ஒபாமாவிற்கு இன்னும் அதிக பணம் தேவைப்படுகிறதாம். ஏன்..?

|

ஒரு உலக நாடு எதை வேண்டுமானாலும் ஒற்றுக்கொள்ளும், ஆனால் தன் நாட்டு ராணுவத்திற்கு ஆண்டுதோறும் ஒதுக்கும் பட்ஜெட் பற்றி மட்டும் வாயை திறக்கவே திறக்காது. ஆகையால், எந்த நாடு தன் ராணுவத்sதிற்கு அதிக அளவில் நிதி ஒதுக்குகிறது என்பதற்கான 'உண்மையான தகவல்' தெரிய வாய்ப்பே இல்லை.

இருப்பினும் ரஷ்யா, சீனா, அமெரிக்கா போன்ற சூப்பர்பவர் நாடுகள் தான் டாப் ராணுவ பட்ஜெட் பட்டியலின் முதல் இடத்தில் இருக்கும் என்பதற்கு இந்த 2015-ஆம் ஆண்டு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.

லேசர் - உளவு :

லேசர் - உளவு :

தயாரிப்பு மற்றும் உபயோகம் என்ற அடித்தளம் கொண்டு பார்க்கையில் அதிநவீன ஆயுதங்களான லேசர் ஆயுதங்கள் மற்றும் உளவு செயற்கைகோள்கள் ஆகியவற்றிக்கு இந்த ஆண்டு நிஜமாகவே ஒரு சிறப்பான ஆண்டு ஆகும்.

ட்ரோன்கள் - விமான தாங்கிகள் :

ட்ரோன்கள் - விமான தாங்கிகள் :

அதே சமயம், பறக்கும் ட்ரோன்கள் மற்றும் விமான தாங்கிகள் ஆகியவைகளுக்கு இந்த ஆண்டு மிக மோசமான ஆண்டு ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரவு செலவு கோரிக்கை :

வரவு செலவு கோரிக்கை :

இந்த அமெரிக்காவிற்கு பொருந்தும் என்பது சமீபத்தில் வெளியான அமெரிக்க பாதுகாப்புத் துறை வரவு செலவு கோரிக்கை (Defense Department budget request ) மூலம் தெரிய வந்துள்ளது.

கண்காணிப்பு :

கண்காணிப்பு :

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை (United States Department of Defense) ஆனது அதிபர் ஒபாமவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் ஒரு துறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் :

அதிகம் :

வெளியான பட்ஜெட் ஆனது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிகாக 500 மில்லியன் டாலர்கள் தேவை என்ற கோரிக்கை விடுத்துள்ளது, இது கடந்த ஆண்டை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைமுறை தொழில்நுட்பங்கள் :

தலைமுறை தொழில்நுட்பங்கள் :

மேலும் செயற்கை உயிரியல் (synthetic biology) தொடங்கி விண்வெளி விமானங்கள் வரையிலான அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை உருவாக்க 'டார்பா'விற்கு (DARPA) சற்று கூடுதல் நிதி ஒதுக்க ஒபாமா பரிந்துரை செய்துள்ளார்.

பணித்திட்டங்கள் முகமை :

பணித்திட்டங்கள் முகமை :

டார்பா என்பது அமெரிக்காவின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி பணித்திட்டங்கள் முகமை (Defense Advanced Research Projects Agency) என்பது குறிப்பிடத்தக்கது.

67 மில்லியன் டாலர்கள் :

67 மில்லியன் டாலர்கள் :

மேலும் லேசர் மற்றும் எலெக்ட்ரானீக் ஆயுதங்களுக்கான (electronic and laser weapon systems) பட்ஜெட் ஆனது 55 மில்லியன் டாலர்களில் இருந்து 67 மில்லியன் டாலர்களாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆஃப்செட் மூலோபாயம் :

ஆஃப்செட் மூலோபாயம் :

இந்த அளவிலான பட்ஜெட், கடந்த ஆண்டு அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் சக் ஹேகல் (Chuck Hagel) அடுத்த நூற்றாண்டில் அமெரிக்க தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தின் திருப்புமுனைகளை உருவாக்க வல்ல ஒரு புதிய "ஆஃப்செட் மூலோபாயம்" (offset strategy) உருவாக்கப்படும் என்று கூறியிருந்தை நினைவுப்படுத்துகிறது.

ஆளில்லாத வான்வழி வாகனம் :

ஆளில்லாத வான்வழி வாகனம் :

பட்ஜெட்டில் முதல் முறையாக ஆளில்லாத வான்வழி வாகனம் சார்ந்த 'ஒருங்கிணைப்பு மற்றும் இயங்கும் தன்மை' ஆகியவற்றிற்காக 41.8 மில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரீப்பர் ட்ரோன் :

ரீப்பர் ட்ரோன் :

குறிப்பாக தீவிரவாதிற்கு எதிராக பயன்படுத்த 29 ரீப்பர் வகை ட்ரோன்களை வாங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 7 பில்லியன் டாலர்கள் :

7 பில்லியன் டாலர்கள் :

விண்வெளி பாதுகாப்பு துறை சார்ந்த திட்டங்களுக்காக சுமார் 7 பில்லியன் டாலர்கள் தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதில் 'ஸ்பேஸ் ஃபென்ஸ்' (Space Fence) திட்டமும் அடங்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>விஞ்ஞானிகளின் மூளையை 'கசக்கும்' விண்வெளி குழப்பங்கள்..!</strong>விஞ்ஞானிகளின் மூளையை 'கசக்கும்' விண்வெளி குழப்பங்கள்..!


இந்தியாவிற்குள் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா..!

<strong>பாகிஸ்தானின் 'வீபரீத' வளர்ச்சி : அலறும் அமெரிக்க 'தின்க் டேன்க்'..!</strong>பாகிஸ்தானின் 'வீபரீத' வளர்ச்சி : அலறும் அமெரிக்க 'தின்க் டேன்க்'..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Obama Wants More Money for Military Spy Satellites, Lasers, Space Fence. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X