Gmail அக்கவுண்ட் இருக்கா? இனி இந்த 5 விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
இந்தியா முழுவதும் ஜிமெயில் (Gmail) சேவையை அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஸ்மார்ட்போன், லேப்டாப், டெஸ்க்டாப், டேப்லெட் போன்ற எந்த சாதனங்களை பயன்படுத்தினாலும் கட்டாயமாக நம் அனைவரிடமும் ஒரு ஜிமெயில் கணக்கு இருக்கும். அதேபோல் வங்கி சேவை, கல்லூரி, பணி இடங்கள் வரை இந்த ஜிமெயில் அக்கவுண்ட் என்பது மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது.
எனவே இப்படிப்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட்டுக்கு பாஸ்வேர்ட் என்பது அதி முக்கியமாகும். ஆனால், நம்மில் பலர் அந்த பாஸ்வேர்ட்டை மறந்துவிடுவது வழக்கமாகிவிட்டது. ஆனாலும் இந்த பிரச்சனைகளை தவிர்க்க கூகுள் (Google) பாஸ்வேர்டு ரெக்கவரி ஆப்ஷன்களை வழங்கி வருகிறது. அதன்படி உங்கள் பாஸ்வேர்டை மீட்டெடுக்க உதவும் 5 எளிமையான வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

வழிமுறை-1: பாஸ்வேர்டு ரெக்கவரி செயல்முறை (Start the password recovery process)
முதலில் உங்கள் போனில் ஜிமெயில் லாகின் பக்கத்திற்கு செல்ல வேண்டும். அடுத்து உங்கள் மின்னஞ்சல் முவரியை (email address) டைப் செய்து நெக்ஸ்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்பு பாஸ்வேர்டு கேட்டுகும்போது, 'ஃபர்கெட் பாஸ்வேர்டு (Forgot password) எனும் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
வழிமுறை-2: உங்களுடைய அடையாளம் சரிபார்த்தல் (Verify your identity)
அதாவது நீங்கள் சரியான நபர் தானா மற்றும் இது உங்களின் ஜிமெயில் கணக்கா என்பதை சரிபார்க்க கூகுள் நிறுவனம் பல முறைகளைப் பயன்படுத்துகிறது. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
ரெக்கவரி மெயில் (Recovery email): உங்களுடைய ஜிமெயில் கணக்கில், ரெக்கவரி மெயிலை கொடுத்திருந்தால் அந்த முகவரிக்குக் கூகுள் ஒரு சரிபார்ப்பு குறியீட்டை (verification code) அனுப்பும்.
போன் நம்பர் (Phone number): ஒருவேளை ரெக்கவரி மெயிலை ஆப்ஷனை நீங்கள் பயன்படுத்த விருப்பம் இல்லையென்றால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அல்லது அழைப்பு மூலம் சரிபார்ப்பு குறியீட்டை பெற்று உங்களது கணக்கை எளிமையாக
மீட்டெடுக்கலாம்.
பாதுகாப்பு கேள்விகளுக்கு பதில் (Answer security questions) மேலே இருக்கும் இரண்டு முறைகளும் உங்களுக்கு உதவவில்லை என்றால் நீங்கள் கடைசியாக நினைவில் வைத்திருக்கும் பாஸ்வேர்டு அல்லது உங்கள் கணக்கை உருவாக்கிய தேதி போன்ற கேள்விகள் உங்களிடம் கேட்கப்படலாம். இதுதவிர உங்கள் தந்தை அல்லது தாய்வழி தாத்தா, பாட்டியின் பெயர், முதல் பள்ளியின் பெயர், ஊரின் பெயர் போன்ற கேள்விகளும் கேட்கப்படலாம்.
வழிமுறை-3: சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட வேண்டும் (Enter the verification code)
மேலே இருக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தி நீங்கள் குறியீட்டை பெற்றவுடன் ஜிமெயில் ரெக்கவரி பக்கத்தில் உள்ளிட வேண்டும். குறிப்பாக குறியீடு கிடைத்த சிறிது நேரத்திற்குள் உள்ளிடவும். கூகுள் அந்த குறியீட்டைச் சரிபார்த்து, அடுத்த கட்டத்திற்குச் செல்ல உங்களை அனுமதிக்கும்

வழிமுறை-4: புது பாஸ்வேர்டை உருவாக்கவும் (Set a new password)
அடுத்து நீங்கள் சரியான நபர் என்பதை கூகுள் நிறுவனம் உறுதி செய்த பிறகு, புதிய பாஸ்வேர்டை உருவாக்க கூகுள் உங்களை அனுமதிக்கும். அப்போது குறைந்தது 8 எழுத்துக்கள் நீளமுள்ள வலுவான பாஸ்வேர்டை உருவாக்குங்கள்.
குறிப்பு: சிறந்த பாதுகாப்பு வசதிக்காக, நீங்கள் பெரிய எழுத்து, சிறிய எழுத்து, எண்கள், மற்றும் சிறப்பு எழுத்துக்கள் கலந்த ஒரு பாஸ்வேர்டை உருவாக்குவது நல்லது. அடுத்து பாஸ்வேர்டை உறுதிசெய்து, செய்யப்பட்ட மாற்றங்களை பதிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
வழிமுறை-5: உங்கள் கணக்கை அணுகலாம்: (Access your account)
மேற்குறிப்பிட்டவாறு புதிய பாஸ்வேர்டை உருவாக்கி, பின்னர் அதைப் பயன்படுத்தி ஜிமெயில் கணக்கில் மீண்டும் உள்நுழையலாம். அடுத்து நீங்கள் உருவாக்கிய புதிய பாஸ்வேர்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், மேலும் மேம்பட்ட பாதுகாப்பிற்காக உங்கள் ஜிமெயில்
கணக்கு லாகின் செய்யப்பட்டுள்ள அனைத்து சாதனங்களிலும் சரிபார்ப்பது நல்லது.


Click it and Unblock the Notifications