பிளிப்கார்ட் ஆர்டரை ரத்து செய்து இரண்டு முறை பணம் பெற்ற எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்.!

ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு பின்னர் ரத்து செய்ய கூடுமானால் இலவசமாக பணம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் .

|

பிரபல இகாமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட் இணையதளத்தில் ஆர்டர் செய்த பொருளை கேன்சல் செய்த ஒருசிலருக்கு இரண்டு தடவை பணம் வந்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்டரை ரத்து செய்து இரண்டு முறை பணம் பெற்ற வாடிக்கையாளர்கள்.!

நமக்கு இலவசமாக ஏதாவது ஒரு பொருள் கிடைத்தால் லாபகரமானதாக இருக்கும் என்று நாம் எண்ணியது உண்டுதானே. அதிலும் அந்த இலவசம் பணம் வடிவத்தில் இருக்கும்போது மிகவும் நன்றாக இருக்கும். தற்போது ஒரு ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு பின்னர் ரத்து செய்ய கூடுமானால் இலவசமாக பணம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு கற்பனையாக இருக்கும் என்று தானே உங்களுக்கு தோன்றுகிறது. ஆனால் இது உண்மையாக இது உண்மையாக இருப்பது சமீபத்திய அறிக்கை ஒன்றின்மூலம் தெரியவந்துள்ளது, இந்த அறிக்கையின்படி, நாட்டின் மிகப்பெரிய பொது கடன் வங்கியான எஸ்பிஐ வங்கியின் 39 கணக்குதாரர்கள் ஆன்லைன் ஆர்டரை ரத்து செய்த பின்னர் இரண்டு தடவை பணத்தை திரும்பப் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள மேஹ்சானா

குஜராத் மாநிலத்தில் உள்ள மேஹ்சானா

குஜராத் மாநிலத்தில் உள்ள மேஹ்சானா, பதான் மற்றும் அகமதாபாத் மாவட்டங்களில் உள்ள 39 எஸ்பிஐ வங்கி பயனாளிகள் பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஆர்டர் செய்த பொருளை கேன்சல் செய்தபோது இரண்டு முறை பணத்தை திரும்ப பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதாவது ஒருமுறை வங்கியும் இன்னொரு முறை பிளிப்கார்ட் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுத்துள்ளது.

மாணவர்கள்  தான் பெற்றுள்ளதாக தெரிகிறது.!

மாணவர்கள் தான் பெற்றுள்ளதாக தெரிகிறது.!

இந்த பணத்தை பெரும்பாலௌம் மாணவர்கள் தான் பெற்றுள்ளதாக தெரிகிறது. தங்கள் வங்கிக்கணக்கில் பிளிப்கார்டு ஒருமுறையும் ஓரிரண்டு நாட்கள் கழித்து வங்கி ஒருமுறையும் பணத்தை கிரிடெட் செய்துள்ளதால் அந்த மாணவர்கள் இன்ப அதிர்ச்சியுடன் ஒரு குழப்பத்தையும் அடைந்துள்ளனர். எனவே பிளிப்கார்டில் இருந்து பொருளின் மதிப்புக்குரிய தொகையையும், அதே அளவு தொகையை வங்கியில் இருந்தும் அவர்கள் பெற்றுள்ளனர்.

 இரட்டிப்பு பயனை அடைய தொடங்கியுள்ளனர்.

இரட்டிப்பு பயனை அடைய தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு இரண்டு முறை பணம் பெற்ற வங்கி வாடிக்கையாளர்கள் பின்னர் வேண்டுமென்றே பிளிப்கார்டில் ஒரு பொருளை ஆர்டர் செய்துவிட்டு பின்னர் அந்த ஆர்டரை கேன்சல் செய்துவிட்டு மீண்டும் மீண்டும் பணத்தை இரண்டு முறை திரும்ப பெற்றுள்ளனர். இந்த செய்தி அந்த மாணவர்களின் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பரவியதால் அவர்களும் பிளிப்கார்டில் கண்ணுக்கு தெரிந்த பொருளை ஆர்டர் செய்துவிட்டு பின்னர் கேன்சல் செய்துவிட்டு அந்த இரட்டிப்பு பயனை அடைய தொடங்கியுள்ளனர். இதனால் 39 வங்கி கணக்காளர்களால் ஒருசில குறிப்பிட்ட வங்கியின் கிளைகள் சுமார் 1090 பரிமாற்றங்களில் சுமார் ரூ.7 கோடி அளவிற்கு பணத்தை இழந்துள்ளான்.

வணிகர்களிடமிருந்து பணத்தை திரும்பப் பெற பயன்படுத்தினர்

வணிகர்களிடமிருந்து பணத்தை திரும்பப் பெற பயன்படுத்தினர்

இதுகுறித்த அறிக்கை ஒன்று கூறுவதாவது: ஆன்லைன் ரத்துசார்ந்த ஒழுங்குமுறை விசாவின் புதிய புதுப்பிப்பின் விளைவாக இருந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. முன்னதாக, ஆன்லைன் ரத்து முடிந்தபிறகு, வாங்குபவர்கள் வணிகர்களிடமிருந்து பணத்தை திரும்பப் பெற பயன்படுத்தினர். ஆனால் இது ஒரு கையேடு செயல்முறையாக இருந்தது, இது பணம் மற்றும் விசா, மாஸ்டர்கார்ட் அல்லது ரூபே போன்றவற்றில் இருந்து பணம் பெற ஒப்புதல் அளித்தது. இருப்பினும், விசா ஒருமுறை பணத்தை திருப்பிச் செலுத்தியுள்ளது என்பது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாள எண்கள்

அடையாள எண்கள்

தானியங்கி பணமளிக்கும் திட்டம் சுமார் ஐந்து வங்கி அடையாள எண்கள் அல்லது பின் எண் என நடைமுறைப்படுத்தப்பட்டது, இது ஒரு பற்று அல்லது கடன் அட்டையை தனிப்பட்ட அடையாளமாகக் கொண்ட நான்கு இலக்க எண்ணாகும். இந்த திட்டத்தின்படி மேனுவலாக பணத்தை திருப்பிச் செலுத்துதல் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக மற்றும் கார்டு மூலம் திருப்பி செலுத்தும் திட்டத்தை நீட்டித்துள்ளது.

தவறாக செலுத்தப்பட்ட பணம் திரும்ப கிடைக்கும்

தவறாக செலுத்தப்பட்ட பணம் திரும்ப கிடைக்கும்

மொத்தத்தில் பழைய முறையில் கணக்கை கடைபிடித்ததால் தான் இவ்வாறு இரண்டு முறை திருப்பி செலுத்தும் தவறு நடந்துள்ளது. இந்த ஏழு கோடி ரூபாய் இழப்பு குறித்து வங்கி தற்போது மோசடி புகார் ஒன்றை அளித்து நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையை கேட்டுக்கொண்டுள்ளது. சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டால் தவறாக செலுத்தப்பட்ட பணம் திரும்ப கிடைக்கும் என்று எஸ்பிஐ நிர்வாகம் காத்திருக்கின்றது.

Best Mobiles in India

English summary
For cancelling Flipkart orders SBI account holders get double refund Heres How: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X