Subscribe to Gizbot

சிலிக்கான் வேலியின் 'செக்சிஸம்' - போட்டு உடைத்த சூசன் ஃப்ளவர்.!

Written By:

உபெர் நிறுவனத்தின் முன்னாள் பொறியாளர் அந்நிறுவனத்தில் தனது முதல் உத்தியோகபூர்வ நாள் தொடங்கி தான் சந்தித்த பணியிட பாலுணர்வு வேறுபாடு மற்றும் சக்தி போராட்டங்கள் ஆகிய விடயங்களை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

உபெர் நிறுவனத்தின் முன்னாள் பொறியாளர் சூசன் ஃப்ளவர் (டிசம்பர் மாதம் உபெர் நிறுவனத்தை விட்டு வெளியேறியவர்) கடந்த ஞாயிறன்று தனது வலைப்பதிவில் "விசித்திரமான கண்கவர், மற்றும் சற்று கொடூரமான கதை." என்ற பதிவை வெளியிட்டார். அது உண்மையில் கொடூரமான கதையாகத்தான் உள்ளது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
செக்ஸ் வாழ்க்கை விவரங்கள்

செக்ஸ் வாழ்க்கை விவரங்கள்

பாலின வேறுபாடு என்பது சிலிக்கான் வேலியில் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட ஒரு சிக்கலாகவே திகழ்கிறது. ஆனால் சூசன் ஃப்ளவர் வெளியிட்டுள்ள பதிவில் பல அதிர்ச்சியூட்டும் விடயங்கள் பகிரப்பட்டுள்ளது. சூசன் ஃப்ளவரின் முதல் நாள் பணியில் அவரது மேலாளர் தன் செக்ஸ் வாழ்க்கை விவர அணுகுமுறையை நிகழ்த்தியதில் இருந்து செக்சிஸம் பிரச்சனை ஆரம்பித்தாக தொடர்கிறார்.

உடலுறவு கொள்ளும் பெண்

உடலுறவு கொள்ளும் பெண்

"என் முதல் அதிகாரப்பூர்வ பணி நாளின் போது என் புதிய நிறுவனத்தின் மேலாளர் நிறுவன சாட் மூலமாக எனக்கொரு செய்தி அனுப்பினார். அவர் ஒரு திறந்த உறவில் (ஓப்பன் ரிலேஷன்ஷிப்) இருப்பதாகவும், அவர் காதலி புதிய பங்காளிகளை மிக எளிதாக கண்டுபிடித்து விடுவாள் ஆனால் நான் அப்படியில்லை. இந்த பிரச்சனையில் இருந்தே வெளியே இருக்க முயற்சி செய்கிறேன், ஆனாலும் முடியவில்லை என்றும் உடலுறவு கொள்ளும் பெண்களை அவர் எதிர்பார்க்கிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார்"

ஸ்க்ரீன்ஷார்ட் செய்து புகார்

ஸ்க்ரீன்ஷார்ட் செய்து புகார்

"அவர் என்னுடன் செக்ஸ் உறவு பெற முயற்சிப்பது மிக தெளிவாக புரிந்தது உடனே நான் அவரின் மெஸேஜை ஸ்க்ரீன்ஷார்ட் செய்து எச்.ஆர்-ரிடம் புகார் அளித்தேன்"

பணி செய்ய அழுத்தம்

பணி செய்ய அழுத்தம்

இருப்பினும் கூட அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதே மேலாளரின் கீழ் பணி செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், இந்த புகார் மூலம் மோசமான செயல்திறன் ஏற்படலாம் என்ற நோக்கத்தில் ஒன்று டீமில் இருந்து வெளியேற அல்லது தொடர்ந்து பணி செய்ய எச்ஆர் மூலம் கூறப்பட்டதாகவும் சூசன் ஃப்ளவர் குறிப்பிட்டுளார்.

அலுவலக அரசியல் போர்

அலுவலக அரசியல் போர்

அங்கிருந்து, சூசன் ஃப்ளவரின் அலுவலக பயணம் மங்கலான ஒன்றாகவே தொடர்ந்துள்ளது. அதிலிருந்து வெளிப்படையாக நாசவேலை செய்வது மற்றும் ஒருவருக்கொருவரை கைப்பற்ற முயற்சிப்பது போன்ற அலுவலக அரசியல் போர் ஆனது மேல் மேலாண்மை பொறியியல் துறை மற்றும் மேலாளர்களுக்கு இடையே நிகழ்ந்ததாக சூசன் கூறியுள்ளார்.

