விஷ்வல் அனுபவத்தை பெறலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பிட்ட வண்ணங்களுக்குள் வரையறுத்துக்கொள்ளாமல் பல லட்சம் நிறங்களை இந்த ப்ரொஜெட்கடர் டிஸ்ப்ளே செய்யுமாம். மேலும், இதில் 3000:1 ஹை காட்ராஸ்ட் ரேஸியோவால் (High contrast ratio) காட்சிகள் உயிரோட்டமாக காணப்படும். இந்த ப்ரொஜெக்டரின் மற்றொரு சிறப்பம்சமாக கூறப்படுவது மோஷன் எஸ்டிமேஷன் மோஷன் காம்பென்ஷேஷன் (Motion Estimation, Motion Compensation), அதாவது MEMC அம்சம்.

டிஸ்பிளேவே கிடையாது.. ஆனா இந்த சின்ன டப்பா 200 இன்ச் Smart TV-ஆ?

இந்த அம்சம் இருப்பதால் திரையில் நகர்வதுபோல இருக்கும் காட்சிகளை ப்ளர் (blur) இல்லாமல் தெளிவாக கண்டுகளிக்க முடியும். ஆடியோ அம்சத்தை பொருத்தவரை இரண்டு 15W லார்ஜ் கேவிட்டி ஸ்பீக்கர்கள் (Large cavity speakers) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், டால்பி ஆடியோ (Dolby Audio), DTS-HD ஆகிய அம்சங்கள் இருப்பதால் தியேட்டர்களுக்கு இணையான அனுபவத்தை நம்மால் பெற முடியும்.

இந்த லேசர் டிவி சி3-யுடன் வரும் பில்ட்-இன் ஃபெங் ஓஎஸ் சிஸ்டம் (Built-in FengOS system), அமேசான் 4K ஃபயர் ஸ்டிக் மேக்ஸ் (Amazon 4K Fire Stick Max) ஆகியவை மூலம் ஓடிடி தளங்களையும், கேம்களையும் சுலபமாக கையாளமுடியும். பொழுதுபோக்கு என்ற பெயரில் மலிவான விலைக்கு உடல்நலத்தை பாதிக்கும் அம்சங்களைக் கொடுக்காமல், இது உங்கள் ஆரோக்கியத்தை சீர்குலைக்காத அம்சத்தையும் கொண்டுள்ளது.

அல்ட்ரா-தின் (Ultra-thin), பாடர்-லெஸ் ஃபுல் ஸ்க்ரீன் (Border-less Full screen) டிசைனுடன் சேர்த்து ப்ளூ லைட் ஐ ப்ரொடெக்‌ஷனையும் (Blue light eye protection) இந்த லேசர் டிவி சி3 வழங்குகிறது. இதனால் கண்கள் சேதமடையும் என்ற பயம் வேண்டாம். மேலும் இதில் இருக்கும் ToF ஹ்யூமன் டிடெக்‌ஷன் (Human detection) அம்சம் மனிதர்ன்கள் எதிரில் இருப்பதை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு திரையின் ப்ரைட்னஸை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும்.

விலை என்ன? (Fromovie laser tv c3 projector price):

இத்தகைய கவர்ச்சிகரமான அம்சங்களுடன் வரும் இந்த ஃபார்மூவி லேசர் டிவி சி3 ப்ரொஜெக்டரின் இந்திய விலை என்ன தெரியுமா? ரூ. 2,40,000 மட்டுமே. இதில் மற்றொரு காம்போவும் உள்ளது. இந்த ப்ரொஜெக்டருடன் ஃபார்மூவி 100 இன்ச் ஃப்ரெஸ்னெல் ஸ்க்ரீன் (Formovie 100 inch Fresnel Screen) ரூ. 3,90,000 விற்கப்படுகிறது. இந்த ப்ரொஜெக்டரை வாங்க விரும்புவோர் ஃபார்மூவி இந்தியா இணையதளதில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Formovie Laser Tv C3 Projector With 80 Inch to 200 Inch Display Launched In India Check Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X