Home
News

சீனாவின் கையில் Apple நிறுவனத்தின் ரகசிய பைல்ஸ்.. கருப்பு ஆடாக மாறிய ஊழியர்.. என்ன பைல்ஸ் அது?

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ரகசிய பைல்ஸ்களை திருடிய முன்னாள் ஊழியர் சீனாவுக்கு தப்பிச்சென்றுள்ள சம்பவம் அந்த நிறுவனத்தின் தலையில் இடியை இறக்கியிருக்கிறது. இந்த ஊழியர் சீனாவில் (China) உள்ள மிகப்பெரும் நிறுவனத்தில் ரகசியமாக பணிபுரிந்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த திருடப்பட்ட பைல்ஸ், ஆப்பிளின் எதிர்காலத்தையே சிதைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அப்படியென்ன பைல்ஸ் திருடப்பட்டது? என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். உலகின் மிகப்பெரும் நிறுவனங்கள் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிப்பதற்கு, அவற்றின் எதிர்கால திட்டங்களே முக்கிய காரணமாக இருக்கும்.

சீனாவின் கையில் Apple நிறுவனத்தின் ரகசிய பைல்ஸ்.. கருப்பு ஆடு யார்?

இப்படிப்பட்ட திட்டங்கள் குறித்த தகவல்களை வெளியில் கசியவிடாமல், எப்போதும் ரகசியமாகவே அந்த நிறுவனங்கள் வைத்திருக்கும். இந்த ரகசிய தகவல்கள் ஒருவேளை கசிந்தால், அதன்போட்டி நிறுவனங்கள் முந்திக்கொள்ளும். இதனால் ஒரு நிறுவனத்தின் தலையெழுத்தே மாறிவிடும். இப்போது, அந்த நிலைமைக்கு ஆப்பிள் நிறுவனம் தள்ளப்பட்டுவிட்டதாக தெரிகிறது.

ஆப்பிள் நிறுவனம் பல்வேறு எதிர்கால திட்டங்களை வைத்துள்ளது. அதில் ஓட்டுநர் இல்லாத கார் (self-driving car) திட்டம் மிகவும் புரட்சிகரமானது. இதற்கான முதல்கட்ட பணிகளில், ஆப்பிள் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. முன்மாரிதியை உருவாக்கி சோதனை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் உள்ளன.

இந்த கார் உருவாக்கத்தின் ரகசிய பைல்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய இன்ஜினியர்களுக்கு (Apple Enginees) மட்டுமே தெரிந்திருக்கும். இந்த இன்ஜினியர்கள் பட்டியலில் சீனாவை சேர்ந்த வேய்பவ் வாங் (Weibao Wang) என்பவரும் இருந்தார். இவர் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவத்தின் டெக்னாலஜி ஃபார் அட்டானமஸ் சிஸ்டம்ஸ் (Technology For Autonomous Systems) குழுவில் முக்கிய பொறுப்பில் சேர்ந்தார்.

இந்த குழு செய்யும் பணிகள் குறித்த தகவல்கள் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிய வேண்டும் என்பது நிறுவனத்தின் பாலிசியாகும். அதில் வேய்பவ் வாங்கும் கையெழுத்திட்டார். அதன்பின் 50 நாட்களுக்கும் மேலாக பணிபுரிந்த வாங் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி திடீரென்று மாயமானார். ஆப்பிள் நிறுவனம் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.

சில மாதங்களுக்கு பின் ஓட்டுநர் இல்லாத கார் தொழில்நுட்பம் குறித்த ரகசிய பைல்ஸ் திருடப்பட்டிருப்பது ஆப்பிள் நிறுவனத்துக்கு தெரியவந்துள்ளது. இந்த பைல்ஸ்களை திருடியது வேய்பவ் வாங் என்பதும் அவர் சீனாவுக்கு தப்பிச்சென்று அங்குள்ள மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ரகசியமாக பணிபுரிந்து வருவதும் ஆப்பிள் நிறுவனத்துக்கு தெரியவந்துள்ளது.

இதனால் ஆப்பிள் நிறுவனம், வேய்பவ் வாங் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் வாங் அமெரிக்காவில் இருந்தார். அப்போது, ஆப்பிள் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் அவரிடம் விசாரணையை நடத்தப்பட்டது.

ஆனால், அவர் தனக்கு ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமில்லை. வேறு வேலைக்கு செல்ல இருக்கிறேன் என்று தெரிவித்தார். அதன்பின் அந்த மாதமே சீனாவுக்கு சென்றுவிட்டார். இதனால் சந்தேகமடைந்து, அவரது தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினோம். அதில், ஆப்பிள் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத கார் தொழில்நுட்பம் குறித்த தகவல்களை அவர் சேமித்து வைத்திருந்தது தெரியவந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிக்கை மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டாலோ அல்லது வாங்கிடம் விசாரணை நடத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டாலோ சீன தூதரகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, வாங் அமெரிக்காவுக்கு கொண்டுவர உத்தரவிடப்படும். அதன்பின் வழக்கு விசாரணை முடிவுக்குவரும். இந்த ஓட்டுநர் இல்லாத கார் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் முக்கிய புரட்சியாக இருக்கும் வேளையில், ஆப்பிள் நிறுவனம் சீனாவின் கையில் சிக்கியதாக தெரிகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Former Apple engineer accused of stealing company self-driving car secrets after he fled to China
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X