ஒருத்தரும் புரிந்துகொள்ளவில்லை; விடாமுயற்சியின் கீழ் விளைந்த ஒரு பல்ப் புரட்சி; சபாஷ் சோலங்கி.!

22 வயதில், தீபக் சோலங்கியின் அனைத்து திறமைகளும் வெளிவந்தன.

|

22 வயதில், தீபக் சோலங்கியின் அனைத்து திறமைகளும் வெளிவந்தன. ஒரு பொறியியல் மாணவர் ஆன, சோலங்கி, ஐஐடி பாம்பே மற்றும் ஐஐடி ஹைதராபாத்தில் ரோபாட்டிக்ஸ் படித்தார் பின்னர் ஆராய்ச்சியாளராக உருவாக முடிவெடுத்தார். அதனை தொடர்ந்து, கடந்த 2012 ஆம் ஆண்டில், லைட் ஃபீடிலிட்டி (லி-ஃபை) என்று அழைக்கப்படும் ஒரு தனி உரிமையாளர் வியாபாரத்தை தொடங்கினார்.

அதென்ன லி-ஃபை.?
மிக சுருக்கமாக, ரேடியோ அலைகள் மற்றும் வைஃபை வழியிலான டேட்டா பரிமாற்றம் மற்றும் இணைய சக்தியை தான் இன்டர்நெட் என்கிறோம். இப்படியாக, தற்போது வரையிலாக அனுககிடைக்கும் இன்டர்நெட்டை பெறுவதற்கான மற்றொரு வழிதான் லி-ஃபை. மற்றொரு வழி மட்டும் அல்ல, இது இன்னும் எளிமையான மற்றும் மலிவான ஒரு வழியாகும். ஏனெனில் லி-ஃபை தொழில்நுட்பம் ஆனது, தரவு பரிமாற்றத்தை ஒளி வழியாக நிகழ்த்துகிறது.

100 மடங்கு வேகமான இணைய வேகத்தை வழங்கும்.!

100 மடங்கு வேகமான இணைய வேகத்தை வழங்கும்.!

எடின்பர்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஹரால்ட் ஹேஸ் மூலம் வழிமொழியப்பட்ட இந்த லி-ஃபை தொழில்நுட்பம் ஆனது, அதிவேக தகவல்தொடர்புகளை வழங்குவதற்காக எல்ஈடி பல்புகளைப் பயன்படுத்துகிறது. இது பாரம்பரிய வைஃபை-ஐ விட 100 மடங்கு வேகமான இணைய வேகத்தை வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படியான லி-ஃபை என்றழைக்கப்படும் தொழில்நுட்பம் மீது பேரார்வம் கொண்ட தீபக், ஒரு நண்பருடன் சேர்ந்து லி-ஃபை சார்ந்த பணிகளில் ஈடுபட்டார். நல்ல முடிவுகளை வெளிக்கொணர்ந்தார்.

எந்தவொரு நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை.!

எந்தவொரு நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை.!

2013-ஆம் ஆண்டின் கோடைகாலத்திற்குள், தீபக் இந்த தொழில் நுட்பத்தை முன்மாதிரியை தன் கைகளில் கொண்டிருந்தார். அவரால் ஒளி வழியாக டேட்டாவை அனுப்ப முடிந்தது. இது எல்ஈடி விளக்குகளை சம்பந்தப்படுத்திய ஒரு தொழில்நுட்பம் என்பதால், தீபக் ஒரு லைட் கம்பெனியை அணுக வேண்டும் என்று நினைத்தார்.ஆகும். இருந்தபோதிலும், தீபக்கின் லி-ஃபை முன்முயற்சியின் மீது, எந்தவொரு நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை. ஆக, தீபக் முதலீட்டாளர்களை சந்தித்து நிதி திரட்டவும், ஒரு வொர்கிங் மாடலை தயாரிக்கவும் முடிவு செய்தார்.

ஒரு வாய்ப்பு கிடைத்தது.!

ஒரு வாய்ப்பு கிடைத்தது.!

இருப்பினும், தீபக் சோலங்கி மீண்டும் ஏமாற்றமடைந்தார். தீபக்கின் யோசனையை எந்தவொரு முதலீட்டாளராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவருடைய முன்மாதிரி ஒரு விஞ்ஞான பரிசோதனையாக கருதப்பட்டது, அதன் விளைவாக லி-ஃபை ஒதுக்கித் தள்ளப்பட்டது. வேறு வழிகிடைக்காத தீபக், சோதனை முயற்சியை கையாண்டுகொண்டே பல்வேறு நிறுவனங்களுக்கான தயாரிப்பு ஆலோசனை பணிகளை செய்து வந்தார். ஒருவழியாக, 2014 ல், எஸ்டோனியாவில் உள்ள பில்ட்இட் (Buildit) ஹார்ட்வேர் அக்சிலரேட்டர் உடன் சேர்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இந்தியாவில் அமைக்க விரும்பினார்.!

இந்தியாவில் அமைக்க விரும்பினார்.!

எஸ்டோனிவிற்கு சென்ற தீபக், அங்கு மூன்று மாத கால வேலைத்திட்டத்தில் சேர்ந்தார். அந்த காலகட்டத்தில் ஐரோப்பாவில் உள்ள இதர டெக் சமுதாயத்தை சந்தித்தார். அதன் வழியாக, அவரின் தயாரிப்புக்கான நிகழ்நேர ஒருங்கிணைப்புகளை பெற முடிந்தது. சரியாக 2015 ஆம் ஆண்டு வாக்கில், எஸ்டோனியா தொழில் முனைவர் வழியாக எல்ஈடி விளக்குகளின் வழியகாக லி-ஃபை ஒருங்கிணைப்பு பணிக்கான ஒப்பந்தத்தை பெற்றார். 2015 கோடையில், தீபக் சோலங்கி இந்தியாவிற்கு திரும்பினார். ஏனெனில் அவர் தனது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி குழுவை, இந்தியாவில் அமைக்க விரும்பினார்.

ஏறுமுகம் மட்டுமே.!

ஏறுமுகம் மட்டுமே.!

பின்னர், நோர்டிக் பிராந்தியத்தில் நடந்த மிகப்பெரிய தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்பு, அதன் வழியிலான முதலீட்டு வாய்ப்பு, ஊடகங்களில் லி-ஃபை என்கிற புதுமையான தொழில்நுட்பம் மீது கிளம்பிய ஆர்வம், ஜெர்மனியின் மாபெரும் அக்சிலரேட்டர் நிறுவனமான ஏர்பஸ் உடனான ஆறு மாத கால ஒப்பந்தம், அதன் விளைவாக, தீபக்கின் வெல்மணி நிறுவனம், ஏர்பஸ் மூலம் உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக உருமாறியது. அதன் பின்னர், தீபக்கின் வியாபாரத்தில் ஏறுமுகம் மட்டுமே.!

இரண்டு வெவ்வேறு சாதனங்களை உருவாக்கியது.!

இரண்டு வெவ்வேறு சாதனங்களை உருவாக்கியது.!

வெல்மணி நிறுவனம், ஒரு தனித்துவமான நிலையை அடைய, லி-ஃபை தொழில்நுட்பம் உடனான சில புரிதல்களை நிகழ்த்தியது. லி-ஃபை ஆனது இன்டர்நெட்டின் ஒட்டுமொத்த முகத்தையும் மாற்றியமைக்கும் என்பதை புரிந்துகொண்ட தீபக், லி-ஃபை ஆனது, வரவிருக்கும் 5ஜி சேவையின் ஒரு பகுதியாக திகழும் என்பதையும் உணர்ந்தார். அதன் விளைவாக, இந்த தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்வதற்காக, வெல்மணி நிறுவனம், இரண்டு வெவ்வேறு சாதனங்களை உருவாக்கியது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
அதன் வழியாக எவரும் இணையத்தை அணுகலாம்.!

அதன் வழியாக எவரும் இணையத்தை அணுகலாம்.!

ஒன்று கட்டிடத்திற்குள் பயன்படுத்தும் படியும், மற்றொன்று வெளிப்புறத்திற்கு பயன்படுத்தலாம் என்பது போன்றும் இரண்டு வெவ்வேறு சாதனங்கள் உருவானது. இண்டோர் சொல்யூஷன் ஆனது ஒரு அணுகல் புள்ளி மற்றும் ஒரு டாங்கிளை உள்ளடக்கியதாக இருந்தது, அதாவது வைஃபை போன்றே. மறுகையில் உள்ள அவுட்டோர் சொல்யூஷன் ஆனது, ஆப்டிகல் கேபிள் உட்கட்டமைப்புக்கு மாற்றாக, தனித்தனி சாதனங்களாக பதிக்கப்பட்டது. அந்த தனித்தனி சாதனங்கள் ஆனது, தெரு விளக்குகள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் என எதிலும் பொருத்தலாம், அதன் வழியாக எவரும் இணையத்தை அணுகலாம். இதுதான் தீபக்கின் வெல்மணி நிறுவனம் நிகழ்த்திய லி-ஃபை சாதனையாகும்.

Best Mobiles in India

English summary
Forget Wi-Fi: This startup tech can power the Internet using light bulbs and is 100 times faster. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X