ஜியோ பயனர்களுக்காக குறும்படம் தயாரிக்கும் ரிலையன்ஸ்!

"உள்ளடக்கம் எனப்படும் கன்டென்ட்டில் உள்ள சவால் என்னவெனில், சொந்தமாக கன்டென்ட் உருவாக்க ,தனித்துவமான மரபணு தேவை.

By Vivek Sivanandam
|

ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் தனது தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ இன்போகாம் லிமிட்டேட்-ன் சந்தாதாரர்களுக்காக , இணைய தொடர்கள்(Web series) மற்றும் குறும்படங்கள் தயாரிக்க சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை அமைக்கிறது. மற்ற நிறுவனங்களுடன் சலுகைகளில் தொடர்ந்து போட்டிபோட ஏதுவாக இதில் களமிறங்கியுள்ளது.

அதன் 215 மில்லியன் ஒயர்லெஸ் பயனர்களுடன் சேர்த்து இன்னும் அதிக பயனர்களை கவர இந்த திட்டம் உதவும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. மேலும் இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது ஒயர்டு பிராட்பிராண்டு சர்வீஸை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தும் போதும் அதிக பயனர்களை கவரலாம் என நினைக்கிறது.

வீடியோ ஸ்டிரீமிங்

வீடியோ ஸ்டிரீமிங்

டேட்டா கட்டணங்கள் குறைந்ததால் மொபைல் டேட்டா/இணைய பயன்பாடு அதிகரித்து, நெட் பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோ போன்ற வீடியோ ஸ்டிரீமிங் சேவைகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்துள்ளது. இந்த தளங்களில் இந்தியாவிற்கு என்று பிரத்யோகமாக உள்ள சேக்ரெட் கேம்ஸ் மற்றும் காமிக்ஸ்டன் போன்ற நிகழ்ச்சிகள் பிரபலமடைந்து வருகின்றன.

ஸ்கிரிப்ட் ரைட்டர்கள்

ஸ்கிரிப்ட் ரைட்டர்கள்

" உள்ளடக்கத்திற்கான சந்தை இன்னும் சரியாக கட்டமைக்கப்படவில்லை. மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கும் விதமாக ரிலையன்ஸ் நிறுவனம் கொத்தாக சில ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்களை பணிக்கு சேர்த்துள்ளது. இத்தகவல்களை இதில் பணியாற்றும் பெயர்வெளியிட விரும்பாத நபர் தெரிவித்துள்ளார்.

5% பங்குகளை வாங்குவதாகவும் ரிலையன்ஸ் அறிவித்தது

5% பங்குகளை வாங்குவதாகவும் ரிலையன்ஸ் அறிவித்தது

கன்டென்ட் வழங்குவதை அதிகரிக்கும் விதமாக சமீபத்தில் சில கையகப்படுத்தும் நடவடிக்கைகளை செய்துள்ளது ரிலையன்ஸ். மார்ச் மாதம், மியூசிக் செயலியான சாவ்ன்-ஐ(Saavn) தனது டிஜிட்டல் மியூசிக் சேவையான ஜியோ-மியூசிக் உடன் இணைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் இன்டர்நேசனலின் 5% பங்குகளை வாங்குவதாகவும் ரிலையன்ஸ் அறிவித்தது.

ஜோதி தேஷ்பாண்டே

ஜோதி தேஷ்பாண்டே

ஈரோஸ் நிறுவனத்தின் முன்னாள் குழு தலையை செயல் அதிகாரியும், மேலாண் இயக்குனருமான ஜோதி தேஷ்பாண்டே, ரிலையன்ஸ் நிறுனத்தின் ஊடக மற்றும் பொழுதுபோக்கு பிரிவின் தலைவராக பொறுப்பேற்று, தற்போது கன்டென்ட் எகோசிஸ்டம் தொடர்பான வர்த்தகத்தை கட்டமைக்கும் இந்நிறுவனத்தின் முன்னெடுப்புகளை முன்னின்று நடத்தி வருகிறார்.

 20-25 புதுமை படைப்பாளிகள்

20-25 புதுமை படைப்பாளிகள்

"சமீபத்தில் 20-25 புதுமை படைப்பாளிகள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்கள் தான் உண்மையான இந்திய கன்டென்ட்களை நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற தளங்களில் பெரிய இடத்திற்கு கூட்டிச் செல்கின்றனர் என்பதை இந்நிறுவனம் உணர்ந்துள்ளது. எனவே இந்நிறுவனம் இன்னும் 4 முதல் 6 வாரங்களில் சில இணைய தொடர்களை நுகர்வோருக்கு தரும் என நம்புகிறது" என்கிறார் அவர்.

 சினிமேடிக் வி.ஆர் ப்லிம் மேக்கர் தலைமுறை

சினிமேடிக் வி.ஆர் ப்லிம் மேக்கர் தலைமுறை

மேலும் ஜியோ நிறுவனம் மீடியா ஆர்ட்ஸ் இன்ஸ்ட்யூட் விசிலிங் வுட்ஸ் இன்டர்நேசனல் உடன் இணைந்து, சினிமேடிக் வி.ஆர் ப்லிம் மேக்கர் தலைமுறையை உருவாக்கும் நோக்கத்துடன், விர்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்டேட் ரியாலிட்டிக்கு என பிரத்யோக ஆய்வகம் அமைக்கவுள்ளது.

"உள்ளடக்கம் எனப்படும் கன்டென்ட்டில் உள்ள சவால் என்னவெனில், சொந்தமாக கன்டென்ட் உருவாக்க ,தனித்துவமான மரபணு தேவை. அது தற்போது எங்களிடம் இல்லாததால், கன்டென்ட் கொடுக்கும் கூட்டணியை தேடிவருகிறோம். சில சமயங்களில் அதை நீங்களாகவே செய்யவேண்டும் எனில், புதுமையாக சிந்தித்து வித்தியாசமான படைப்புகளை உருவாக்கவேண்டும். அது இன்னமும் எனக்கு யூகமாகவே உள்ளது. தற்போது நாங்கள், தளத்தை கட்டமைப்பதில் கவனம் செலுத்துகிறோம்" என்கிறார் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சி.ஈ.ஓ கோபால் விட்டல்.

அமேசான்

அமேசான்

இரு தொலைதொடர்பு நிறுவனங்களும் ஹோம் பிராட்பிராண்ட்ல் முதலீடு செய்து வரும் நிலையில், கன்டென்ட் நுகர்வோரை அதிகம் கவரும் என எதிர்பார்க்கின்றன.


கன்டென்ட்களுக்காக புதிய தளத்தை உருவாக்கும் ரிலையன்ஸின் அணுகுமுறை சிறப்பாக செயல்பட்டு, அந்த புதிய மீடியா பொழுதுபோக்கு உலகில் சிறப்பான இடத்தை பெறும். நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற தளங்களில் ஏராளமான கன்டென்ட்கள் வந்தவண்ணம் உள்ளன. மேலும் அவை, பாரம்பரிய தயாரிப்பு நிறுவனங்கள் வாய்ப்பு கிடைக்காத திறமையாளர்களின் வெற்றிக்கும் வழிவகுக்கின்றன"என்கிறார் ஆய்வாளர் ஒருவர்.

Best Mobiles in India

English summary
For Reliance Jio subscribers RIL will produce short films serials: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X