அடக்கொடுமையே.. Google Maps நம்பி சென்று கர்நாடகா வனப்பகுதியில் சிக்கிய குடும்பம்.. நடந்தது இதுதான்..
கூகுள் மேப்ஸ் (Google Maps) வசதியானது மிகவும் பயனுள்ள வகையில் தான் இருக்கிறது. ஆனாலும் இதை ஒரு சில இடங்களில் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் பிஹாரில் இருந்து கோவாவுக்கு கூகுள் மேப்ஸ் உதவியுடன் சென்ற குடும்பம் தவறுதலாகக் கர்நாடகாவின் வனப்பகுதியில் சிக்கிக் கொண்டனர். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதவது பிஹாரில் வசித்து வரும் குடும்பம் (Bihar family) ஒன்று கோவாவுக்கு கூகுள் மேப்ஸ் உதவியுடன் சென்றுள்ளது. அப்போது கூகுள் மேப் தவறாக வழியைக் காண்பித்ததாகத் தெரிகிறது. எனவே அவர்கள் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் இருக்கும் ஒரு அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிக் கொண்டனர். குறிப்பாக அடர்ந்த காடு என்பதால் மொபைல் நெட்வொர்க் வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அது இரவு நேரம் என்பதால் அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அச்சமடைந்துள்ளனர்.

அதன்பின்பு காரிலேயே இரவு முழுவதும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குறிப்பாக குழந்தைகள் உட்பட ஆறு-ஏழு பேர் அந்த காரில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் விடியற்காலையில் மொபைல் நெட்வொர்க் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க 4 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளனர். அதன்பின்னர் அவசர உதவி எண் 112-ஐ தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து உள்ளூர் போலீஸார் அவர்களை காட்டில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்த மாதம் உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் கூகுள் மேப்ஸ்-ஐ நம்பி உடைந்த பாலத்தின் மீது காரை ஓட்டிச்சென்று, ஆற்றில் கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்தனர்.
அந்த மூன்று பேர் ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக பரேலிக்கு சென்றுள்ளனர். அதுவும் திருமண மண்டபத்தை அடைய கூகுள் மேப்ஸை நம்பி சென்றுள்ளனர். அந்த ஜிபிஎஸ் மேப் அவர்களை உடைந்த மேம்பாலத்தின் மீது வழி காட்டியுள்ளது. அதை நம்பி பாலத்தில் பயணித்த கார், சுமார் 50 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் விழுந்துள்ளது.
இந்த விபத்தை தொடர்ந்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புகாரில் கூகுள் மேப்ஸின் மண்டல மேலாளரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அந்த பாலத்தில் பராமரிப்பு பணிகளைத் துரிதப்படுத்தவும், மற்ற பகுதிகளில் உள்ள சாலைகள் பாலங்கள், சுரங்கப்பாதைகள் ஆய்வு செய்யவும் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக இந்த விபத்து தொடர்பாகப் பேசிய கூகுள் (Google)நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியது என்னவென்றால், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். பின்பு இந்த விஷயத்தில் தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
தற்போது என்ன தான் அதிநவீன தொழில்நுட்பம் இருந்தாலும் அதை கவனமாகத் தான் பயன்படுத்த வேண்டும். நாம் முன்பின் தெரியாத இடத்துக்குச் செல்லும் போது கூகுள் மேப்ஸ் மற்றும் வழியில் வரும் உள்ளூர் மக்களிடம் சரியான பாதைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதன்பின்பு பயணம் செய்வது மிகவும் நல்லது.
photo credit: indiatoday


Click it and Unblock the Notifications