கீழே வைத்துக்கொள்ள முயற்சிப்பர்

கீழே வைத்துக்கொள்ள முயற்சிப்பர்

"ஒவ்வொரு மேலாளர்களும் அவர்களுடைய சகாக்கள் உடன் சண்டையிடுவர், அவர்கள் நேரடி மேற்பார்வையாளர்களாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தினால் பிற மேற்பார்வையாளர்களை தங்கள் கீழே வைத்துக்கொள்ள முயற்சிப்பர். இதுபோன்ற செயல்களை மறைமுகமாக செய்ய மேலாளர்கள் எந்த முயற்சியும் எடுக்க மாட்டார்கள். அவர்கள் மீட்டிங்தனில் இது அது பற்றி பெருமையடித்து தங்கள் நேரடி அறிக்கைகளை கூறுவார்கள்"

முழுமையான இடையறா குழப்பம்

முழுமையான இடையறா குழப்பம்

"நம் அணிகள் கலைக்கப்படும், மற்றொரு மறு நிறுவனத்துடன் இருக்க வேண்டும் மற்றும் நாம் ஒரு சாத்தியமற்ற காலக்கெடுவிலான மற்றொரு புதிய திட்டத்தை தொடங்க வேண்டும் என்று நாங்கள் அனைவருமே ஒருவித பயத்தின் கீழ் வாழ்ந்தோம். அது முழுமையான இடையறா குழப்பம் கொண்ட ஒரு அமைப்பாக இருந்தது"

பதவி உயர்வு கிடைக்காமலும்

பதவி உயர்வு கிடைக்காமலும்

உடன் சூசன் வேலை பார்த்த நாட்களில் அவரின் உண்மை நிலை மற்றும் சாதனை தன் உணர்வு ஆகியவைகளை அவரின் மேலாளர்கள் கீழிறக்க முயன்றுள்ளனர். அவருக்கு பதவி உயர்வு கிடைக்காமலும் மற்றும் அமைப்பின் மற்ற பாகங்களுக்கு முன்னேறி செல்வத்தையும் தடுக்கும் நோக்கத்தில் சூசனின் ஒளிரும் செயல்திறன் விமர்சனங்கள் மேலாளர்களால் திருத்தப்பட்டதாகவும் சூசன் குறிப்பிட்டுள்ளார்.

"மிக மெல்லிய ஐஸ்"

உபெர் நிறுவனத்தில் இருந்து சூசன் விலகுவதற்கு முன்பாக நடந்த ஒரு கூட்டத்தில், தனது மேலாளர் சூசனை "மிக மெல்லிய ஐஸ்" என்று கூறினார் என்பதை வெளிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

பணி நீக்கம் செய்யப்படுவர்

பணி நீக்கம் செய்யப்படுவர்

சூசன் ஃப்ளவரின் இந்த பகிரங்கமான பதிவிற்கு பின்னர் உபெர் தலைமை நிர்வாக அதிகாரியான டிராவிஸ் கலாநிக்அதுசார்ந்த "அவசர விசாரணையொன்றை முன்னெடுக்க" உள்ளதாகவும் மற்றும் இனி இதுபோன்ற நடவடிக்கைகளில் செயல்படுபவர் எவராகினும் அவர் பணி நீக்கம் செய்யப்படுவர் என்றும் கூறியுள்ளார்.!

பெண்கள் பிரதிநிதித்துவம்

பெண்கள் பிரதிநிதித்துவம்

சூசன் வேலைக்கு சேருகையில் நிறுவனத்தின் பெண்கள் பிரதிநிதித்துவம் 25 சதவிகதமாக இருந்தது ஆனால் வெளியேறும் போதோ 3 சதவிகிதமாக இருந்தது. சிலிக்கான் வேலியில் உள்ள உபெர் போன்ற பெருநிறுவனங்களிலேயே இந்த நிலை என்றால் நம் இந்தியாவில் இருக்கும் லோக்கல் நிறுவனங்களில் என்னென்ன பாலுணர்வு வேறுபாடு மற்றும் சக்தி போராட்டங்கள் நிகழுமோ என்பதை கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.

சரியான தீர்வு

சரியான தீர்வு

பாதிப்புகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் பெண்கள் சூசன் போன்று வேலையை விட்டு சென்ற பின்பு வெளிப்படையாக பேசுவதற்கு பதிலாக முன்பே வெளிப்படையாக போட்டு உடைப்பதே இதுபோன்ற பாலுணர்வு வேறுபாடு மற்றும் சக்தி போராட்டங்களுக்கு ஒரே சரியான தீர்வாகும். பெண்கள் வாய் திறக்காத வரை யாருக்குமே எதுவுமே தெரியப்போவதில்லை.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Former engineer says Uber is a nightmare of sexism. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot