நீங்களே போன மாதிரி இருக்கனும்! 24 மணி நேர உழைப்பு! வீட்டில் ஒரே வருமானம் முடிந்தது!
பிரபல தனியார் நிறுவனம், 24 மணி நேரமும் உழைத்த ஒரு ஊழியரிடம், "நீங்கள் உடனடியாக ரிசைன் செய்யுங்கள்" என்று சொல்லி பணிநீக்கம் செய்துள்ளது என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறாதா? இல்லை, அவர் ஏன் 24 மணி நேரம் உழைத்தார் என்று கேள்வி எழுப்ப தோன்றுகிறதா?
இந்தியாவின் மிகப்பெரிய கல்வி நுட்பவியல் (Edu-Tech) நிறுவனமான பைஜூஸ் (BYJU'S) மீண்டும் பணிநீக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால், இந்த முறை ஊழியர்களையே ராஜினாமா செய்ய கூறிவிட்டு, அதன்பின் வெளியே அனுப்பியிருக்கிறது. மொத்தமாக 1,000 ஊழியர்கள் கண்ணீருடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக, 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 2,500 ஊழியர்களை திடீரென்று பணிநீக்கம் செய்து அதிர்ச்சியளித்தது பைஜூஸ் நிறுவனம். இப்போது, மீண்டும் அதையே செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க பணிநீக்க முடிவு எடுக்கப்பட்டதாக பேசப்படுகிறது. ஆனால், பணிநீக்கம் செய்யப்பட்ட பெரும்பாலான ஊழியர்கள் நிறுவனத்தின் லாபத்துக்காக மட்டுமே நேரம், காலம் பார்க்காமல் உழைத்தவர்கள் என்று சமூக வலைதளங்களில் பலர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
அந்த வரிசையில், வாரம் 7 நாட்களும், 24 மணி நேரமும் உழைத்து வந்த ஊழியர் ஒருவர், தனது வேலை பறிக்கப்பட்டத்தை அவரது லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சொல்லப்போனால், அவரது வீட்டில் வேலைக்கு செல்லும் ஒரே நபர் இவர்தான் என்பது அதை படிப்பவர்களை மேலும் சங்கடப்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து அவரது பதிவில், "நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. நான் பணிபுரிந்த நிறுவனம், என்னை உடனடியாக ரிசைன் செய்யுமாறு கூறி பணிநீக்கம் செய்துவிட்டது. எனது பணி காலத்தில் 8 முதல் 10 மணி நேர உழைப்பை கொடுக்கவில்லை. வாரம் 7 நாட்களும், 24 மணி நேரமும் உழைப்பை கொடுத்திருக்கிறேன். இந்த நேரத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டாலும் பைஜூஸ் நிறுவனத்தை பற்றி புகார் கூற விரும்பவில்லை.
எனக்கு வேலையில்லாத போது, அந்த நிறுவனமே வாய்ப்பளித்தது. எனக்கு பிடித்த வேலையை கொடுத்தது. இப்போது, ஏதோ நிலைமை சரியில்லை என்று நினைக்கிறேன். இதனால் கடுமையான முடிவுகளை எடுத்திருக்கிறது. எனது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர் நான் மட்டும்தான். இப்போது, எனது நிலை சரியில்லை என்று கூட அவர்களிடம் சொல்ல முடியவில்லை.
எனக்கு விடுமுறை உள்பட எந்த சலுகையும் வேண்டாம், ஒரு வேலை இருந்தால் போதும், யாராவது உதவுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார். இவரது பதிவை ட்விட்டரில் பலர் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications