Home
News

வெறும் ரூ.61 தான்.. Jio கஸ்டமர்களுக்கு கிடைக்கும் ஸ்பெஷல் 5G பிளான்.. ரீசார்ஜ் செஞ்சா என்ன கிடைக்கும்?

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ "கிட்டதட்ட" நாடு முழுவதும் தனது 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துவிட்டது. ஆனால் 5ஜி சேவைக்கென பிரத்யேக திட்டங்கள் எதையும் அறிமுகம் செய்யவில்லை. இதற்கிடையில் ஜியோ வலைத்தளத்தில் ஸ்பெஷல் 5ஜி பிளான் ஒன்று ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

அதென்ன திட்டம்? ஜியோ வலைத்தளத்தில். 5ஜி அப்கிரேட் (5G Upgrade) என்கிற தொகுப்பின் கீழ் ஒரே ஒரு ஜியோ திட்டம் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் விலை ரூ.61 ஆகும். பெயர் குறிப்பிடுவது போலவே இது 4ஜி ஸ்பீடில் இருந்து 5ஜி ஸ்பீட்டிற்கு அப்கிரேட் ஆக அனுமதிக்கும் ஒரு திட்டமாகும்.

வெறும் ரூ.61 தான்.. Jio கஸ்டமர்களுக்கு கிடைக்கும் ஸ்பெஷல் 5G பிளான்!

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ஜியோ வலைதளத்தின் படி, ரூ.61-ன் கீழ் 6ஜிபி அளவிலான ஹை ஸ்பீட் டேட்டா (6GB High Speed Data) கிடைக்கும். இது ஜியோ 5ஜி சேவைகள் அறிமுகமான பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) வழங்கும் ஒரு டேட்டா பிளான் ஆக செயல்படும்.

இதன்கீழ் கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவானது, மற்ற ஜியோ திட்டங்களுடன் அணுக கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி சலுகையை (Unlimited 5G Offer) போலவேதான் வேலை செய்யும். அதாவது ஜியோவின் ட்ரூ 5ஜி (Jio True 5G) அறிமுகம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும், ஜியோ வெல்கம் ஆஃபருக்காக (Jio Welcome Offer) அழைக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

வெறும் ரூ.61 தான்.. Jio கஸ்டமர்களுக்கு கிடைக்கும் ஸ்பெஷல் 5G பிளான்!

எல்லாவற்றை விட முக்கியமான விஷயம்.. ஜியோவின் ரூ.119, ரூ.149, ரூ.179, ரூ.199 மற்றும் ரூ.209 போன்ற மெயின் ரீசார்ஜ் திட்டங்களுடன் மட்டுமே ரூ.61 டேட்டா பிளானின் நன்மைகள் பொருந்தும். மேலும் ரூ.61-ன் வேலிடிட்டி (Validity) ஆனதும் கூட மேற்கண்ட மெயின் ரீசார்ஜ்கள் உடன் ஒற்றுப்போகும்.

ஜியோவின் பிரபலமான திட்டங்களில் ஒன்றான ரூ.749-ன் நன்மைகள் மாற்றப்பட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது ரூ.749 திட்டத்தின் கீழ் 20ஜிபி கூடுதல் டேட்டா நன்மை கிடைக்கிறது. தற்போதைக்கு சேர்க்கப்பட்ட போனஸ் டேட்டாவை தவிர, ரூ.749-ன் வழக்கமான / பழைய நன்மைகளில் எந்த மாற்றமும் இல்லை.

வெறும் ரூ.61 தான்.. Jio கஸ்டமர்களுக்கு கிடைக்கும் ஸ்பெஷல் 5G பிளான்!

ஜியோ ரூ.749 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இது டெய்லி 2ஜிபி டேட்டா, அன்லிமிட்ட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்குகிறது. கூடவே ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ க்ளவுட் (JioCloud) ஆகியவற்றிற்கான இலவச சந்தாக்களையும் வழங்குகிறது.

இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் கிரிக்கெட் சலுகையின் ஒரு பகுதியாக, இந்த திட்டத்தில் 20ஜிபி போனஸ் டேட்டா சேர்க்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் 90 நாட்களுக்கு 18ஜிபி வழக்கமான டேட்டா + 20ஜிபி கூடுதல் டேட்டா என் மொத்தம் 200ஜிபி டேட்டாவை பெறுவீர்கள்.

இந்த 20ஜிபி போனஸ் டேட்டாவானது 'லம்ப்சம்' முறையில் வழங்கப்படுகிறது; அதாவது இதற்கென எந்த லிமிட்டும் இருக்காது. பயனர் விரும்பும் போது இதை பயன்படுத்திக்கொள்ளலாம். ரூ.749 திட்டத்தின் வேலிடிட்டி முடியும் வரையிலாக போனஸ் ஆக கிடைக்கும் 20பிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்; மெயின் ரீசார்ஜ்ஜின் வேலிடிட்டி முடிந்தபின்னர் போனஸ் டேட்டாவும் காலாவதியாகிவிடும்.

ஒருவேளை 20ஜிபி போனஸ் டேட்டாவையும் சேர்த்து டெய்லி கிடைக்கும் 2ஜிபி டேட்டாவையும் நீங்கள் பயன்படுத்தி விட்டீர்கள் என்றால்.. மறுநாள் வரையிலாக 64கேபிபிஎஸ் ஸ்பீடில் இண்டர்நெட் சேவை அணுக கிடைக்கும். இந்த திட்டத்தில் 5ஜி வெல்கம் ஆஃபரும் வருகிறது. உங்களிடம் 5ஜி போன் இருந்தால், அது 5ஜி எஸ்ஏ மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி கவரேஜின் கீழ் இருந்தால், நீங்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
For Just Rs 61 Jio Customers Can Upgrade From 4G to 5G Speed Here is How
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X