மார்க் ஜுக்கர்பெர்க் கொடுத்த ரூ. 8,757 கோடி சம்பளம்.. வேண்டாம் என உதறித்தள்ளிய மீரா.. யார் இவர்?
மெட்டா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. அதுவும் இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தொழில்நுட்ப அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பத்தில் மெட்டா, கூகுள், ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்கள் தற்போது அதிக கவனம் செலுத்துகின்றன.
அதிலும் மார்க் ஜக்கர்பெர்கின் மெட்டா நிறுவனம் ஓபன் ஏஐ நிறுவனத்தில் வேலையில் இருப்பவர்களை அதிக சம்பளத்திற்கு வேலைக்கு எடுப்பதில் தற்போது அதிக முனைப்புக் காட்டி வருகிறது. இந்நிலையில் மெட்டா நிறுவனம் சாட் ஜிபிடி உருவாக்கியதில் முக்கிய அங்கம் வகித்தவரும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரியுமான மீரா முராட்டி (36 வயது) என்ற நிபுணருக்கு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 8,757 கோடி) சம்பளமாக வழங்க முன் வந்தது.

ஆனால் இந்த வேலை வேண்டாம் என்று மீரா முராட்டி (Mira Murati) நிராகரித்துவிட்டாராம். அதாவது ஏஐ தொழில்நுட்பத்தில் நம்பர் ஒன் நிறுவனமான ஓபன் ஏஐ-இன் சாட் ஜிபிடி இருக்கிறது. இதன் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்தவர் தான் மீரா முராட்டி. அதுவும் அல்பேனிய அமெரிக்கரான மீரா முராட்டி இப்போது Thinking machines lab என்ற ஒரு நிறுவனத்தைச் சொந்தமாகத் தொடங்கி இருக்கிறார். இதனால் தான் மெட்டா நிறுவனம் கொடுத்த வேலையை வேண்டாம் என்று தெரிவித்தார்.
தற்போது உலக அளவில் தொழில்நுட்ப போட்டி முன்னிலை வகிக்கக்கூடிய முக்கியமான நபர்களில் இந்த மீரா முராட்டியும் ஒருவராக இருந்து வருகிறார். அதுவும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்தவர் இவர். குறிப்பாக 2018 ஆம் ஆண்டு ஓபன்ஏஐ நிறுவனத்தில் சேர்ந்த அவர், குறுகிய காலத்தில் அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் சாட்ஜிபிடி, டால்-இ மற்றும் கோடெக்ஸ் போன்ற திட்டங்களை வழிநடத்தியதில் மீரா முராட்டிக்கு முக்கியப் பங்கு உண்டு. அதேபோல் இந்த சாட் ஜிபிடி உருவாக்கத்திலும் மற்றும் எளிய மக்களும் பயன்படுத்தும் வகையில் இதனை வடிவமைத்து கோடிங் செய்ததிலும் முக்கிய பங்கு இவருக்கு உண்டு. மேலும் சாட்ஜிபிடியில் "ஏஐ மூளை" என்ற செல்லமான பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டு வந்தார் இந்த மீரா.
அதேசமயம் இந்த ஓபன்ஏஐ நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு, அவர் கோல்ட்மேன் சாக்ஸ், சோடியாக் ஏரோஸ்பேஸ் மற்றும் டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களிலும் வேலை செய்துள்ளார். பின்பு சாம் ஆல்ட்மேன் ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து வெளியே வருவதற்கு முன்பு, மீரா முராட்டி மூன்று நாட்களுக்கு இடைக்கால தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஏஐ செயலிகள் தற்போது அதிகமாகப் போட்டிப்போட்டுக் கொண்டு வந்தாலும், இதனை சமூக பொறுப்புடன் உருவாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார் இந்த மீரா முராட்டி. சமீபத்தில் உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் பேசிய இவர் பொறுப்புகள் அற்ற அல்லது மதிப்புகள் அற்ற ஏஐ என்பது மனசாட்சி இல்லாத புத்திசாலித்தனத்திற்குச் சமம் எனத் தெரிவித்தார்.
இந்த 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் தான் சாட் ஜிபிடியில் இருந்து வெளியேனிறார் மீரா முராட்டி. தற்போது இவர் ஏஐ அடிப்படையிலான Thinking machines lab ஸ்டார்ட் அப்பை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முன்னணி ஏஐ நிறுவனங்களின் முன்னாள் ஊழியர்கள் வேலை செய்கின்றர் எனவும் கூறப்படுகிறது. இந்த ஊழியர்களைக் கூட மெட்டா நிறுவனம் வேலைக்கு எடுக்க நினைத்தது, ஆனால் அனைவருமே மீரா முராட்டி நிறுவனத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
photo credit: Getty Images


Click it and Unblock the Notifications








