தெஸ்லா நிறுவனத்தின் முன்னாள் பெறியியல் பிரிவுத் தலைவர் தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் !

டஃவ் பீல்டு மற்றும் மேன்ஸ் பீல்டு ஆகிய இருவரும் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்பியூட்டர் (Mac computers) தயாரிப்பின் போது பொறியியல் பிரிவில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.

|

தெஸ்லா நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் மூத்த துணைத் தலைவராக இருந்த டஃவ் பீல்டு (Doug Field) கடந்த மாதம் அந் நிறுவனத்திலிருந்து விலகினார். தற்போது அவர் ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்துள்ளார். இவர் ஆப்பிள் நிறுவனத்தின் செயல் இயக்குநர் பாப் மேன்ஸ்பீல்டுடன் (Bob Mansfield) இணைந்து செயல்படுவார். மேன்ஸ் பீல்டு ஆப்பிள் நிறுவனத்தின் தானே இயங்கும் கார் (self-driving car) தயாரிப்புத் திட்டத்தின் தலைவராக இருந்து வருகிறார். இத்திட்டத்திற்கு டைடான் திட்டம் (Project Titan) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தெஸ்லா முன்னாள் பெறியியல் பிரிவுத் தலைவர் தற்போது ஆப்பிள் நிறுவனத்தில்

டஃவ் பீல்டு மற்றும் மேன்ஸ் பீல்டு ஆகிய இருவரும் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்பியூட்டர் (Mac computers) தயாரிப்பின் போது பொறியியல் பிரிவில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.

டஃவ் பீல்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக தெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றினார். இந் நிறுவனம் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. புகழ்ப்பெற்ற மின்பொறியாளரும் இயற்பியலாளருமான நிக்கோலா தெஸ்லாவின் (Nikola Tesla) நினைவைப் போற்றும் வகையில் இந்நிறுவனத்திற்கு தெஸ்லா எனப் பெயரிட்டுள்ளனர்.

தெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள எலன் மஸ்க் (Elon Musk), நிறுவனத்தின் பொறியியல் மற்றும் தயாரிப்புப் பிரிவைக் கவனித்துக் கொள்ளுமாறு டஃவ் பீல்டைக் கேட்டுக் கொண்டதாகக் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார். எலன் மஸ்க் தன்னுடைய நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மாடல்3 (Model 3) கார்களின் உற்பத்தியைக் கவனித்துக் கொள்ளத் திட்டமிட்டு இருந்தார்

தெஸ்லா முன்னாள் பெறியியல் பிரிவுத் தலைவர் தற்போது ஆப்பிள் நிறுவனத்தில்

ஆனால், டஃவ் பீல்டு தெஸ்லா நிறுவனத்தை விட்டு விலகத் திட்டமிட்டுள்ளதாக கடந்த மே மாதத்தில் தகவல் வெளியானது. மாடல்-3 கார்களின் உற்பத்தி இலக்கை அடைய தெஸ்லா நிறுவனம் திட்டமிட்டு இருந்த நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. அந்தச் சமயத்தில், “டஃவ் பீல்டு தன்னுடைய குடும்பத்தினருடன் ஓய்வில் இருக்கிறார். அவர் விரைவில் பணிக்குத் திரும்புவார். அவர் நிறுவனத்தைவிட்டு விலகவில்லை.” என தெஸ்லா நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஜீலை மாதத்தில் டஃவ் பீல்டு தங்கள் நிறுவனத்தை விட்டு விலகி விட்டதாக தெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது.

தெஸ்லா முன்னாள் பெறியியல் பிரிவுத் தலைவர் தற்போது ஆப்பிள் நிறுவனத்தில்

ஆப்பிள் நிறுவனம் தானே இயங்கும் கார் தயாரிப்பு குறித்து அதிகமான தகவல்களை வெளியிடவில்லை. ஆனால் நிறுவனத்தில் பணியாற்றும் 5000 பணியாளர்கள் கார் தயாரிப்புத் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு அனுமதி பெற்றுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Former Tesla engineering chief returns to Apple: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X