Just In
- 9 hrs ago
Instagram-ல தினமும் Reels பார்க்குறோம்! ஆனால் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?
- 9 hrs ago
அட்ராசக்கை! இந்த Oppo போன்லாம் இவ்ளோ கம்மி விலையா? இந்த சலுகைக்கு மேல் வேறென்ன வேணும்?
- 10 hrs ago
தரமான அம்சங்களுடன் ஒரு லேப்டாப் வேண்டுமா? அப்போ இந்த புதிய Acer லேப்டாப் பாருங்க.!
- 11 hrs ago
ஓஹோ! இப்படி செஞ்சா 12 மாதத்திற்கு YouTube Premium இலவசமா? இது தெரியாம போச்சே!
Don't Miss
- News
ராசியில்லாத ராஜா.. உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியில் இருந்து உருட்டி விட்ட கண்டச்சனி,அஷ்டம குரு
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணி அறிவிப்பு.. கேப்டனாக ஹர்திக் நியமனம்
- Movies
அஜித் சார்.. டேட் கூட தெரியாதா?.. ரசிகருக்கு எழுதிய கடித வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
- Automobiles
ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?
- Finance
அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்ய வேண்டும்.. ஆப்பிள், கூகுள்-க்கு பறக்கும் கடிதம்..!
- Lifestyle
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
IRCTC தட்கல் முறையில் எப்படி உறுதியான டிக்கெட்டை பெறுவது? இது தெரிஞ்ச ஈஸியா டிக்கெட் வாங்கலாம்..
கடைசி நிமிடத்தில் ஒரு பயணத்தைத் திட்டமிட வேண்டியிருந்தால் என்ன நடக்கும்? உங்கள் பயணத் திட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய ரயில்களுக்கான டிக்கெட்டுகளும் இப்போது விற்றுத் தீர்ந்திருக்கும்! அதுவும் வார இறுதியில் உங்களின் திடீர் பயண திட்டம் திட்டமிடப்பட்டிருந்தால், நிலைமை இன்னும் மோசமாகத் தான் இருக்கும். ஆன்லைனில் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வது என்பது இன்னும் பலருக்கும் சிரமமான காரியமாக இருக்கிறது. சரியான நேரத்தில் வேகமாக டிக்கெட் முன்பதிவை நிறைவேற்றவில்லை என்றால் டிக்கெட்கள் கிடைப்பதில்லை.

IRCTC தட்கல் முறையில் எப்படி உறுதியான டிக்கெட்டை பெறுவது?
இந்திய ரயில்வேயின் இணையதளத்தில் இருக்கை கிடைப்பது குறித்த உங்கள் விசாரணை பெரும்பாலும் ஏமாற்றத்தையே விளைவிக்கும். இதுபோன்ற சிக்கலான சூழ்நிலை மற்றும் பயண அவசரக் காலங்களில் தட்கல் முன்பதிவு முறை பயனுள்ளதாக இருக்கும். கடைசி நிமிட பயணத்திற்கு, எந்த ரயிலிலும் ஏறக்குறைய 7-10 சதவீத இருக்கைகள் IRCTC தட்கல் முறையில் தான் இன்றைய காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் தின கொண்டாட்டம்- பெண்களுக்கு கட்டாயம் தேவைப்படும் கேஜெட்கள் பட்டியல் இதோ!

"503 Error" அறிவிப்பு காண்பிக்கப்படுகிறதா? என்ன காரணம்?
இருப்பினும், தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைக்காக நீங்கள் ஆயிரக்கணக்கான பயணிகளுடன் போட்டியிடுகிறீர்கள் என்பதே உண்மை. குறுகிய தட்கல் முன்பதிவு காலத்தில் IRCTC இணையதளம் பயனர்களால் நிரம்பி வழிகிறது. இதன் விளைவாக, பெரும்பாலான பயனர்களுக்கு "503 Error" அறிவிப்பு காண்பிக்கப்படுகிறது. இதனால், தட்கல் டிக்கெட்களை பெரும்பாலானோர் தவறவிடுகிறார்கள். இந்த சிக்கலை தவிர்ப்பதற்கான தீர்வு ஒன்று உள்ளது.

தட்கல் டிக்கெட்டுகளை வாங்குவதற்கான விரைவான வழி எது?
IRCTC தட்கல் டிக்கெட்டுகளை வாங்குவதற்கான விரைவான வழியை நீங்கள் தேடுகிறீர்களானால், இங்கே சில பயனுள்ள உதவிக்குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றைப் பின்பற்றுங்கள். முன்பதிவு செயல்முறையைத் துவங்குவதற்கு முன்னர் பயண மற்றும் பயணி விவரங்களைத் தயாராக வைத்திருப்பது சிறப்பானது. தட்கல் டிக்கெட் முன்பதிவு என்பது நேரத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால், பயணிகளின் பெயர்கள், பயணத் தேதிகள் மற்றும் பல உட்பட உங்களின் அனைத்துத் தகவல்களையும் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம்.

ஒரு பட்டியலை உருவாக்கவும்
IRCTC இணையதளத்தின் 'My Profile' பகுதிக்குச் சென்று, அனைத்து பயணிகளின் தகவல்களுடன் முதன்மை பட்டியலை உருவாக்கவும். இந்த முதன்மைப் பட்டியல் தகவலை நீங்கள் எந்த நேரத்திலும் உங்களுடைய முன்பதிவு செயல்முறைக்குப் பயன்படுத்தலாம் என்பது கவனிக்கத்தக்கது. நீங்கள் தட்கல் டிக்கெட் வாங்க விரும்பும் ஒவ்வொரு பயணத்திற்கும் ஒரு தனி 'பயணப் பட்டியலை' உருவாக்கவும். இந்த பட்டியலிலிருந்து விவரங்கள் முன்பதிவு செயல்பாட்டின் போது மீட்டெடுக்கலாம் என்பதனால் நேரம் சேமிக்கப்படுகிறது. சில நிமிடங்களில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய இது உங்களை அனுமதிக்கிறது.

நிலையக் குறியீடுகளைச் சரிபார்க்கவும்
பலர் செய்யும் பொதுவான தவறு இது. ஐஆர்சிடிசி தட்கல் முன்பதிவு அமர்வைத் தொடங்குவதற்கு முன், உங்களின் ஆதாரம் மற்றும் சேருமிட நிலையங்களைப் பற்றிய யோசனை உங்களுக்கு இருப்பது மட்டுமல்லாமல், அவற்றின் நிலையக் குறியீடுகளை நோட்பேட் கோப்பில் நகலெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஸ்கிரீன் ஷோவுக்குப் பிறகு நிலையக் குறியீடுகளைத் தேடினால், டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதனால், இதற்கும் முன்கூட்டியே தயாராக இருப்பது நல்லது.

பெர்த் விருப்பங்களை முடிவு செய்யுங்கள்
பின்வரும் கட்டத்தில் உங்கள் பெர்த் விருப்பத் தேர்வுகள் உங்களிடம் கேட்கப்படும். மேலும், அதைப் பற்றிச் சிந்திக்க உங்களுக்கு நேரம் இருக்காது. லோயர் பெர்த்தை தேர்வு செய்தால், அதிக பயனர் இருக்கும் நேரத்தில் டிக்கெட் கிடைக்காமல் போகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. செயல்முறையை எளிதாக்குவதற்கு பெர்த் விருப்பங்களை நீங்கள் தேர்வு செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி நேரத்தில் இருக்கை கிடைப்பதை மட்டும் நோக்கமாக கொண்டிருப்பது கைகொடுக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086