ஸ்மார்ட்போனின் சார்ஜிங் வேகத்தை அதிகரிக்க 7 எளிய வழிகள்.. இது பேட்டரி ஆயுளையும் பாதுகாக்கும்.. தெரிஞ்சுக்கோங்க

|

ஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவரும் சந்திக்கக்கூடிய மிக பொதுவான சிக்கலில் ஒன்று ஸ்மார்ட்போன் சார்ஜிங் வேகம் மற்றும் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுள். இப்போது வெளிவரும் பெரும்பாலான ஸ்மார்ட்போன் மாடல்களில் சார்ஜிங் வேகத்தை அதிகரிப்பதற்கான பாஸ்ட் சார்ஜிங் அம்சம் போன்ற பிரத்தியேக அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், நம்மூரில் ஏராளமானோர் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் இல்லாத சாதாரண சார்ஜிங் அம்சத்தில் இயங்கக் கூடிய போன்களை தான் சார்ஜ் செய்து பயன்படுத்துகிறார்கள்.

உங்கள் போனில் பாஸ்ட் சார்ஜிங் அம்சம் இல்லையென்றாலும் இதை செய்தால் சார்ஜிங் வேகம் அதிகமாகும்

உங்கள் போனில் பாஸ்ட் சார்ஜிங் அம்சம் இல்லையென்றாலும் இதை செய்தால் சார்ஜிங் வேகம் அதிகமாகும்

இப்படி உங்கள் ஸ்மார்ட்போனில் பாஸ்ட் சார்ஜிங் அம்சம் என்று ஒன்று இல்லை, எனது ஸ்மார்ட்போன் ஆமை வேகத்தில் மெதுவாக சார்ஜ் செய்யப்படுகிறது என்று கடுப்பாகும் நபர்கள் இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள். ஒரு வேலை, உங்கள் போனில் பாஸ்ட் சார்ஜிங் அம்சம் இருந்தாலும் கூட, உங்கள் போனை அதன் முழு வேகச் செயல்பாட்டில் இயக்கி சூப்பர் பாஸ்டாக சார்ஜிங் செய்யக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள டிப்ஸ்கள் உங்களுக்குப் பெரிதும் பயன்படும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். சார்ஜிங் வேகத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

இப்படி செய்தால் சார்ஜிங் வேகத்தை அதிகரிக்க முடியுமா?

இப்படி செய்தால் சார்ஜிங் வேகத்தை அதிகரிக்க முடியுமா?

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து சார்ஜ் செய்யும் போது ஏற்படக்கூடிய வரம்புகளை அதிகரித்து வருகிறார்கள். பெரிய பவர் பேட்டரிகளை மிக வேகமாக சார்ஜ் செய்வதற்குத் தேவையான மென்பொருள் மேம்படுத்தல்களை ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றது. இப்படி சார்ஜிங் வேகத்தைக் கணிசமாக அதிகரிக்கும் தொழில்நுட்பத்தை நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்து வந்தாலும் கூட, அதே வேளையில், சார்ஜிங் வேகத்தை மேம்படுத்தப் பயனர்கள் செய்யக்கூடிய சில சிறிய விஷயங்களும் உள்ளன.

திடீரென IRCTC ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விதியில் மாற்றம்: இதை செய்தால் டிக்கெட், இல்லையெனில் இருக்கை கிடையாதுதிடீரென IRCTC ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விதியில் மாற்றம்: இதை செய்தால் டிக்கெட், இல்லையெனில் இருக்கை கிடையாது

இந்த மிகச் சிறிய மாற்றங்கள் உங்கள் போனின் ஆயுளை அதிகரிக்கும்

இந்த மிகச் சிறிய மாற்றங்கள் உங்கள் போனின் ஆயுளை அதிகரிக்கும்

இந்த சில உன்னிப்பான விஷயங்களை நீங்கள் சரியாகச் செய்யும் பட்சத்தில், உங்கள் மொபைல் ஃபோனின் சார்ஜிங் வேகத்தை நீங்கள் கணிசமாக மேம்படுத்த முடியும் என்பதே உண்மை. இவையெல்லாம் மிகச் சிறிய மாற்றங்களாக இருந்தாலும் கூட, உங்களின் ஸ்மார்ட்போன் சார்ஜிங் வேகத்தை இது நிச்சயமாக அதிகரிக்கிறது என்பதை கவனத்தில்கொள்ளுங்கள். சரி, இப்போது உங்களின் ஸ்மார்ட்போன் சார்ஜிங் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழே உள்ள இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.

1. சார்ஜ் செய்யும் போது ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்

1. சார்ஜ் செய்யும் போது ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்

உங்கள் ஸ்மார்ட்போனின் சார்ஜிங் வேகத்தை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயமே இது தான். உங்கள் போனை சார்ஜ் செய்யும் போது, அதை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. உங்கள் போனிற்கு வரும் தொலைப்பேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பது அல்லது உங்கள் சாதனத்தை சார்ஜ் செய்யும் போது கேம்களை விளையாடுவது போன்ற செயல்கள் அதன் சார்ஜிங் அம்சத்தைச் சேதப்படுத்தும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். இது சார்ஜிங் வேகத்தையும் குறைக்கிறது, அதே நேரத்தில் பேட்டரி ஆயுளையும் குறைகிறது.

பூமியில் தண்ணீர் எப்படி உருவானது? சூரியன் தான் நமக்கு தண்ணீர் கொடுத்ததா? உண்மையை கட்டவிழ்த்த விஞ்ஞானிகள்..பூமியில் தண்ணீர் எப்படி உருவானது? சூரியன் தான் நமக்கு தண்ணீர் கொடுத்ததா? உண்மையை கட்டவிழ்த்த விஞ்ஞானிகள்..

2. லொகேஷன், வைஃபை மற்றும் புளூடூத்தை ON இல் உள்ளதா?

2. லொகேஷன், வைஃபை மற்றும் புளூடூத்தை ON இல் உள்ளதா?

உங்கள் ஸ்மார்ட்போனில் வைஃபை, புளூடூத் மற்றும் லொகேஷன் போன்ற அம்சங்களுடன் கூட பிற ஒத்த சேவைகள் குறிப்பிடத்தக்க அளவு பேட்டரியைப் பயன்படுத்துகின்றன. இந்த அம்சங்கள் எல்லாம் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள சார்ஜ்ஜை தொடர்ந்து பயன்படுத்துகின்றன, அவற்றை முடக்குவது உங்கள் சாதனத்தின் சார்ஜிங் வேகத்தை கணிசமாக மேம்படுத்தும் என்பதே உண்மை. இனி சார்ஜிங் செய்யும் நேரத்தில் லொகேஷன் மற்றும் ப்ளூடூத் போன்ற அம்சங்களை OFF இல் வைத்து சார்ஜிங் செய்து பாருங்கள், உங்கள் சார்ஜிங் வேகம் அதிகரிப்பதை நீங்களே காண்பீர்கள்.

3. ஸ்மார்ட்போனின் அசல் கேபிள் மற்றும் அடாப்டரைப் பயன்படுத்த வேண்டுமா?

3. ஸ்மார்ட்போனின் அசல் கேபிள் மற்றும் அடாப்டரைப் பயன்படுத்த வேண்டுமா?

எப்போதும் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜிங் செய்ய, உங்கள் போனுடன் வழங்கப்பட அல்லது உங்கள் ஸ்மார்ட்போன் நிறுவனத்திற்குச் சொந்தமான அசல் கேபிள் மற்றும் அடாப்டருடன் மட்டும் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் பழக்கத்தைப் பழகிக்கொள்ளுங்கள். இதுவே உங்கள் போனிற்கு ஆரோக்கியமானது என்று பரிந்துரைக்கப்படுகிறது. மற்ற பிராண்டின் சார்ஜரைப் பயன்படுத்துவது உங்கள் சாதனத்தின் பேட்டரியை சேதப்படுத்தும், மேலும் இது சார்ஜிங் வேகத்தையும் குறைத்து, உங்கள் போனையும் பாதிக்கிறது.

Google இல் இப்படி கூட சர்ச் செய்யலாமா? டாப் 10 டிப்ஸ்.. ஃபாஸ்டான சர்ச்சுக்கு இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..Google இல் இப்படி கூட சர்ச் செய்யலாமா? டாப் 10 டிப்ஸ்.. ஃபாஸ்டான சர்ச்சுக்கு இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

4. பின்னணி செயலாக்கப் பயன்பாடுகளை முடக்கம் செய்ய வேண்டுமா?

4. பின்னணி செயலாக்கப் பயன்பாடுகளை முடக்கம் செய்ய வேண்டுமா?

பின்னணிச் செயலாக்கப் பயன்பாடுகள், அதாவது உங்கள் ஸ்மார்ட்போனில் பேக்கிரவுண்டில் ரன் ஆகிக்கொண்டிருக்கும் ஆப்ஸ்களை நிறுத்தம் செய்ய வேண்டும். உங்கள் சாதனத்தின் பேட்டரியை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும் இவை பேக்கிரௌண்டில் தொடர்ந்து பயன்படுத்துகின்றன. பயன்பாட்டில் இல்லாத பயன்பாடுகளால் ஒரு குறிப்பிட்ட அளவு பேட்டரி பயன்படுத்தப்பட்டால், ஸ்மார்ட்போன் பொதுவாகவே மெதுவாகத் தான் சார்ஜ் செய்யப்படும். இந்தப் பின்னணிச் செயலாக்கப் பயன்பாடுகளை நிறுத்தினால் சார்ஜிங் வேகத்தை அதிகரிக்கலாம்.

5. ஏரோபிளேன் பயன்முறையைப் பயன்படுத்தினால் சார்ஜிங் வேகம் அதிகரிக்குமா?

5. ஏரோபிளேன் பயன்முறையைப் பயன்படுத்தினால் சார்ஜிங் வேகம் அதிகரிக்குமா?

உங்கள் ஸ்மார்ட்போனில் ஏரோபிளேன் மோடைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் சாதனத்தின் சார்ஜிங் வேகத்தைக் கணிசமாக அதிகரிக்க முடியும் என்பதே உண்மை. உங்கள் போனில் ஏரோபிளேன் மோடு ஆன் செய்யப்பட்ட உடன், உங்கள் சாதனத்தில் இயங்கிக்கொண்டிருந்த நெட்வொர்க், வைஃபை, லொகேஷன், ப்ளூடூத் போன்ற அம்சங்கள் ஒரே கிளிக்கில் ஆஃப் செய்யப்படுகிறது. இதன் மூலம் சில நொடியில் நெட்வொர்க்கிங் அம்சம் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டு, சார்ஜிங் வேகத்தை இது அதிகரிக்கிறது.

DOT திடீர் அதிரடி அறிவிப்பு: உங்ககிட்ட எத்தனை சிம் உள்ளது.. இதற்கு மேல் 'சிம்' இருந்தால் இணைப்பு துண்டிப்பு..DOT திடீர் அதிரடி அறிவிப்பு: உங்ககிட்ட எத்தனை சிம் உள்ளது.. இதற்கு மேல் 'சிம்' இருந்தால் இணைப்பு துண்டிப்பு..

6. உடனுக்குடன் அல்லது விரைவான ரீசார்ஜ்களைத் தவிர்ப்பது நல்லதா?

6. உடனுக்குடன் அல்லது விரைவான ரீசார்ஜ்களைத் தவிர்ப்பது நல்லதா?

நீங்கள் பயன்படுத்தும் எந்த ஸ்மார்ட்போனாக இருந்தாலும் அதில் உள்ள பேட்டரி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சார்ஜிங் சுழற்சிகளுடன் மட்டுமே வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த சார்ஜிங் சுழற்சி முடியும் போது உங்கள் பேட்டரியின் ஆயுள் குறைகிறது. சிறிய இடைவெளியில் உங்கள் போனை மீண்டும் - மீண்டும் சார்ஜிங் செய்யும் பழக்கத்தைக் கைவிட்டுவிடுங்கள். இது பேட்டரியின் ஒட்டுமொத்த ஆயுளைப் பாதிக்கிறது. மேலும், இது நீண்ட காலத்திற்கு சார்ஜிங் வேகத்தையும் குறைக்கிறது.

7. ஒரே இரவில் சார்ஜ் செய்வதைத் தவிர்ப்பது நல்லது

7. ஒரே இரவில் சார்ஜ் செய்வதைத் தவிர்ப்பது நல்லது

நம்மில் பலர் நமது ஸ்மார்ட்போன்களை ஒரே இரவில் சார்ஜ் செய்யப் பழகிவிட்டோம், ஏனெனில் இது மிகவும் வசதியான வழியாகும். மேலும், இது சாதனம் குறைவாகப் பயன்படுத்தப்படும் நேரமாகவும் இருக்கிறது. ஒரே இரவில் சார்ஜ் செய்வது ஸ்மார்ட்போனை ஒரு மாதம் அல்லது வாரத்தில் சேதப்படுத்தாது. ஆனால், நீண்ட காலத்திற்கு இதே பழக்கத்தை வைத்திருந்தால் அது பேட்டரியை சேதப்படுத்தும் மற்றும் சார்ஜிங் வேகத்தைக் குறைக்கும். இந்த சிறிய குறிப்புகளை எல்லாம் நீங்கள் சார்ஜிங் செய்யும் போது கவனித்தால் உங்கள் ஸ்மார்ட்போனின் சார்ஜிங் வேகம் அதிகரிக்கும் மற்றும் பேட்டரி ஆயுள் சேதப்படாமல் பாதுகாக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Follow These 7 Simple Tips To Boost Your Smartphones Charging Speed : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X