'டெக்' போதை : சொன்னா புரியாது 'இந்த போஸ்டர்களை' பார்த்தால் புரியும்..!
"போன் நம்பர் கொடுங்களேன்" என்பது "வாட்ஸ்ஆப் நம்பர் கொடுங்களேன்" என்று மாறிவிட்டது. அட இதை விடுங்கப்பா.. அட்ரஸ் கேட்டால், ஃபேஸ்புக் ஐடி-யை தருகிறார்கள், "எங்கயும் போக மாட்டேன் வீட்ல தான் இருப்பேன்" என்று சொல்லுவது போல, " எப்பவும் ஆன்லைன்-ல தான் இருப்பேன்" என்று சொல்கிறார்கள்..!
இது எந்த மாதிரியான தலைமுறை என்ற குழப்பமே இல்லாமல் தெளிவாக 'டெக் போதை'க்குள் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கிறது தற்கால டெக் ஜென்ரேஷன். அதை அற்புதமாக மற்றும் நகைச்சுவை கலந்து உணர்த்தும் போஸ்டர்களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

செல்பீ :
இந்த தலைமுறையை பொருத்த மட்டில் செல்பீ எடுக்க ஆகச்சிறந்த இடம் - பாத்ரூம்..!

டைப்பிங் :
இந்த காலத்து பசங்களின் மெசேஜ்களை அவர்கள் டைப்பிங் ஸ்டைல் வைத்தே கண்டுப்பிடித்து விடலாம்..!

பாவிகள் :
இந்த தலைமுறையை பொருத்தமட்டில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் இல்லாதவர்கள் எல்லாம் பாவப்பட்டவர்கள்..!

வாட்ஸ்ஆப் ஆன்லைன் :
இந்த தலைமுறைக்கு, மனதிற்கு பிடித்தவர்கள் வாட்ஸ்ஆப்பில் ஆன்லைன் வந்து டைப் செய்கிறார்கள் என்று பார்ப்பதை விட பெரிய சந்தோசம் கிடையாது..!

வாட்ஸ்ஆப் :
வாட்ஸ்ஆப் லாஸ்ட் சீன் : 8 நொடிகளுக்கு முன்..!
புத்தகம் : 8 மாதங்களுக்கு முன்..!

ரகசியம் :
ஒரு ஃபோல்டருக்குள் ஏகப்பட்ட ஃபோல்டர்கள் இருக்கிறது, அதில் ஒரு ஃபோல்டருக்குள் மறுபடியும் ஏகப்பட்ட ஃபோல்டர்கள் இருக்கிறது என்றால் அங்கு ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது என்று அர்த்தம்..!

பிளாக் :
இந்த தலைமுறை மக்களுக்கு, வெறுப்பை காட்ட வேண்டும் என்றால் முதலில் செய்யும் காரியம் - காயப்படுத்தியவர்களை பிளாக் செய்வது..!

டேட்டிங் :
இந்த காலத்தை பொருத்தவரை 'டேட்டிங்' என்றால் நேரில் சந்திப்பாதை தவிர்த்து மீதி எல்லாமே செய்வது தான்..!!

திருமண அழைப்பிதழ்கள் :
நவீனகால திருமண அழைப்பிதழ்கள் இப்படித்தான் வழங்கப்படுகின்றன..!

இன்டர்நெட் :
இந்த தலைமுறை மக்களுக்கு எதைக்காட்டிலும் இன்டர்நெட் தான் மிக மிக முக்கியம்..!

நிரந்தர விலாசம் :
உங்களது நிரந்தரமான விலாசம் எது என்று கேட்டால் ஃபேஸ்புக் ஐடியை வழங்க வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை..!

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications